பராசக்தி படத்திலிருந்து கியூட்டான BTS வீடியோவை வெளியிட்ட நடிகை ஸ்ரீலீலா

Actress Sreeleela Instagram Post: தமிழில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது விறுவிறுப்பாக தயாராகி வரும் படம் பராசக்தி. இந்தப் படத்தில்ந் அடிகை ஸ்ரீ லீலா நாயகியாக நடித்துள்ளார். இவர் சமீபத்தில் படப்பிடிப்பு தளத்தில் எடுத்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

பராசக்தி படத்திலிருந்து கியூட்டான BTS வீடியோவை வெளியிட்ட நடிகை ஸ்ரீலீலா

நடிகை ஸ்ரீலீலா

Published: 

20 Nov 2025 20:04 PM

 IST

தென்னிந்திய சினிமாவில் இளம் நடிகையாக வலம் வருபவர் நடிகை ஸ்ரீ லீலா. இவர் தெலுங்கு சினிமாவில் நாயகியாக அறிமுகம் ஆகி இருந்தாலும் தற்போது தொடர்ந்து தெலுங்கு மொழியில் மட்டும் இன்றி கன்னடா, தமிழ் மற்றும் இந்தி மொழிகளிலும் தொடர்ந்து நடித்து வருகிறார். இவர் தொடர்ந்து படங்களில் நடிப்பது மட்டும் இன்றி சமூக சேவைகள் செய்வதன் காரணமாக மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறார். ஆதரவற்ற குழந்தைகள் பலரின் படிப்பிற்காகவும் அவர்களின் வாழ்வாதரத்திற்காகவும் தொடர்ந்து நடிகை ஸ்ரீ லீலா உதவி செய்து வருகிறார். 24 வயது மட்டுமே உடைய இவர் சமூகத்தில் மக்களுக்காக தொடர்ந்து உதவுவது அவர் மீதான மரியாதையை அதிகரிக்க செய்துள்ளது. தொடர்ந்து படங்களில் பிசியாக நடித்து வரும் நடிகை ஸ்ரீ லீலா தற்போது தமிழில் நாயகியாக அறிமுகம் ஆகியுள்ள படம் பராசக்தி.

இயக்குநர் சுதா கொங்கரா எழுதி இயக்கி உள்ள படம் பராசக்தி. இந்தப் படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நாயகனாக நடிக்க நடிகை ஸ்ரீ லீலா நாயகியாக நடித்து வருகிறார். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் ரவி மோகன், ராணா டகுபதி, அதர்வா மற்றும் பேசில் ஜோசஃப் என பலர் இந்தப் படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகின்றனர். படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வரும் நிலையில் படம் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள நிலையில் படத்தில் இருந்து முதல் சிங்கிளான அடி அலையே பாடல் முன்னதாக வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகின்றது.

பராசக்தி படத்திலிருந்து கியூட்டான BTS வீடியோவை வெளியிட்ட ஸ்ரீலீலா:

இந்த நிலையில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணியில் பிசியாக நடித்து வரும் நடிகை ஸ்ரீ லீலா சமீபத்தில் படத்தின் டப்பிங் பணிகளில் ஈடுபட்டார். இது தொடர்பான அப்டேட் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தது. இந்த நிலையில் தற்போது நடிகை ஸ்ரீ லீலா அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பராசக்தி படத்தின் கியூட்டான BTS வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் இரண்டு பாட்டிகள் நடிகை ஸ்ரீ லீலாவை கொஞ்சும் அழகைப் பார்த்த ரசிகர்கள் உற்சாகத்தில் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… சூர்யாவிற்கு கதை சொன்ன சூர்யாஸ் சாட்டர்டே பட இயக்குநர் – உற்சாகத்தில் ரசிகர்கள்

நடிகை ஸ்ரீ லீலா வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவு:

Also Read… லோகாவின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து புதுப் படத்தில் கமிட்டான கல்யாணி பிரியதர்ஷன்!

வாரணாசி பட நிகழ்வில் நடந்த சுவாரசியங்கள்.... பிரியங்கா சோப்ரா பகிர்ந்த வீடியோ!
ஊழியர்களை கண்காணிக்க புதிய கருவியை பயன்படுத்தும் Cognizant!
ஐபிஎல் ஏலம்.. எப்போது? எங்கு நடைபெறுகிறது? 
மாணவர்கள் மற்றும் நிபுணர்களுக்கு மத்திய அரசின் 5 இலவச AI படிப்புகள்.. என்னென்ன தெரியுமா?