கூலி படத்தில் என்னுடைய கதாப்பாத்திரத்திற்கு கிடைத்த வரவேற்பு… இன்ஸ்டாகிராமில் நெகிழ்ந்து பேசிய நடிகை ரச்சிதா ராம்!

Actress Rachita Ram: நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது திரையரங்குகளில் வெளியாகி உள்ள கூலி படத்தில் பல முன்னணி நடிகர்களின் கதாப்பாத்திரங்கள் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வரும் நிலையில் நடிகை ரச்சிதா ராமின் கதாப்பாத்திரம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது.

கூலி படத்தில் என்னுடைய கதாப்பாத்திரத்திற்கு கிடைத்த வரவேற்பு... இன்ஸ்டாகிராமில் நெகிழ்ந்து பேசிய நடிகை ரச்சிதா ராம்!

ரச்சிதா ராம்

Published: 

18 Aug 2025 20:39 PM

கோலிவுட் சினிமாவில் தற்போது அதிகம் பேசப்பட்டு வரும் படம் கூலி. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (Super Star Rajinikanth) நாயகனாக நடித்துள்ள இந்தப் படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் எழுதி இயக்கி இருந்தார். படத்தில் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து இருந்தனர். இவர்களுடன் இணைந்து துணை நடிகர்கள் பலரும் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர். இந்த நிலையில் கூலி படத்தைப் பார்த்த ரசிகர்கள் அதில் பெண் கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்த முன்னணி நடிகையான ஸ்ருதி ஹாசனின் பிரீத்தி என்ற கதாப்பாத்திரத்தை விட கல்யாணி என்ற கதாப்பாத்திரம் குறித்து அதிக அளவில் பேசி வருகின்றனர். இந்த கதாப்பாத்திரத்தில் நடிகை ரச்சிதா ராம் நடித்து இருந்தார். இவர் கடந்த 2013-ம் ஆண்டு கன்னட சினிமாவில் நடிகையாக அறிமுகம் ஆனார்.

அதனைத் தொடர்ந்து பலப் படங்களில் இவர் நடித்துள்ளார். தமிழில் நடிகை ரச்சிதா ராம் நடிக்கும் முதல் படம் கூலி என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆன முதல் படத்திலேயே ரசிகர்களிடியே மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகிறார் நடிகை ரச்சிதா ராம். இந்த நிலையில் இது குறித்து நடிகை ரச்சிதா ராம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு நெகிழ்ச்சியான பதிவை வெளியிட்டுள்ளார்.

என் மீது நம்பிக்கை வைத்து இந்த வாய்ப்பை வழங்கிய லோகேஷ் கனகராஜிற்கு நன்றி:

அந்த வகையில் நடிகை ரச்சிதா ராம் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது, கூலி படத்தில் என்னுடைய கல்யாணி கதாபாத்திரத்திற்கு கிடைத்த வரவேற்பு நம்பமுடியாத அளவிற்கு மகிழ்ச்சியாக இருந்தது. விமர்சனங்கள் மற்றும் என் கதாபாத்திரத்தின் மீதான அன்பால் நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். ஊடகங்கள், விமர்சகர்கள் மற்றும் ட்ரோல்கள் மற்றும் மீம்ஸ் கிரியேட்டர்ஸ் அனைவருக்கும் நன்றி!

என் மீது நம்பிக்கை வைத்து இந்த வாய்ப்பை வழங்கிய இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அவர்களுக்கு சிறப்பு நன்றி. பல லெஜண்ட்ஸ் உடன் பணிபுரிந்தது மறக்க முடியாத அனுபவமாக உள்ளது. மேலும் வெற்றிக்கு கூலி குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள் என்று நடிகை ரச்சிதா ராம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்து இருந்தார்.

Also Read… சிவகார்த்திகேயனின் மதராஸி படக்குழு வெளியிட்ட புதிய எக்ஸ் தள பதிவு!

நடிகை ரச்சிதா ராம் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவு:

Also Read… சூர்யாவின் 47-வது படத்தில் அவரது கதாப்பாத்திரம் இதுதான்… வைரலாகும் தகவல்