யூடியூபில் பட்டையை கிளப்பும் சூர்யாவின் காட்மோட் பாடல்!
God Mode Lyric Video | நடிகர் சூர்யாவின் நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ளப் படம் கருப்பு. இந்தப் படத்தில் இருந்து முன்னதாக காட் மோட் என்ற பாடலின் லிரிக்கள் வீடியோ தீபாவளி பண்டிகையை முன்னிட்டு படக்குழு வெளியிட்டு இருந்தது.

கருப்பு
நடிகர் சூர்யாவின் (Actor Suriya) நடிப்பில் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கும் படம் கருப்பு. இந்தப் படம் தொடங்கி இரண்டு ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் படம் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் மிகவும் ஆவளுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். முன்னதாக நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான ரெட்ரோ படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் 45-வது படமாக உருவாகி வரும் கருப்பு படத்தின் மீது ரசிகர்கள் எதிர்பார்ப்பை வைத்துள்ளனர். காரணம் நடிகரும் இயக்குநருமான ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் முன்னதாக வெளியான படங்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்ததுதான். மேலும் இந்தப் படம் ஒரு கிராமத்து பின்னணியில் உருவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கருப்பு படத்தில் நடிகர் சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை த்ரிஷா கிருஷ்ணன் நடித்துள்ளார். 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் ரீல் ஜோடியான இவர்கள் பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திரையில் ஒன்றாக தோன்ற உள்ளது அவரது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைப்பெற்று வருவதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் பரவி ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
யூடியூபில் பட்டையை கிளப்பும் சூர்யாவின் காட்மோட் பாடல்:
இந்தப் படத்திற்கு இசையமைபாளர் சாய் அபயங்கர் இசையமைத்துள்ள நிலையில் படத்தில் இருந்து முதல் சிங்கிள் வீடியோவைப் படக்குழு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியிட்டது. இந்த நிலையில் காட் மோட் என்ற அந்த சிங்கிள் வீடியோ தற்போது யூடியூபில் 26 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளதாக படக்குழு தங்களது எக்ஸ் தள பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இந்த செய்தி ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read…
கருப்பு படக்குழு வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவு:
Also Read…