Good Bad Ugly: மீண்டும் நெட்பிளிக்ஸில் வெளியான ‘குட் பேட் அக்லி’… படத்தில் செய்யப்பட்ட மாற்றங்கள் என்னென்ன தெரியுமா?

New Version Good Bad Ugly On Netflix: அஜித் குமாரின் நடிப்பில் இறுதியாக வெளியான படம் குட் பேட் அக்லி. இப்படத்தில் இளையராஜாவின் பாடல் அனுமதியில்லாமல் பயன்படுத்த பட்டநிலையில், வழக்கு நடைபெற்றுவருகிறது. மேலும் ஓடிடியில் இருந்து இப்படம் நீக்கப்பட்டநிலையில், தற்போது புது வெர்சன் குட் பேட் அக்லி படமானது மீண்டும் ஓடிடியில் வெளியாகியுள்ளது.

Good Bad Ugly: மீண்டும் நெட்பிளிக்ஸில் வெளியான குட் பேட் அக்லி... படத்தில் செய்யப்பட்ட மாற்றங்கள் என்னென்ன தெரியுமா?

அஜித் குமாரின் குட் பேட் அக்லி படம்

Published: 

20 Sep 2025 16:04 PM

 IST

நடிகர் அஜித் குமாரின் (Ajith Kumar) 63வது திரைப்படமாக வெளியான படம் குட் பேட் அக்லி (Good bad Ugly). இந்த படத்தில் அஜித் குமார் அதிரடி ஆக்ஷன் மற்றும் மாறுபட்ட நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்திருந்தார். இப்படத்தை இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் (Adhik Ravichandran) இயக்கியிருந்த நிலையில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனமானது தயாரித்திருந்தது. அஜித் குமாருக்கு ஜோடியாக இப்படத்தில், நடிகை திரிஷா கிருஷ்ணன் (Trisha Krishnan) நடித்திருந்தார். இவர்கள் இருவரின் கூட்டணியில் விடாமுயற்சி படத்தை தொடர்ந்து, 2025ம் ஆண்டு வெளியான இரண்டாவது படமாக  இந்த குட் பேட் அக்லி அமைந்திருந்தது. இப்படமானது கடந்த 2025 ஏப்ரல் 10ம் தேதியில் திரையரங்குகளில் வெளியானது. அதை தொடர்ந்து, மே மாதத்தில் இப்படமானது நெட்பிளிக்ஸ் (Netflix) ஓடிடியில் வெளியிப்பட்டிருந்தது.

மேலும் இப்படத்தில் இளையராஜாவின் (Ilaiyaraaja) இசையமைப்பில் வெளியான “ஒத்த ரூபாயும்” என்ற பாடல் இடம்பெற்றிருந்த நிலையில், அது தொடர்பான வழக்குகள் நடைபெற்றுவருகிறது. இந்நிலையில், நெட்பிளிக்ஸ் ஓடிடியில் இருந்து குட் பேட் அக்லி படமானது நீக்கப்பட்டிருந்தது. இதனால் அஜித் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்த நிலையில், தற்போது புது வெர்சன் குட் பேட் அக்லி படத்தை நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகியுள்ளது. இதை என்னென்ன மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது என்பது பற்றி பார்க்கலாம்.

இதையும் படிங்க : கருப்பு கண்ணாடி… கலகல பேச்சு… மல்டி டேலண்ட் கொண்ட மிஷ்கினுக்கு ஹேப்பி பர்த்டே!

நியூ வெர்சனில் வெளியான அஜித்தின் குட் பேட் அக்லி படத்தின் மாற்றங்கள்

இந்த புதிய வெர்சன் படத்தில், இளையராஜாவின் இசையமைப்பில் பயன்படுத்தப்பட்ட பாடல்களை அனைத்தையும் படக்குழு நீக்கியுள்ளது. அதற்கு பதிலாக ஜிவி. பிரகாஷின் இசையை பயன்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க : குட் பேட் அக்லி படத்தின் காப்பி ரைட்ஸ் பிரச்னை – ஜிவி பிரகாஷ் ஓபன் டாக்

அர்ஜுன் தாஸின் நடனத்தில், குட் பேட் அக்லி படத்தில் இடம்பெற்ற “ஒத்த ரூபாயும்” என்ற பாடலையும் படக்குழு நீக்கியுள்ளது. அதற்கு பதிலால் புதிய இசையை இணைந்துள்ளது. இது தொடர்பான வீடியோவும் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

இணையத்தில் வைரலாகும் புதிய வெர்சன் குட் பேட் அக்லி படத்தின் பதிவு

குட் பேட் அக்லி பட இளையராஜா விவகாரம் :

இந்த குட் பேட் அக்லி படம் தொடர்பாக, இசையமைப்பாளர் இளையராஜா வருகின்ற செப்டம்பர் 24-ம் தேதி பதிலளிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தற்போது ஓடிடியில் இருந்து குட் பேட் அக்லி படத்தை நீக்கி, இளையராஜாவின் பாடல்களையும் முழுவதுமாக எடுத்துவிட்டு, ஜிவி. பிரகாஷின் இசையில் புதிய வெர்சனில் குட் பேட் அக்லி படத்தை மீண்டும் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் பதிவேற்றப்பட்டுள்து. இதன் காரணமாக சர்ச்சையானது தற்போதைக்கு முடிவுக்கும் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.