Ajith Kumar: என்றுமே நான் விஜய்க்கு நல்லதே நினைத்திருக்கிறேன்.. எனது பேட்டிகளை தவறாக சித்தரிப்பாதை நிறுத்துங்கள்- அஜித் குமார்!
Ajith Kumar Clarifies Vijay Stance: தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர் அஜித் குமார். இவர் சமீபத்தில் ஆங்கில பத்திரிக்கை ஒன்றில் பேட்டியளித்திருந்தார். அதில் அவர் தளபதி விஜய்யை பற்றி தவறாக கூறியதாக வீடியோக்கள் வைரலான நிலையில், அதற்கு அஜித் விளக்கம் கொடுத்துள்ளார்.

தளபதி விஜய் மற்றும் அஜித்குமார்
நடிகர் அஜித் குமாரின் (Ajith Kumar) நடிப்பில் தமிழ் சினிமாவில் தொடர்ந்து திரைப்படங்கள் வெளியாகிவருகிறது. அந்த வகையில் இவரின் நடிப்பில் மட்டுமே இந்த 2025ம் வருடத்தில் மட்டும் சுமார் 2 படங்கள் வெளியாகியிருந்தது. அதில் முதலில் வெளியான விடாமுயற்சி (Vidaamuyarchi) படம் அந்த அளவிற்கு வரவேற்பை பெறாவிட்டாலும், 2வது வெளியான குட் பேட் அக்லி (Good Bad Ugly) படமானது சூப்பர் ஹிட் வெற்றியை பெற்றிருந்தது. உலகளாவிய வசூலில் சுமார் ரூ 200 கோடிகளுக்கு மேல் வசூல் செய்திருந்தது. இந்த படத்தின் ஷூட்டிங்கை முடித்துவிட்டு அஜித் குமார் தனது கார் ரேஸ் போட்டிகளில் பங்கேற்று வருகிறார். கிட்டத்தட்ட ஒருவருட காலமாக கார் ரேஸ் (Car Race) போட்டிகளில் பங்குபெற்று வருகிறார். அந்த வகையில் இதுவரை நடைபெற்ற 4 பந்தயத்தில் 3 முறை 3வது இடத்தையும் , ஒருமுறை 2வது இடத்தையும் அஜித் குமாரின் அணி பிடித்திருந்தது. அந்த வகையில் தற்போது மீண்டும் கார் ரேஸ் போட்டிகளுக்கு அஜித் குமார் தயாராகிவருகிறார்.
அந்த வகையில் அண்மையில் ஆங்கில பத்திரிக்கை ஒன்றில் அஜித் குமார் பேட்டி அளித்திருந்த நிலையில், அதில் அஜித் குமார் தளபதி விஜய் (Thalapathy Vijay) குறித்து தவறாக பேசியது போன்று வீடியோக்கள் சித்தரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து நடிகர் அஜித் குமார் பேசியுள்ளார். அதில் அவர், “என்றுமே நான் விஜய்க்கு நல்லதே நினைத்திருக்கிறேன், தவறாக சித்தரிப்பதை நிறுத்துங்கள்” என அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: போஸ்டர் அடி அண்ணே ரெடி.. தளபதி விஜய்யின் ஜன நாயகன் பட முதல் பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
தளபதி விஜய் குறித்து வெளிப்படையாக பேசிய அஜித் குமார் :
சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் அஜித் குமார், “எனது பேட்டிகளை விஜய்க்கு எதிராக சித்தரிப்பவர்கள், அமைதியாக இருப்பது நல்லது. நான் என்றுமே விஜய்க்கு நல்லதுதான் நினைத்திருக்கிறேன், வாழ்த்தியிருக்கிறேன். மேலும் அனைவரும் அவரவர் குடும்பத்துடன் சந்தோசமாக வாழ்வதற்கு நான் வாழ்த்துகிறேன். இந்நிலையில், இதற்கிடையில் என்னுடைய பூர்வீகம் அடிக்கடி கேள்விக்குள்ளாக்கப்படுகிறது. மேலும் என்னை பிடிக்காதவர் சிலபேர் நான் வேற்று மொழிக்காரன் என்றே கூறிவருகிறார்கள். ஒரு நாள் வரும், அன்று என்னை அவ்வாறு அழைத்தவர்கள் என்னை தமிழன் என்று கூறுவார்கள்.
இதையும் படிங்க: D 54 படப்பிடிப்பில் நடிகர் தனுஷ்… இணையத்தில் வைரலாகும் வீடியோ!
இணையத்தில் வைரலாகும் விஜய் குறித்து அஜித் பேசிய பதிவு :
“Some people are portraying my interview as being against #Vijay, but that’s not true. I’ve always thought well of Vijay and wished him the best ❤️🫂”
— #AjithKumar
https://t.co/jcJho0PUIQ— Ayyappan (@Ayyappan_1504) November 6, 2025
இந்த கார் ரேஸ் பந்தயத்தில் சாதித்து, இந்த மாநிலத்திற்கும், இந்த நாட்டிற்கும் பெருமை சேர்ப்பேன் என நம்புகிறேன். இதற்காக எனது உடலையும் , ஆன்மாவையும் அர்ப்பணிக்கிறேன். எனது தாய் நாட்டிற்கு நான் செய்யும் இந்த பணியில் எனது உயிரே போனாலும் பரவாயில்லை. ரசிகர்களாகிய உங்களின் அன்பு ஆதரவு மற்றும் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி “என அந்த நேர்காணலில் அவர் வெளிப்படையாக கூறியுள்ளார். இந்நிலையில் இது தொடர்பான வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் தீயாக பரவி வருகிறது.