Ajith Kumar: அஜித் ரெடண்ட் ரேஸிங்.. புதிய அணியை அறிமுகப்படுத்திய அஜித் குமார்.. வைரலாகும் பதிவு!

Ajith Redant Racing: நடிகர் அஜித் குமார் தற்போது சினிமாவை தொடர்ந்து கார் ரேஸில் தீவிரமாக இருந்துவருகிறார். அந்த வகையில் இவரின் கார் ரேஸிற்கான புதிய அணியையும் மற்றும் அந்த அணியின் பெயரையும் வெளியிட்டுள்ளார். இது தொடர்பான பதிவு தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.

Ajith Kumar: அஜித் ரெடண்ட் ரேஸிங்.. புதிய அணியை அறிமுகப்படுத்திய அஜித் குமார்.. வைரலாகும் பதிவு!

அஜித் ரெடண்ட் ரேஸிங் அணி

Published: 

06 Nov 2025 18:26 PM

 IST

தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகர் மற்றும் கார் ரேஸராக (Car Race) இருந்து வருபவர் அஜித் குமார் (Ajith Kumar). இவர் சினிமாவில் நுழைவதற்கு முன்னே பைக் ரேஸ் மற்றும் கார் ரேஸ் போன்ற ஆர்வம் கொண்டிருந்தார். அந்த வகையில் இவை தற்போது சினிமாவை தொடர்ந்து கார் ரேஸில் இறங்கியுள்ளார். தளபதி விஜய் அரசியல் களத்தில் இறங்கியுள்ளது போன்று, நடிகர் அஜித் குமாரும் தனக்கு பிடித்த துறையில் களமிறங்கியுள்ளார். இவர் கடந்த 2024 ஆம் ஆண்டு இறுதி முதல் கார் ரேஸிங் பயிற்சியில் ஈடுபட்ட நிலையில், பல்வேறு நாடுகளில் நடைபெற்றுவந்த 24H கார் ரேஸ் சீரிஸில் (24H Car Race Series) கலந்துகொண்டிருந்தார். இதில் மொத்தமாக 4 போட்டிகளில் கோப்பைகளை வென்றுள்ளார். அந்த வகையில் கிட்டத்தட்ட 1 வருட காலமாக இந்த ரேஸிங்கில் அஜித் குமார் இருந்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இவர் வரும் ஆசிய லீ மான்ஸ் (Asian Le Mans) போட்டியிலும் இந்தியாவின் சார்பாக தனது அணியினருடன் கலந்துகொள்ளளவுள்ளார். அந்த வகையில் தற்போது இவரின் புதிய அணியை அறிமுகப்படுத்தியுள்ளார். இது தொடர்பான பதிவை அஜித் குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா வெளியிட்டுள்ளார்.

இதையும் படிங்க: அஜித்துடன் கூட்டணி… லோகேஷ் கனகராஜ் சொன்ன விசயம் – வைரலாகும் வீடியோ

அஜித் குமாரின் புதிய அணி குறித்து சுரேஷ் சந்திரா வெளியிட்ட பதிவு :

இந்த பதிவில் சுரேஷ் சந்திரா, பெல்ஜியம் வீரர்கள் அயர்டன் ரெடான்ட், யானிக் ரெடான்ட், டி ப்ரூக்கர் மற்றும் இவர்களுடன் அஜித் குமார் போன்ற ரேஸர்கள் இணைந்து அஜித் ரெடான்ட் ரேஸிங் (Ajith Redant Racing) என்ற புதிய அணியியக்க உருவாகியுள்ளனர். இது தொடர்பான பதிவு தற்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.

கார் ரேஸிங்க்கை தொடர்ந்து எப்போது படம் நடிக்கவுள்ளார் அஜித்?

நடிகர் அஜித் குமார் கிட்டத்தட்ட 1 ஆண்டுகளாக கார் ரேஸ் போட்டிகளில் பங்கேற்றுவருகிறாரா. இந்த 2025ம் ஆண்டில் மட்டும் இவரின் நடிப்பில் 2 படங்கள் வெளியான நிலையில், அதை தொடர்ந்து தனது புதிய படத்தில் ஆதிக் ரவிசந்திரனுடன் இணையவுள்ளார்.

இதையும் படிங்க : ஆட்டம் தொடங்கியது… ஜன நாயகன் படக்குழு வெளியிட்ட நியூ போஸ்டர்

இப்படம் தற்காலிகமாக AK64 என அழைக்கப்பட்டுவருகிறது. இந்த படத்தின் ஷூட்டிங் இந்த 2025 நவம்பரில் தொடங்கவதாக இருந்த நிலையில், அஜித் இன்னும் கார் ரேஸில் பிசியாக இருந்துவரும் நிலையில்,வரும் 2026 ஆம் ஆண்டு ஜனவரியில் தொடங்கவுள்ளது. இப்படத்தின் அறிவிப்புகளும் 2026 ஆம் ஆண்டு ஜனவரியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.