விமலின் வடம் படத்தை யார் எல்லாம் பார்க்கலாம்? சென்சார் அப்டேட் இதோ

Vimal's Vadam Movie Censor Certificate Update : நடிகர் விமல் நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் வடம். இந்தப் படம் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி வரும் நிலையில் தற்போது சென்சார் தொடர்பான அப்டேட் வெளியாகி உள்ளது.

விமலின் வடம் படத்தை யார் எல்லாம் பார்க்கலாம்? சென்சார் அப்டேட் இதோ

வடம்

Published: 

21 Feb 2026 16:49 PM

 IST

தமிழ் சினிமாவில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்த நடிகர் விமல் பின்பு நாயகனாக நடிக்கத் தொடங்கினார். இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் பெரும்பாலும் காமெடியை அதிக அளவில் மையமாக வைத்து உருவாகுவது வழக்கமாக உள்ளது. அதன்படி நடிகர் விமல் நாயகனாக நடித்து தமிழ் சினிமாவில் வெளியான  பசங்க, களவானி, தூங்கா நகரம், வாகை சூட வா, கலகலப்பு, கேடி பில்லா கில்லாடி ரங்கா, தேசிங்கு ராஜா, தெய்வ மச்சான் ஆகியப் படங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடிகர் விமல் நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் மஹாசேனா. இந்தப் படம் கலவையான விமர்சனத்தைப் பெற்ற நிலையில் நடிகர் விமல் நடிப்பில் வெளியாக உள்ள படங்களின் அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி வைரலாகி வருகின்றது.

தொடர்ந்து படங்களில் மட்டும் இன்றி விமல் அவ்வபோது இணையதள தொடர்களிலும் நடித்து வருகிறார். அந்த வகையில் விமல் நடித்த விலங்கு மற்றும் ஓம் காளி ஜெய் காளி ஆகிய தொடர்கள் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. இதில் விலங்கு தொடர் அதிக அளவில் மக்களிடையே வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடிகர் விமல் நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் வடம். இந்தப் படம் தொடர்பான அபடேட்கள் தொடர்ந்து வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

வடம் படத்திற்கு யுஏ சான்றிதழ் கொடுத்த சென்சார் போர்ட்:

இந்தப் படத்தை இயக்குநர் கேந்திரன் எழுதி இயக்கி உள்ளார். நடிகர் விமல் நாயகனாக நடித்துள்ள நிலையில் அவருடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் இமான் இசையமைத்துள்ளார். படத்தில் இருந்து முன்னதாக பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தது. இந்த நிலையில் படம் வருகின்ற மார்ச் மாதம் 6-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. படம் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் படத்திற்கு சென்சார் சான்றிதழ் கிடைத்துள்ளது. அதன்படி படத்திற்கு சென்சார் குழு யு/ஏ சான்றிதழை வழங்கியுள்ளது. இதனை இசையமைப்பாளர் இமான் அவரது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Also Read… Shalini Ajith: ‘ஒருவரின் வெற்றிக்காக மற்றொருவர் மகிழ்வார்கள்’ – விஜய் மற்றும் அஜித் குறித்து ஷாலினி பேச்சு!

இசையமைப்பாளர் இமான் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… சமுத்திரக்கனியின் முதல் வெப் சீரிஸ் தடயம்… ரிலீஸ் எப்போது தெரியுமா

ஒரு மில்லியன் ரீல்ஸ் - அல்லு அர்ஜூன் - லோகேஷ் கனகராஜ் கொண்டாட்டம்
நடிகர் சல்மான் கானின் தந்தை மருத்துவமனையில் அனுமதி
ஈரானை தாக்க தயாராகும் அமெரிக்கா - வெளியான பரபரப்பு தகவல்
கார்திக் சுப்புராஜ் படத்தில் நடிகர் சுஹாஸ்!