Raaka Movie: அல்லு அர்ஜுனின் ராக்கா படத்தின் ‘மேக் வே ஃபார் தி கிங்’ தீம் பாடல் வெளியானது!
Way For The King Theme Song: தென்னிந்திய சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர் அல்லு அர்ஜுன். இவர் மற்றும் இயக்குநர் அட்லீயின் கூட்டணியில் மியாட் பிரம்மாண்டமாக தயாராகிவரும் படம்தான் ராக்கா. இப்படத்திற்கு இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைத்திருக்கும் நிலையில், இதன் தீம் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

மேக் வே ஃபார் தி கிங் தீம் பாடல்
டோலிவுட் சினிமாவில் முன்னணி நட்சத்திர நடிகராக இருந்துவருபவர் அல்லு அர்ஜுன் (Allu Arjun). இவரின் நடிப்பில் இறுதியாக புஷ்பா 2 (Pushpa 2) படமானது வெளியாகியிருந்த நிலையில், கிட்டத்தட்ட ரூ 1800 கோடிகளுக்கு மேல் வசூலித்து சாதனை படைத்திருந்தது. இப்படத்தை அடுத்ததாக இவர் இணைந்த புதுப்படம்தான் AA22xA06. இப்படத்தை தமிழ் இயக்குநர் அட்லீ குமார் (Atlee Kumar)இயக்க, அல்லு அர்ஜுன் லீட் கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படத்தின் டைட்டில் கடந்த 2026 ஏப்ரல் 08ம் தேதியில் அல்லு அர்ஜுனின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகியிருந்தது. அதன்படி AA22xA06 என்று அழைக்கப்பட்டுவந்த இப்படத்திற்கு படக்குழு, “ராக்கா” (Raaka) என டைட்டில் வைத்துள்ளது. இப்படமானது தமிழ், தெலுங்கு, இந்தி மலையாளம் உட்பட மொத்தம் 8 மொழிகளில் தயாராகிவருகிறது. அந்த வகையில் இப்படத்தின் முதல் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தது.
இப்படத்திற்கு தமிழ் இளம் இசையமைப்பாளர் சாய் அப்யங்கர் (Sai Abhyankkar) இசையமைத்துவருகிறார். இவர் இசையமைக்கும் முதல் பிரம்மாண்ட பட்ஜெட் படமாக ராக்கா படம் அமைந்துள்ளது. அந்த வகையில் இப்படத்திலிருந்து “மேக் வே ஃபார் தி கிங்” (Make Way For The King ) என்ற தீம் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.
இதையும் படிங்க: லவ் இன்சூரன்ஸ் கம்பெனி முதல் TN 2026 முதல்… நாளை எந்தப் படத்தை முதலில் பார்ப்பீங்க
அல்லு அர்ஜுனின் ராக்கா படத்தின் தீம் பாடலை வெளியிட்ட படக்குழு:
It’s time for #Raaka reign 🔥 #MakeWayForTheKing theme from #Raaka ⚔️⚡
🎵 https://t.co/4qkH6tu0jI@alluarjun @Atlee_dir @deepikapadukone @SaiAbhyankkar pic.twitter.com/MqfB4Z67Ws
— Sun Pictures (@sunpictures) April 9, 2026
இந்த ராக்கா திரைப்படத்தில் அல்லு அர்ஜுன் கதாநாயகனாக நடிக்க, அவருடன் பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் நடித்துவருகிறார். இயக்குநர் அதிலே இயக்கும் முதல் பிரம்மாண்ட பட்ஜெட் படமாக இந்த ராக்கா படம் கருதப்படுகிறது. இவர் இறுதியாக இந்தியில் இயக்கியிருந்த ஜவான் படமானது ரூ 1000 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து வெற்றியடைந்தது. அதுபோலவே இந்த ராக்கா படமும் பிரம்மாண்டமாக வெளியாகி வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: உண்மையான சம்பவ கதையில்.. ஆர்யா நடித்துள்ள ஸ்பை திரில்லர் மிஸ்டர் எக்ஸ் பட ட்ரெய்லர் வெளியானது!
இந்த படத்தில் நடிகர்கள் யோகி பாபு, ரம்யா கிருஷ்ணன், மிருணாள் தாக்கூர், ராஷ்மிகா மந்தனா மற்றும் ஜான்வி கபூர் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் நடித்தவருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து படக்குழு இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை. அந்த வகையில் இப்படமானது வரும் 2027ம் ஆண்டின் தொடக்கத்தில் வெளியாகும் என எதிர்பாட்க்கப்படுகிறது. இப்படத்தின் ஷூட்டிங் இன்னும் நடைபெற்றுவரும் நிலையில், நிச்சயம் மக்கள் மத்தியில் வரவேற்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.