அட்லி, லோகேஷ் படங்களுக்கு பிறகு அல்லு அர்ஜுன் யாருடன் கூட்டணி வைக்கிறார்? வைரலாகும் தகவல்

Actor Allu Arjun New Movie Update: தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அல்லு அர்ஜுன். இவர் தற்போது அட்லி இயக்கத்தில் நடித்து வரும் நிலையில் அடுத்ததாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார். அதனைத் தொடர்ந்து யாருடன் கூட்டணி வைக்கிறார் என்பது குறித்து தகவல்கள் வெளியாகி உள்ளது.

அட்லி, லோகேஷ் படங்களுக்கு பிறகு அல்லு அர்ஜுன் யாருடன் கூட்டணி வைக்கிறார்? வைரலாகும் தகவல்

அல்லு அர்ஜுன்

Published: 

31 Mar 2026 15:09 PM

 IST

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அல்லு அர்ஜுன். இவரது நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. தெலுங்கு சினிமாவில் பிரபல தயாரிபாளராக வலம் வரும் அல்லு அரவிந்தின் மகன் தான் அல்லு அர்ஜுன். இவர் சினிமாவில் அறிமுகம் ஆன ஆரம்ப காலக்கட்டத்தில் இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தைப் பெற்று வந்தது. அதனைத் தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் அடுத்தடுத்து சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து வந்தார் அல்லு அர்ஜுன். இவரது நடிப்பில் தெலுங்கு சினிமாவில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து தெலுங்கு சினிமா ரசிகர்களிடையே மட்டும் இன்றி உலக அளவில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.

மேலும் இறுதியாக நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் திரையரங்குகளில் வெளியான புஷ்பா 2 படம் உலக அளவில் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடிகர் அல்லு அர்ஜுன் தற்போது இயக்குநர் அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் நடித்து வருகிறார். அதனைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார். அதனைத் தொடர்ந்து எந்த இயக்குநர் இயக்கத்தில் நடிக்கப் போகிறார் என்பது குறித்து தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது.

அட்லி, லோகேஷிற்கு பிறகு அல்லு அர்ஜுன் யாருடன் கூட்டணி வைக்கிறார்?

அட்லி மற்றும் லோகேஷ் கனகராஜ் ஆகியோருடனான படங்களைத் தொடர்ந்து, அல்லு அர்ஜுன் தற்போது பேசில் ஜோசப்புடன் இணையத் தயாராகி வருகிறார். ஒரு சூப்பர்ஹீரோ திரைப்படம் கிட்டத்தட்ட உறுதிசெய்யப்பட்டுவிட்டது. இதன் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சுவாரஸ்யமாக, பேசில் ஜோசப் இதே கதையை முன்னதாக ரன்வீர் சிங்கிடம் கூறியிருந்தார், ஆனால் அந்தத் திட்டம் அப்போது கைகூடவில்லை. தற்போது, ​​இறுதியாக இத்திட்டம் அல்லு அர்ஜுனுடன் இணைந்து நனவாகவுள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… Legend Saravanan: விக்ரம்.. லியோ படத்திற்கு இணையானது.. லீடர் உங்களை 100% திருப்திப்படுத்தும் – லெஜெண்ட் சரவணா அதிரடி பேச்சு!

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… நீ சிங்கம் தான்… 3 ஆண்டுகளை நிறைவு செய்தது பத்து தல படம்

Follow Us
தன்னை கடித்த பாம்பை தைரியமாக பிடித்த முதியவர்
கேர்ள் ஃபிரெண்டுடன் லூட்டி அடிக்கும் குரங்கு - வைரல் வீடியோ
தன் உயிரையும் பொருட்படுத்தாமல் நாயை காப்பாற்றிய பெண்.. இணையத்தில் வைரல்..
தாயின் பக்கெட் லிஸ்டை நிறைவேற்றிய மகன்... இணையத்தில் வைரல்..