Ajith Kumar: கார் ரேஸிலும் சினிமாவை விட்டுக்கொடுக்காத அஜித்.. வெளியான நியூ ரேஸ் கார் லோகோ!
Ajith Kumar Racing Car Logo : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராகவும், சிறந்த கார் ரேஸராகவும் இருந்து வருபவர் அஜித் குமார். நடிப்பை தொடர்ந்து, கார் ரேஸிலும் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் , தனது ரேஸ் கார் மற்றும் டிரைவர் சூட் லோகோவை அஜித் அறிவித்துள்ளார்.

அஜித் குமார்
நடிகர் அஜித் குமாரின் (Ajith Kumar) முன்னணி நடிப்பில் இறுதியாக வெளியான படம் குட் பேட் அக்லி (Good Bad Ugly). இந்த படமானது கடந்த 2025 ஏப்ரல் 10-ம் தேதியில் வெளியாகி, சுமார் ரூ 250 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சூப்பர் ஹிட்டாகியிருந்தது. இந்த படத்தின் ஷூட்டிங்கை தொடர்ந்து, அஜித் குமார் முழுமையாக கார் ரேஸில் (Car race) இறங்கியுள்ளார். துபாய், இத்தாலி மற்றும் பிரான்ஸ் போன்ற உலகநாடுகளில் நடக்கும் கார் ரேஸில் இந்தியாவின் சார்பாக கலந்துகொண்டு வருகிறார். இவர் இதுவரை பல போட்டிகளில் தனது அணியுடன் கலந்து வென்றுள்ளார். இந்நிலையில் சினிமா ஒரு புறம், கார் ரேஸ் ஒரு புறம் என இரண்டையும் இரு கண்களாக பார்த்து வருகிறார்.
மேலும் தனது 64வது படத்தையும், ஆதிக் ரவிச்சந்திரனின் இயக்கத்தில்தான் நடிக்கவுள்ளார். இந்நிலையில் தற்போது கார் ரேஸிங் பயிற்சியில் தீவிரமாக இருந்து வரும் அஜித் குமார் , ரேஸ் கார் மற்றும் ட்ரைவர் சூட் லோகோவை (Logo) வெளியிட்டுள்ளார். இந்த லோகோவை அஜித் குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இதையும் படிங்க : சிவகார்த்திகேயன் – வெங்கட் பிரபுவின் கூட்டணி குறித்து வெளியான மாஸ் அப்டேட்!
சுரேஷ் சந்திரா வெளியிட்ட அஜித் குமாரின் கார் ரேஸ் லோகோ :
Ajith Kumar Racing is proud to feature this logo on our race car and driver suits 🏁✨ A collaboration that unites motorsport and entertainment — cross-connecting audiences. #AjithKumarRacing #SportsXEntertainment #DrivenByPassion #OnTrackWithPride pic.twitter.com/3K5IGc2Zcs
— Suresh Chandra (@SureshChandraa) September 7, 2025
இந்த லோகோவில் நடிகர் அஜித் குமார், இந்திய சினிமாவை முன்னிறுத்தும் வகையில், இந்தியன் பிலிம்ஸ் இன்டர்ஸ்டி ” என குறிப்பிப்பட்டுள்ளது. சினிமாவை தொடர்ந்து கார் ரேஸிலும் அஜித் குமார் ஆர்வம் காட்டிவரும் நிலையில், மேலும் சினிமாவை விட்டுக்கொடுக்காமல் தனது ரேஸ் காரிலும், ட்ரைவர் சூட்டிலும் இந்தியன் பிலிம்ஸ் இன்டர்ஸ்டியை பிரதிபலிக்கும் விதமாக, லோகோவை அமைத்துள்ளார். இந்த லோகோவானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க : லோகா 2 படத்தில் அவர்தான் ஹீரோ.. துல்கர் சல்மான் சொன்ன சப்ரைஸ்!
அஜித் குமாரின் புதிய படம் :
அஜித் குமார் குட் பேட் அக்லி படத்தை தொடர்ந்து மீண்டும், ஆதிக் ரவிச்சந்திரனின் இயக்கத்தில் AK64 படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் வரும் 2025ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் விரைவில் இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.