அஜித் குமார் நடிப்பில் வெளியான வேதாளம் படம் 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது

10 Years Of Vedalam Movie: தமிழ் சினிமா ரசிகர்கள் தல என்று அன்புடன் அழைக்கப்படுபவர் நடிகர் அஜித் குமார். இவரது நடிப்பில் முன்னதாக வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்ற வேதாளம் படம் தற்போது 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.

அஜித் குமார் நடிப்பில் வெளியான வேதாளம் படம் 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது

வேதாளம் படம்

Published: 

10 Nov 2025 17:01 PM

 IST

தமிழ் சினிமாவில் கடந்த 10-ம் தேதி நவம்பர் மாதம் 2015-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் வேதாளம். ஆக்‌ஷன் த்ரில்லர் பாணியில் உருவான இந்தப் படத்தில் நடிகர் அஜித் குமார் நாயகனாக நடித்து இருந்தார். இயக்குநர் சிவா இந்தப் படத்தை எழுதி இயக்கி இருந்தார். மேலும் இந்தப் படத்தில் நடிகர் அஜித் குமார் உடன் இணைந்து நடிகர்கள் லக்ஷ்மி மேனன், ஸ்ருதி ஹாசன், அஷ்வின் காக்குமானு, ராகுல் தேவ், கபீர் துஹான் சிங், அனிகேத் சவுகான், சூரி, ராஜேந்திரன், தம்பி ராமையா, அவினாஷ், மன்சூர் அலிகான், சுதா, மயில்சாமி, அப்புக்குட்டி, யோகி பாபு, கோவை சரளா, ரவிராஜ், ஸ்ரீரஞ்சனி, வித்யுல்லேகா, வித்யுல்லேகா, வித்யுல்லேகா, வித்யுல்லேகா ராமன் சுவாமிநாதன், ரமேஷ் திலக், ராஜ்குமார், ஸ்ரீஜா ரவி, தமிழ்செல்வி, மீரா கிருஷ்ணன், கலைராணி, ஆர்.என்.ஆர்.மனோகர், டி.ஆர்.கே.கிரண், அமித் திவாரி, ஜாஸ்பர், தேஜ் சப்ரு, முக்தர் கான், சுக்ரன், ஆர்யன் ஆஷிக், மிப்பு, கண்ணன் பொன்னையா, பில்லி முரளி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து இருந்தனர்.

மேலும் இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தைப் பெற்றது. மேலும் இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ சாய் ராம் கிரியேஷன்ஸ் சார்பாக தயாரிப்பாளர்கள் எஸ். ஐஸ்வர்யா
ஏ. எம். ரத்னம் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ள நிலையில் பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

10 ஆண்டுகளை நிறைவு செய்தது அஜித் குமாரின் வேதாளம் படம்:

இந்த வேதாளம் படத்தில் பெரிய ரவுடியாக வலம் வருகிறார் நடிகர் அஜித் குமார். இவர் எதிர்பாராத சூழல் காரணமாக கண் பார்வை தெரியா தம்பி ராமையாவின் குடும்பத்துடன் சேர்கிறார். அவர்களின் மகளாக நடிகை லட்சுமி மேனன் இருந்த நிலையில் லட்சுமி மேனனின் பெற்றோர்கள் உயிரிழந்துவிடுகிறார்கள்.

இந்த நிலையில் லட்சுமி மேனனுடன் கொல்கத்தா செல்கிறார் நடிகர் அஜித் குமார். அங்கு வில்லன்களால் வரும் பிரச்னைகளை சரி செய்து எப்படி லட்சுமி மேனனின் வாழ்க்கையை அஜித் குமார் பாதுகாக்கிறார் என்பதே படத்தின் கதை.

Also Read… துள்ளுவதோ இளமை நடிகர் அபிநய் உடல்நலக்குறைவால் காலமானார்

இணையத்தில் கவனம் பெறும் எக்ஸ் தள பதிவு:

Also Read… பிக்பாஸில் வீட்டு தல டாஸ்கின் போது காயமடைந்த பார்வதி – வைரலாகும் வீடியோ!