வெற்றிமாறன் ஒரு செயின் ஸ்மோக்கர்.. அந்த படத்தை தவிர்த்த காரணம் இதுதான் – ஆண்ட்ரியா ஜெரெமையா!
Andrea Jeremiah About Vetrimaaran: தென்னிந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவராக இருந்துவருபவர் ஆண்ட்ரியா ஜெரெமையா. இவர் முன்னதாக நேர்காணல் ஒன்றில் இயக்குநர் வெற்றிமாறனின் முதல் படம் மற்றும் அவருடன் முதலில் நடிப்பதற்கு தவிர்த்த காரணம் குறித்து ஓபனாக பேசியுள்ளார். அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

வெற்றி மாறன் மற்றும் ஆண்ட்ரியா
தமிழ் சினிமாவில் பிரபல பாடகி மற்றும் நடிகையாக இருந்துவருபவர் ஆண்ட்ரியா ஜெரெமையா (Andrea Jeremiah). இவர் ஹோடர்ந்து தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் நிற மொழி படங்களில் கதாநாயகியாகவும் முக்கிய வேடங்களிலும் நடித்துவருகிறார். இவரின் நடிப்பில் தமிழ் சினிமாவில் தொடர்ந்து திரைப்படங்கள் வெளியாகிவருகிறது. அந்த வகையில் இவருக்கு முதல் திரைப்படமாக அமைந்திருந்தது “பச்சைக்கிளி முத்துச்சரம்” (Pachaikili Muthucharam) என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இந்த படத்தில் நடிகர் சரத்குமாருடன் இணைந்து நடித்திருந்தார். இந்த படமானது இவருக்கு நல்ல வரவேற்பையே கொடுத்திருந்தது. இந்நிலையில் இந்த படத்திற்கு அடுத்தாக இவர் மலையாளம் மொழியிலும் படம் நடிக்க தொடங்கியிருந்தார். அந்த வகையில் நடிகர் ஃபகத் ஃபாசிலுடன் (Fahadh Fazil) இவர் இணைந்து நடித்திருந்த படம்தான் அன்னையும் ரசூலும். இந்த படத்தின் மூலம் இவருக்கு மலையாளத்திலும் சூப்பர் வரவேற்ப்பு கிடைத்திருந்தது.
தொடர்ந்து, தமிழ் மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் நடித்துவந்தார் இவர். அந்த வகையில் இவர் இயக்குநர் வெற்றிமாறனின் (Vetrimaaran) படங்களிலும் நடித்துள்ளார். வடசென்னை படத்தில் இவரின் கதாபாத்திரம் தற்போதுவரியிலும் பேசப்பட்டுவருகிறது. இந்நிலையில் முன்னதாக நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகை ஆண்ட்ரியா ஜெரெமையா, வெற்றிமாறனின் குணம் மற்றும் அவரின் முதல் படம் பற்றியும் ஓபனாக பேசியுள்ளார்.
இதையும் படிங்க: 13 வருடத்திற்கு பின் தமிழில் ரீ எண்டரி.. ஜெயிலர் 2 படத்தில் இணையும் பிரபல நடிகை?
வெற்றிமாறன் குறித்து வெளிப்படையாக பேசிய நடிகை ஆண்ட்ரியா ஜெரெமையா:
அந்த நேர்காணலில் நடிகை ஆண்ட்ரியா ஜெரெமையா, “வெற்றிமாறன் சாருக்கு பொல்லாதவன் படத்திற்கு முன் இன்னொரு ஸ்கிரிப்ட் இருந்தது. அதுதான் உதயன் NH4. இந்த படத்தைதான் அவர் முதலில் இயக்கவிருந்தார். அந்த படத்தில் நடிப்பதற்காக என்னை அழைத்திருந்தார்கள், மிகவும் நகைச்சுவையான கதைதான். அந்த படத்திற்காக வெற்றிமாறன் சாரை நேரில் சந்திப்பதற்கு சென்றிருந்தேன். அந்த நேரத்தில் அவர் செயின் ஸ்மோக்கர். எப்போது பார்த்தாலும் புகைபிடித்தபடியே இருப்பாரு.
இதையும் படிங்க: அஜித் கூட அந்த படத்தில் நான் தான் நடிச்சிருக்கணும்.. நடிக்காமல் போனதுக்கு காரணம் இதுதான் – மீனா!
இப்ப அவரு விட்டுட்டாரு, ஆனால் அப்போது அவ்வ்ளவு புகைபிடிப்பாரு. அவர் புகைபிடிக்கும்போது அவர் விடும் புகையின் காரணமாக என்னுடைய கண்ணில் இருந்து கண்ணீரே வர தொடங்கியது. அப்போது நான் அவரிடம், நான் வீட்டிற்கு போகவேண்டும் என கூறிவிட்டு, அந்த இடத்திலிருந்து ஓடியே விட்டேன்” என அவர் அதில் வெற்றிமாறன் குறித்து வெளிப்படையாக பேசியிருந்தார். இது தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.
மாஸ்க் திரைப்படம் குறித்து நடிகை ஆண்ட்ரியா ஜெரெமையா வெளியிட்ட எக்ஸ் பதிவு :
When masks fall, monsters rise ⬆️
Presenting the trailer of #MASK 🎭
The madness begins in theatres on the 21st of November, level up for a crazy ride!#MaskingNov21 @BlackMadras1 @Kavin_m_0431 @andrea_jeremiah @tsmgo_official @vikarnan16… pic.twitter.com/Ni2qXmxLEe
— Andrea Jeremiah (@andrea_jeremiah) November 9, 2025
நடிகை ஆண்ட்ரியா ஜெரெமையாவின் நடிப்பிலும், இயக்குநர் வெற்றிமாறனின் தயாரிப்பிலும் வெளியாகி காத்திருக்கும் படம்தான் மாஸ்க். இப்படத்தில் கவின் ஹீரோவாக நடிக்க, நடிகை ஆண்ட்ரியா ஜெரெமையா வில்லன் வேடத்தில் நடித்துள்ளார். இப்படம் வரும் 2025 நவம்பர் 21ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.