AK is Back.. துபாயிலிருந்து பாதுகாப்பாக சென்னை திரும்பிய அஜித் குமார் – இணையத்தில் பரவும் வீடியோ!
Ajith Kumar Returns Safe To Chennai: அஜித் குமார் சமீபகாலமாக துபாயில் கார் ரேஸ் பயிற்சியில் ஈடுபட்டு வந்த நிலையில், அங்கு ஈரான் தாக்குதல் நடந்துவந்தது. இந்த தாக்குதலுக்கு மத்தியில் துபாயில் அஜித் குமார் இருந்த நிலையில், தற்போது எந்தவித பிரச்சனையும் இல்லாமல் பாதுகாப்பாக சென்னை திரும்பியுள்ளார்.

அஜித் குமார்
நடிகர் அஜித் குமார் (Ajith Kumar) சினிமாவில் இவர் நடிகராக மட்டுமில்லாமல், தனது கனவான கார் ரேஸிலும் (car Race) தீவிரமாக இருந்துவந்தார். இவர் கடந்த 2024ம் ஆண்டு இறுதிமுதல் கார் ரேஸ் பயிற்சியில் தீவிரமாக இருந்த நிலையில், இந்தியாவின் சார்பாக தனது அணியினருடன் பல்வேறு நாடுகளில் நடைபெற்றுவந்த 24H கார் ரேஸ் (24H Car Race) போட்டிகளில் கலந்துகொண்டுவந்தார். இத்தாலி, துபாய், மலேசியா என பல்வேறு இடங்களில் நடைபெற்ற கார் ரேஸ் போட்டிகளில் தனது அணியினருடன் கலந்துகொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் சமீப காலமாக ஈரான் மற்றும் இஸ்ரேல் (Iran and Israel) இடையே போர் கலவரம் இருந்துவரும் நிலையில், துபாயில் (Dubai) பல்வேறு இடங்களில் தாக்குதல்கள் நடைபெற்றுவந்தது. குறிப்பாக துபாய் விமான நிலையம் மற்றும் புர்ஜ் கலீஃபா என முக்கிய நகரங்களில் தாக்குதல்கள் நடைபெற்றிவந்தது.
இதனால் அஜித் குமார் துபாயில் சிக்கி கொண்டதாக தகவல்கள் வெளியாகிவந்தது. ஆனால் அஜித் துபாயில் நலமாகவும், பாதுகாப்பாக இருப்பதாகவும் அவரின் மேலாளர் சுரேஷ் சந்திரா தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கிட்டத்தட்ட 10 நாட்களுக்கும் மேலாக விமான சேவைகள் முழுவதும் தடைப்பட்டிருந்த நிலையில், தற்போது அஜித் குமார் பாதுகாப்பாக இன்று (10/032026) சென்னை திரும்பியுள்ளார்.
இதையும் படிங்க: தமிழக அரசுக்கு எனது மனமார்ந்த நன்றி – சாய் பல்லவி வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவு!
அஜித் குமார் சென்னை திரும்பியதாக வைரலாக வீடியோ பதிவு:
#Ajithkumar is back to Chennai ♥️ pic.twitter.com/rjzgMemKkQ
— AmuthaBharathi (@CinemaWithAB) March 10, 2026
நடிகர் அஜித் குமார் துபாயில் பல நாட்களாக கார் ரேஸ் பயிற்சியில் இருந்த நிலையில், அவர் கடந்த 2026 பிப்ரவரி இறுதியிலே இந்தியா வருவதற்கான திட்டமிருந்தது. ஆனால் போர் நிலவரம் காரணமாக விமான சேவைகள் மற்றும் பல்வேறு விஷயங்கள் ரத்து செய்யப்பட்டிருந்தது. இதன் காரணமாக இந்திய மக்கள் உட்பட பல்வேறு நபர்களும் துபாயிலிருந்து வெளியேற முடியாமல் மற்றும் இங்கிருந்தும் செல்ல முடியாமலும் தவித்திருந்தனர்.
இதையும் படிங்க: தனுஷின் ‘கர’ திரைப்படத்தின் கதை இதுவா? இணையத்தில் கசிந்த தகவல்!
இந்நிலையில் போர் கலவரம் கொஞ்சம் குறைந்த நிலையில், தற்போது நடிகர் அஜித் குமார் சென்னைக்கு திரும்பியுள்ளார். சென்னை விமான நிலையத்தில், அவர் வந்து இறங்கியது தொடர்பான வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது. மேலும் அஜித் குமார் எந்தவித பிரச்சனையும் இல்லாமல் பாதுகாப்பாக திரும்பிவிட்டதாகவும் அவரின் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து தனது புது படத்தின் ஷூட்டிங்கில், அஜித் இணைவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதை வட்டாரங்கள் தெரிவிக்கிறது.