கரூரில் நடந்த விபத்து பெருந்துயர் அளிக்கிறது – நடிகை ஆண்ட்ரியா ஜெரெமையா

Andrea Jeremiah: தமிழ் சினிமாவில் பாடகி மற்றும் நடிகை என பலதரப்பட்ட விசயங்களை செய்து வருபவர் நடிகை ஆண்ட்ரியா ஜெரெமையா. இவர் தற்போது படங்களில் பிசியாக நடித்து வரும் நிலையில் கரூரில் நடைப்பெற்ற உயிரிழப்பிற்கு இரங்கல் தெரிவித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கரூரில் நடந்த விபத்து பெருந்துயர் அளிக்கிறது - நடிகை ஆண்ட்ரியா ஜெரெமையா

ஆண்ட்ரியா ஜெரெமையா

Published: 

29 Sep 2025 17:40 PM

 IST

தமிழ் சினிமாவில் பாடகி, பின்னணி குரல் கொடுப்பவர் மற்றும் நடிகை என பன்முகத் தன்மைக் கொண்டவராக வலம் வருகிறார் நடிகை ஆண்ட்ரியா ஜெரெமையா (Andrea Jeremiah). இவர் கடந்த 2007-ம் ஆண்டு வெளியான பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகம் ஆனார். இந்தப் படத்தில் நடிகை ஆண்ட்ரியா ஜெரெமையாவின் நடிப்பு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் இவரது நடிப்பில் வெளியான ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா, விஸ்வரூபம், அரண்மனை, வலியவன், உத்தமவில்லன், இது நம்ம ஆளு, தரமணி, துப்பரிவாளன், அவள், விஸ்வரூபம் 2, வட சென்னை, புத்தம் புது காலை, மாஸ்டர், அரண்மனை 2, வட்டம், அனல் மேலே பனிதுளி ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

அதன்படி நடிகை ஆண்ட்ரியா ஜெரெமையா நடிப்பில் வெளியான அனைத்துப் படங்களும் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இவர் தமிழ் சினிமாவில் மட்டும் இன்றி தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி மொழிகளிலும் தொடர்ந்து படங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கரூரில் நடந்த விபத்து பெருந்துயர் அளிக்கிறது:

இந்த நிலையில் தற்போது நடிகை ஆண்ட்ரியா மாஸ்க் என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் நடிகர் கவின் முன்னணி வேடத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. இந்த நிலையில் இவர் தற்போது வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

அந்தப் பதிவில் நடிகை ஆண்ட்ரியா கூறியுள்ளதாவது, கரூரில் நடத்த விபத்தில் குழந்தைகள் பெண்கள் உள்ளிட்டோர் உயிரிழந்தது பெருந்துயர் அளிக்கிறது. உறவுகளை இழந்து வாடும் அவர்களது உற்றார் உறவினர்களின் துயரத்தில் பங்கெடுத்து கொள்வதோடு, படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வரும் அனைவரும் மிக விரைவில் முழுவதும் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்று இயற்கையை வேண்டுகிறோம் என்று தெரிவித்துள்ளார்.

Also Read… Kayadu Lohar: நான் சிலம்பரசனுடன் நடிக்கவிருந்த முதல் படம் அதுதான் – கயாடு லோஹர் சொன்ன விஷயம்!

நடிகை ஆண்ட்ரியா ஜெரோமையா வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… Suriya: ஷூட்டிங் இல்லாதபோது எனது அன்றாட வாழ்க்கை இப்படிதான் இருக்கும் – சூர்யா ஓபன் டாக்!