தூக்கி விடனும்னு அவசியம் இல்லை… பின்னுக்கு தள்ளாமல் இருந்தால் சரி – இயக்குநர்கள் குறித்து அஜித்குமார் ஓபன் டாக்

கோலிவுட் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர் அஜித் குமார் தொடர்ந்து படங்களில் நடிப்பது மட்டும் இன்றி தனது கார் ரேஸ் பணிகளிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் இவர் அளித்தப் பேட்டி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

தூக்கி விடனும்னு அவசியம் இல்லை... பின்னுக்கு தள்ளாமல் இருந்தால் சரி - இயக்குநர்கள் குறித்து அஜித்குமார் ஓபன் டாக்

அஜித்குமார்

Published: 

01 Nov 2025 11:46 AM

 IST

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம வருபவர் நடிகர் அஜித் குமார் (Ajith Kumar). இவர் சினிமாவில் தனது ஆரம்ப காலகட்டத்தில் பேட்டிகள் கொடுப்பது பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வது என்று இருந்தாலும் ஒரு கட்டத்தில் அதனை அனைத்தையும் நிறுத்திவிட்டார். அஜித்தை மக்கள் திரையில் மட்டுமே பார்த்து வந்தனர். இப்படி இருந்த நடிகர் அஜித் குமார் தற்போது தனது ரேஸிங்கில் அதிகம் கவனம் செலுத்தி வரும் நிலையில் கடந்த சில மாதங்களாக மக்களை சந்திப்பது, செய்தி நிறுவனங்களுக்கு பேட்டி அளிப்பது என்று தொடர்ந்து செய்து வருகிறார். அதன்படி பல ஆண்டுகளாக பொது வெளியில் பேசாமல் இருந்த நடிகர் அஜித் குமார் தற்போது தொடர்ந்து பேட்டிகளை அளித்து வருவது அவரது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பேட்டியில் நடிகர் அஜித் குமார் பேசியதும் தொடர்ந்து இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இந்த நிலையில் நடிகர் அஜித் குமார் சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் தனது சினிமா வாழ்க்கை குறித்தும் சொந்த வாழ்க்கை குறித்தும் பல விசயங்களை வெளிப்படையாக பேசியுள்ளார். அதில் தனது படங்களை இயக்கும் இயக்குநர்கள் குறித்தும் தனது படங்கள் குறித்தும் நடிகர் அஜித் குமார் வெளிப்படையாக பேசியது தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

தூக்கி விட வேண்டாம்… பின்னுக்கு தள்ளாமல் இருந்தால் சரி:

அந்தப் பேட்டியில் நடிகர் அஜித் குமார் பேசியதாவது, நான் எல்லா படங்களையும் முதல் படமாகவே பார்க்கிறேன். எனக்கு பிளாக்பஸ்டர் படம் வந்தாலும், அதை ஒதுக்கி வைத்துவிட்டேன். இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் 120 நாட்கள் கால்ஷீட் கேட்டால், “நான் என்னுடைய 33 வருடங்கள் முழுவதையும் கொடுத்துவிடுகிறேன். நீங்கள் என்னை அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டியதில்லை, ஆனால் என்னை பின்னுக்குத் தள்ளாதீர்கள்” என்று நான் அவர்களிடம் கூறுவேன் என்றும் அந்தப் பேட்டியில் நடிகர் அஜித் குமார் தெரிவித்துள்ளார். இது தற்போது வைரலாகி வருகின்றது.

Also Read… ஜெயிலர் 2 படத்தின் மூலம் காமெடியில் ரீ என்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகர்

இணையத்தில் கவனம் பெறும் நடிகர் அஜித் குமாரின் பேச்சு:

Also Read… லோகா முதல் மதுரம் ஜீவாமிருதபிந்து வரை… இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் மலையாளப் படங்கள்!