ஆயிரத்தில் ஒருவன் 2 படத்தில் நடிக்க கூப்பிட்டா போகமாட்டேன் – ஆண்டிரியா ஓபன் டாக்

Andrea talks about working experience with Selvaraghavan and Aayirathil Oruvan 2 movie: நடிகை ஆண்ட்ரியா சமீபத்தில் பேசிய போது செல்வராகவன் உடன் பணிபுரியும் அனுபவம் மற்றும் ஆயிரத்தில் ஒருவன் பாகம் இரண்டில் நடிப்பது குறித்து வெளிப்படையாக பேசியது வைரலாகி வருகின்றது.

ஆயிரத்தில் ஒருவன் 2 படத்தில் நடிக்க கூப்பிட்டா போகமாட்டேன் - ஆண்டிரியா ஓபன் டாக்

ஆயிரத்தில் ஒருவன்

Published: 

01 Apr 2026 13:24 PM

 IST

தமிழ் சினிமாவில் கடந்த 2010-ம் ஆண்டு ஜனவரி மாதம் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ஆயிரத்தில் ஒருவன். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. மேலும் இந்தப் படத்தினை இயக்குநர் செல்வராகவன் எழுதி இயக்கி இருந்த நிலையில் நடிகர் கார்த்தி நாயகனாக நடித்து இருந்தார். இவருடன் இணைந்து நடிகர்கள் ரீமாசென், ஆண்ட்ரியா மற்றும் பார்த்திபன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் பிரதாப் கே. போத்தன், அழகம் பெருமாள், கிரேன் மனோகர், வி.நம்பிராஜன், அபிநயா ஆகியோர் நடித்து இருந்தனர். மேலும் இந்தப் படம் சோழர்கள் மற்றும் பாண்டிய மன்னர்கள் இடையே இருந்த பகையை மையகா வைத்து உருவாக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தப் படத்தினை பிரபல தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் வேலி கார்ப்பரேஷன் சார்பாக தயாரிப்பாளர்கள் ஆர். ரவீந்திரன் மற்றும் செல்வ ராகவன் ஆகியோர் இணைந்து தயாரித்து இருந்தனர். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்து இருந்த நிலையில் படத்தைப் போல பாடல்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் குறித்து ஆண்ட்ரியா பேசியது வைரலாகி வருகின்றது.

செல்வராகவன் கூட வேலை செய்வது மிகவும் கடினமான ஒன்று:

இந்த நிலையில் நடிகை ஆண்ட்ரியா சமீபத்தில் விழா ஒன்றில் கலந்துகொண்ட போது உங்களை ஆயிரத்தில் ஒருவன் 2 படத்தில் எதிர்பார்க்கலாமா? செல்வராவன் பேசினாரா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ஆண்ட்ரியா, என்னிடம் இருந்து ‘ஆயிரத்தில் ஒருவன் பாகம்-2’ படத்தை எதிர்பார்க்காதீர்கள். அந்தப் படம் வேண்டுமானால் உருவாகட்டும். ஆனால் அதில் நான் ஒரு பகுதியாக இருக்க மாட்டேன். ஏனெனில், செல்வராகவன் சாருடன் பணியாற்றுவது மிகவும் கடினமாக இருந்தது. முதல் பாகத்திற்காக நாங்கள் 200 நாட்கள் படப்பிடிப்பு நடத்தினோம்; ஆனால் ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்திற்குப் பிறகு, இனி எந்தப் படமோ அல்லது எந்தக் கதாபாத்திரமோ வந்தாலும், அதை என்னால் மிக எளிதாகச் செய்துவிட முடியும் என்றும் ஆண்ட்ரியா தெரிவித்து இருந்தார்.

Also Read… அட்லி, லோகேஷ் படங்களுக்கு பிறகு அல்லு அர்ஜுன் யாருடன் கூட்டணி வைக்கிறார்? வைரலாகும் தகவல்

இணையத்தில் வைரலாகும் ஆண்ட்ரியாவின் பேச்சு:

Also Read… kayadu Lohar: ஏன் தமிழில் பேசவில்லை? கொஞ்சம் டைம் கொடுங்க – கயாடு லோஹர் சொன்ன பதில்!

Follow Us
தன்னை கடித்த பாம்பை தைரியமாக பிடித்த முதியவர்
கேர்ள் ஃபிரெண்டுடன் லூட்டி அடிக்கும் குரங்கு - வைரல் வீடியோ
தன் உயிரையும் பொருட்படுத்தாமல் நாயை காப்பாற்றிய பெண்.. இணையத்தில் வைரல்..
தாயின் பக்கெட் லிஸ்டை நிறைவேற்றிய மகன்... இணையத்தில் வைரல்..