தியேட்டரில் சூப்பர் ஹிட் அடித்த மாமன் படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது? அப்டேட் இதோ

Maaman Movie OTT Update: நடிகர் சூரி நடிப்பில் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றப் படம் மாமன். முழுக்க முழுக்க காமெடி மற்றும் ஃபேமிலி செண்டிமெண்டை மையமாக வைத்து உருவான இந்தப் படத்தின் ஓடிடி வெளியீடு குறித்த அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது.

தியேட்டரில் சூப்பர் ஹிட் அடித்த மாமன் படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது? அப்டேட் இதோ

மாமன்

Published: 

01 Jun 2025 14:55 PM

தமிழ் சினிமாவில் பல்வேறு வேலைகளைப் பார்த்து மிகவும் கடினமான உழைப்பின் மூலமாக நடிகராக ஆனவர்தான் சூரி (Actor Soori). இதனை அவர் பல மேடைகளில் பேசியுள்ளார். சினிமாவில் லைட் மேன் இருந்து பெயிண்டிங் வரைக்கும் எல்லா வேலையும் செய்துள்ளேன் என்று சூரியே பல முறை தெரிவித்துள்ளார். இந்த நிலையில் காமெடி நடிகராக சினிமாவில் அறிமுகம் ஆன சூரி பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வந்தார். மேலும் சூரியின் காமெடிக்காக பல நடிகர்கள் காத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விடுதலைப் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகம் ஆனார் சூரி. இந்தப் படம் நல்ல வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து நாயகனாகவே நடித்து வருகிறார்.

இவர் இதுவரை விடுதலை பாகம் ஒன்று மற்றும் இரண்டு, கொட்டுக்காளி, கருடன் என தொடர்ந்து சீரியனாக கதைகளில் நாயகனாக நடித்து வந்த நிலையில் சமீபத்தில் வெளியான மாமன் படம் முற்றிலும் வேறுப்பட்ட கதைக்களத்தில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது.

சூப்பர் ஹிட் அடித்த சூரியின் மாமன்:

தொடர்ந்து சீரியசான கதைகளில் நாயகனாக நடித்து வந்த நடிகர் சூரி தற்போது மிகவும் ஜாலியான கதைக்களம் கொண்ட இந்தப் படத்தை விலங்கு என்ற சூப்பர் ஹிட் வெப் சீரிஸை இயக்கிய பிரசாந்த் பாண்டியராஜன் இயக்கியுள்ளார். மேலும் இந்தப் படத்திற்கு நடிகர் சூரி தான் திரைக்கதை எழுதியுள்ளார்.

இந்தப் படத்தின் மூலம் நடிகர் சூரி திரைக்கதை ஆசிரியராகவும் அறிமுகம் ஆனார். முழுக்க முழுக்க ஃபேமிலி செண்டிமெண்டை மையமாக வைத்து உருவான இந்தப் படம் கோடை விடுமுறையை முன்னிட்டு வெளியானதால் திரையரங்குகளுக்கு ஃபேமிலி ஆடியன்ஸ் அதிகமாக செல்கின்றனர்.

மாமன் படத்தின் கதை என்ன?

தாய் மாமன் மற்றும் மருமகன் பாசத்தை மையமாக வைத்து உருவான படம் மாமன். சூரியின் அக்கா சுவாஸிகாவிற்கு திருமணம் ஆகி நீண்ட நாட்களாக குழந்தைகள் இல்லாமல் இருக்கும் நிலையில் அவருக்கு ஆண் குழந்தை பிறக்கிறது. அந்த குழந்தையை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகிறார் நடிகர் சூரி.

இதற்கு இடையில் நடிகர் சூரி நடிகை ஐஸ்வர்யா லட்சுமியை காதலித்து திருமணம் செய்துக்கொள்கிறார். இவர்கள் இருவருக்கும் இடையில் அந்த குழந்தையால் பிரச்னை ஏற்படுகின்றது. அதனைத் தொடர்ந்து இந்த பிரச்னைகள் அனைத்தையும் நடிகர் சூரி எப்படி சமாளிக்கிறார் என்பதே படத்தின் கதை.

சூரி வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

ஓடிடி வெளியீட்டிற்கு தயாரான மாமன் படம்:

மாமன் படம் திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்பாகவே படத்தின் சாட்டிலைட் உரிமை மற்றும் ஓடிடி உரிமையை ஜீ 5 நிறுவனம் கைப்பற்றியது. இதன் காரணமாக படம் ஜீ 5 ஓடிடியில் வெளியாகும் என்பது உறுதியான நிலையில் படம் எப்போது வெளியாகும் என்பது குறித்த தகவல் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

அதன்படி படம் தற்போது திரையரங்குகளில் நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நிலையில் படம் ஜீன் மாதம் இரண்டாம் வாரத்தில் ஓடிடியில் வெளியாகும் என்று தற்போது சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது.