Ajith Kumar: கார் ரேஸ் போட்டிகளில் அஜித் குமார் தீவிரம் – தள்ளிபோகிறதா ‘AK64’ பட ஷூட்டிங்?

AK64 Movie Update: நடிகர் அஜித் குமாரின் நடிப்பில் இறுதியாக வெளியான படம் குட் பேட் அக்லி. இந்த படத்தை தொடர்ந்து, அடுத்த படத்திலும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனுடன் இணையவுள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்குவதாக கூறப்பட்டநிலையில், தற்போது இப்படத்தின் ஷூட்டிங் தள்ளிப்போவதாக இணையத்தில் தகவல்கள் வைரலாகிவருகிறது.

Ajith Kumar: கார் ரேஸ் போட்டிகளில் அஜித் குமார் தீவிரம் - தள்ளிபோகிறதா AK64 பட ஷூட்டிங்?

அஜித் குமார் மற்றும் ஆதிக் ரவிச்சந்திரன்

Published: 

06 Oct 2025 17:51 PM

 IST

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகர் மற்றும் கார் ரேஸராக இருந்து வருபவர் அஜித் குமார் (Ajith Kumar). இவரின் நடிப்பிலும் தொடர்ந்து தமிழ் மொழியில் படங்கள் வெளியாகிவரும் நிலையில், கார் ரேஸ் (Car Race) போட்டிகளிலும் ஆர்வம் கட்டிவருகிறார். கடந்த 2024ம் ஆண்டு இறுதி முதல் கார் ரேஸ் பயிற்சியில் ஈடுபட்டுவந்த அஜித் குமார், இதுவரை உலகநாடுகளில் நடந்த 4 போட்டிகளில் இந்தியாவின் சார்பாக கலந்துகொண்டு வெற்றிபெற்றிருக்கிறார். அந்த விதத்தில் கிட்டத்தட்ட 1 ஆண்டுகளுக்கும் மேல் எந்த படங்களிலும் நடிக்காமல் முழுமையாக கார் ரேஸில் கவனம் செலுத்திவருகிறார் அஜித் குமார். இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் குட் பேட் அக்லி (Good Bad Ugly).

இந்த படத்தை இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் (Adhik Ravichandran) இயக்கியிருந்த நிலையில், தொடர்ந்து அடுத்த படமான AK64 படத்தையும் இவர்தான் இயக்கவுள்ளார். இந்நிலையில் இணையத்தில் தகவல் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. அஜித் குமாரின் AK64 படத்தின் ஷூட்டிங் வரும் 2025 நவம்பரில் ஆரம்பமாகவுவதாக கூறப்பட்ட நிலையில், மேலும் இப்படத்தின் ஷூட்டிங் அடுத்த 2026ம் ஆண்டில் தொடங்குவதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க : பாலிவுட் சினிமாவில் களமிறங்கும் சிவகார்த்திகேயன் பட இயக்குநர்!

தள்ளிப்போகும் அஜித் குமரன் AK64 திரைப்படத்தின் ஷூட்டிங் :

நடிகர் அஜித் குமார் தற்போது கார் ரேஸ் போட்டியில் தீவிரமாக இருந்து வருகிறார். இவர் இந்தியாவின் சார்பாக பல்வேறு நாடுகளில் நடைவுபெற்றும் கார் ரேஸ் போட்டிகளில் தனது அணியுடன் பங்கு பெற்றுவருகிறார். மேலும் அஜித் தனது அணியுடன் ஆசிய லீ மான்ஸ் போட்டியிலும் கலந்துகொள்ளவுள்ளனர். இந்நிலையில் இதன் காரணமாக தற்போது அஜித்தின் AK64 படத்தின் ஷூட்டிங் தள்ளிப்போவதாக தகவல்கள் வைரலாகிவருகிறது .

இதையும் படிங்க : கரூர் சோகம்.. தளபதி விஜய்யின் ஜன நாயகன் பட பர்ஸ்ட் சிங்கிள் ஒத்திவைப்பா?

இந்த கார் ரேஸ் போட்டி வரும் 2026ம் ஆண்டு பிப்ரவரி வரை நீட்டிக்கும் நிலையில், நடிகர் அஜித்தின் 64வது படத்தின் ஷூட்டிங் 2026 பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் தொடங்குவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் இந்த AK64 படமானது 2026ம் ஆண்டு இறுதியில்தான் வெளியாகும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அஜித் குமாரின் ரேஸிங் குழு இறுதியாக வெளியிட்ட எக்ஸ் பதிவு :

நடிகர் அஜித் குமாரின் AK64 படத்தை ரோமியோ பிக்ச்சர்ஸ் நிறுவனத்தின் கீழ் தயாரிப்பாளர் ராகுல் தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இசையமைப்பாளர் அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கவுள்ளாராம். இதில் அஜித் குமாருடன் நடிகைகள் ஸ்ரீலீலா, ஸ்வாசிகா மற்றும் அஞ்சலி உட்பட பல்வேறு பிரபலங்களும் இணைந்து நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.