Roja: நடிகை ரோஜாவின் மகளுக்கு மதிப்பு மிக்க விருது.. அவர் அப்படி என்ன செய்தார்?
Rojas Instagram: நடிகை ரோஜாவின் மகளான அன்ஷு மாலிகா என்பவர், பன்முகத் திறமை கொண்ட பெண்ணாக இருந்துவருகிறார். அந்த வகையில் இவர் தனது திறமைக்காக சர்வதேச மேடைகளில் ஏற்கனவே விருதுகளையும் பாராட்டுகளையும் பெற்றுள்ளார். சமீபத்தில், அன்ஷு மாலிகா மற்றொரு மதிப்புமிக்க ஹெர்மன் பி. வெல்ஸ் விருதைப் பெற்றுள்ளார்.

ஆர்.கே. ரோஜாவின் மகள் அன்ஷு
தமிழ் மற்றும் தெலுங்கு நடிகையும், தெலுங்கானா முன்னாள் அமைச்சருமாக இருந்துவந்தவர் நடிகை ரோஜா (Roja). இவர் தற்போது தமிழில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் குக் வித் கோமாளி சீசன் 7 (Cook with Comali Season 7) நிகழ்ச்சியில் நடுவராக இருந்துவருகிறார். இந்நிலையில் இவரின் மகள் அன்ஷு மாலிகா (Anshu Roja )பன்முக திறமை கொண்டவர் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. அந்த வகையில் இவருக்கு மற்றொரு கௌரவ விருது கிடைத்துள்ளது. அமெரிக்காவின் புகழ்பெற்ற இந்தியானா பல்கலைக்கழகத்தால் (Indiana Univercity) ஆண்டுதோறும் ஒருவருக்கு மட்டுமே வழங்கப்படும் ஹெர்மன் பி. வெல்ஸ் விருதுக்கு (Herman B Wells Award 2026), ரோஜாவின் மகள் அன்ஷு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இந்த மகிழ்ச்சியான செய்தியை நடிகை ரோஜாவே தனது சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். இந்தியானா பல்கலைக்கழகத்தில் தனது கணவர் மற்றும் மகளுடன் எடுத்த புகைப்படங்களைப் பகிர்ந்துள்ள அவர், தனது மகளை பாராட்டி எழுதியுள்ளார். இது தொடர்பான பதிவு இணையத்தில் வைரலாகப்பரவி வருகிறது.
இதையும் படிங்க: ரூ 250 கோடி இழப்பீடு.. மனைவி சங்கீதாவுக்கு விவாகரத்து கொடுக்க முடிவு செய்த விஜய்? – மகன் – மகளின் நிலை என்ன?
தனது மகள் அன்ஷு குறித்து நடிகை ரோஜா வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவு:
அந்த பதிவில் நடிகை ரோஜா , “அன்பு மகள் அன்ஷு, உன்னுடைய கடின உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் தைரியம் உன்னை இங்கு கொண்டு வந்துள்ளது. இது வெறும் ஆரம்பம் தான். ஒரு சிறிய கனவாகத் தொடங்கிய உன்னுடைய பயணம், இப்போது எங்களுக்கு மிகுந்த பெருமையையும், பலருக்கு உத்வேகத்தையும் அளித்துள்ளது” என்று தனது மகிழ்ச்சியை வார்த்தைகளால் வெளிப்படுத்தியுள்ளார். தற்போது, இது தொடர்பான புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இவற்றைப் பார்த்த சினிமா பிரபலங்கள் மற்றும் இணையவாசிகளும் ரோஜாவின் மகளுக்கு வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: விஜய்யின் தலைவா பட பிரச்சனையை பேசிய சத்யராஜ்.. அதற்கு சிபி சத்ரயாஜ் போட்ட பதிவு என்னனு பாருங்க!
ஹெர்மன் பி வெல்ஸ் விருது வழங்க காரணம் :
கடந்த 1961-ஆம் ஆண்டு முதல், இந்தியானா பல்கலைக்கழகம் ஒவ்வொரு ஆண்டும் ஒரு சிறந்த மாணவருக்கு இந்த மதிப்புமிக்க விருதை வழங்கி வருகிறது. படிப்புடன் சேர்த்து தலைமைத்துவம் மற்றும் சமூக சேவை நடவடிக்கைகளிலும் தீவிரமாக ஈடுபடுபவர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. அந்த வகையில்தான் நடிகை ரோஜாவின் மகள், அன்ஷுவிற்கு விருது வழங்கப்படுவதாக தெரிவித்துள்ளது. அன்ஷு தற்போது அதே பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் துறையில் படித்துவருகிறாராம். தனது படிப்புடன், கோடிங் மற்றும் வலைதள உருவாக்கம் போன்ற பாடங்கள் மூலமாகவும், “ஆர்ட் ஃபார் எ காஸ்” மூலமாகவும் அவர் சமூக சேவை நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.