நடிகர் நானியிடம் மன்னிப்பு கேட்ட எஸ்.ஜே.சூர்யா… எதற்காக தெரியுமா?

Actor SJ Suryah: தமிழ் சினிமா மட்டும் இன்றி தென்னிந்திய மொழி சினிமாவில் கலக்கி வருகிறார் நடிகர் எஸ்.ஜே.சூர்யா. இவர் சமீபத்தில் தனது எக்ஸ் தள பதிவில் நடிகர் நானியிடம் மன்னிப்பு கோரி ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அது தற்போது ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றது.

நடிகர் நானியிடம் மன்னிப்பு கேட்ட எஸ்.ஜே.சூர்யா... எதற்காக தெரியுமா?

நடிகர் நானி, எஸ்.ஜே.சூர்யா

Published: 

02 Jun 2025 19:40 PM

நடிகர் எஸ்.ஜே.சூர்யா சினிமாவில் முன்னதாக சின்ன சின்ன கதாப்பாத்திரத்தில் நடித்துக்கொண்டிருந்தார். பிறகு நடிகர் அஜித் நடிப்பில் வெளியான வாலி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆனார். இந்தப் படத்தில் நடிகர் அஜித் இரட்டை வேடங்களில் நடித்து இருந்தார். ஒரு அஜித் நாயகனாகவும் மற்றொரு அஜித் வில்லனாகவும் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர். படத்தில் நாயகியாக நடிகை சிம்ரன் நடித்து இருந்தார். படம் திரையரங்குகளில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. அதனைத் தொடர்ந்து எஸ்.சூர்யா நடிகை விஜயை வைத்து குஷி படத்தை இயக்கினார். இந்தப் படத்தில் நடிகை ஜோதிகா நாயகியாக நடித்து இருந்தார். காதல் கதையை மையமாக வைத்து தேஜாவு பாணியில் உருவாகியிருந்த இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

பிறகு இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா தான் இயக்கும் படங்களில் அவரே நாயகனாக நடிக்கத் தொடங்கினார். அவ்வாறு அவர் இயக்கி நடித்த நியூ, அன்பே ஆருயிறே மற்றும் இசை ஆகிய படங்களும் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக இசை படத்தில் தானே இசையமைப்பாளராகவும் எஸ்.ஜே. சூர்யா பணியாற்றி இருந்தது குறிப்பிடத்தக்கது.

முழு நேர நடிகராக மாறிய எஸ்.ஜே.சூர்யா:

2016-ம் ஆண்டு இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளியான இறைவி படத்தில் எஸ்.ஜே. சூர்யா ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தார். இந்த படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து மெர்சல், மான்ஸ்டர், மாநாடு, டான், மார்க் ஆண்டனி, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், இந்தியன் 2 மற்றும் ராயன் என தொடர்ந்து படங்களில் நடிகராக நடித்து உள்ளார்.

நடிகர் எஸ்.ஜே.சூர்யா குணச்சித்திர வேடங்களில் நடிப்பதை விட நடிகர் எஸ்.ஜே.சூர்யா வில்லன் கதாப்பாத்திரத்தில் நடிப்பதை ரசிகர்கள் அதிகமாக வரவேற்கத் தொடங்கினர். இதன் காரணமாக தமிழ் மட்டும் இன்றி தென்னிந்திய மொழி படங்களிலும் தொடர்ந்து வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார் எஸ்.ஜே.சூர்யா.

நானியிடம் மன்னிப்பு கோரிய எஸ்.ஜே.சூர்யா:

கடந்த ஆண்டு தெலுங்கு சினிமாவில் நடிகர் நானியின் நடிப்பில் வெளியானது சரிபோதா சனிவாரம் படம். இந்தப் படத்தில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடித்து இருந்தார். இந்த நிலையில் தெலங்கானா அரசு கத்தர் திரைப்பட விருது சார்பாக இந்தப் படத்தில் நடித்த எஸ்.ஜே.சூர்யாவிற்கு சிறந்த துணை நடிகர் விருதை அறிவித்தது.

இதற்கு நடிகர் நானி வாழ்த்துகள் சார். நீங்கள் இந்தப் படத்திற்கு சிறந்த துணை நடிகர் மட்டும் இல்லை. நீங்கள் தான் இந்தப் படத்திற்கு எல்லாம். மேலும் இந்த விருதுக்கு நீங்கள் முழு தகுதியானவர் என்று பாராட்டி தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டு இருந்தர்.

நடிகர் எஸ்.ஜே.சூர்யா வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

இதற்கு தனது எக்ஸ் தள பக்கத்தில் நன்றி நானி சார் என்று மட்டும் எஸ்.ஜே.சூர்யா பதில் பதிவை வெளியிட்டார். ஆனால் தனது பதிவு முழுமையானதாக உணராத நடிகர் எஸ்.ஜே.சூர்யா மீண்டும் ஒரு எக்ஸ் தள பதிவை பதிவிட்டு அதில் நானியிடம் மன்னிப்பும் கோரியுள்ளார். இது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது.