பிக்பாஸ் தர்ஷன் நாயகனாக நடித்த சரண்டர் படத்தின் டீசர் இதோ!

Surrender Movie Official Teaser | விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசனின் கலந்துகொண்டதன் மூலம் மக்களின் மனதில் இடம் பிடித்தவர் தர்ஷன். மாடலாக இருந்த அவர் இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு சினிமாவில் நடிகராக மாறினார். இந்த நிலையில் தர்ஷனின் நடிப்பில் உருவாகியுள்ள 3-வது படத்தின் டீசர் தற்போது உருவாகியுள்ளது.

பிக்பாஸ் தர்ஷன் நாயகனாக நடித்த சரண்டர் படத்தின் டீசர் இதோ!

சரண்டர்

Published: 

28 May 2025 21:08 PM

 IST

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் நடிகர் தர்ஷன் (Actor Tharshan). இவர் மாடலாக நிகழ்ச்சியில் அறிமுகம் ஆனார். இலங்கை தமிழராக தனது பேச்சின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு தமிழ் சினிமாவில் நடிகராக வலம் வரத் தொடங்கினார். முன்னதாக இவர் மலையாளத்தில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான ஆண்ட்ராய்ட் குஞ்சப்பன் படத்தின் தமிழ் ரீமேக்கான கூகுள் குட்டப்பா படத்தில் நாயகனாக அறிமுகம் ஆனார். இந்தப் படம் கடந்த 2022-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி ரசிகரக்ளிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தை குருசரவணன் மற்றும் சபரி ஆகியோர் இயக்கி இருந்தனர். மேலும் நடிகரும் இயக்குநருமான கே.எஸ்.ரவிக்குமார் இந்தப் படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்த நிலையில் படத்தை தயாரிக்கவும் செய்திருந்தார்.

இந்தப் படத்தில் இவருடன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தர்ஷன் உடன் கலந்துகொண்ட நடிகை லாஸ்லியா நாயகியாக நடித்து இருதார். இந்தப் படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. இதனை தொடர்ந்து நடிகர் தர்ஷன் நடிப்பில் இரண்டாவதாக திரையரங்குகளில் வெளியான படம் நாடு.

இயக்குநர் சரவணன் எழுதி இயக்கிய இந்தப் படம் கடந்த 2023-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. மேலும் இந்தப் படத்தில் நடிகர் தர்ஷன் உடன் இணைந்து நடிகர்கள் மஹிமா நம்பியார், சிங்கம் புலி, அருள்தாஸ் என பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர்.

மலைக் கிராமத்தில் வாழும் மக்களுக்கு மருத்துவ வசதி இல்லாமல் தவிப்பது குறித்து வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து தற்போது நடிகர் தர்ஷன் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ள சரண்டர் படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.

சரண்டர் படத்தின் டீசரை வெளியிட்ட படக்குழு:

இந்தப் படத்தை இயக்குநர் கவுதமன் கணபதி இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் நடிகர் தர்ஷன் உடன் இணைந்து நடிகர்கள் தர்ஷன், லால், சுஜித் சங்கர், முனிஷ்காந்த், மன்சூர் அலிகான், பதினே குமார், விபின் ஜோஸ் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

படத்தில் காவல் துறை அதிகாரியாக நடிகர் தர்ஷன் நடித்துள்ளார். அதிரடி ஆக்‌ஷன் படமாக உருவாகியுள்ள இந்த சரண்டர் படம் தர்ஷனின் சினிமா வாழ்க்கையில் முக்கிய படமாக இருக்கும் என்று டீசரைப் பார்த்த ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Follow Us
Related Stories
கர படத்தில் மமிதா பைஜுவின் கதாப்பாத்திரம் முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் – இயக்குநர் விக்னேஷ் ராஜா
சூர்யாவின் அந்தப் படம் வாழ்க்கையைப் பற்றி எனது முழு கண்ணோட்டத்தையும் மாற்றியது – இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து
நிஜ வாழ்க்கையிலும் பாரு என்னிடம் நடிப்பதாகவே எனக்கு இப்போதும் தோன்றுகிறது – விஜய் சேதுபதி
இயக்குநராக நான் இயக்கிய படங்களைவிட கருப்பு 15 மடங்கு பெரிய படம் – இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி
கர படம் பத்தோடு பதினொன்னா இருக்காது – இயக்குநர் விக்னேஷ் ராஜா
Silambarasan: என்ன வெயிட் போடா சொன்னாங்க.. அந்த படத்தில் நான் நடிக்கமாட்டேனு சொன்னே – சிலம்பரசன் உடைத்த உண்மை!
ஏப்ரல் 1 முதல் பான் கார்டு விதிகளில் வரவிருக்கும் மாற்றம்
தாய், மகளைக் கடித்து குதறிய வளர்ப்பு நாய்.. வேடிக்கை பார்த்த உரிமையாளர்கள்..
ஏப்ரல் 1 முதல் உங்கள் சம்பளம் மாறப்போகிறது!.. புதிய விதிகள், வரி மாற்றங்கள்..
இனி இரவிலும் சூரிய ஒளியை பெறலாம்.. விண்வெளியில் கண்ணாடி அமைக்கும் ஸ்டார்ட்அப் நிறுவனம்..