இன்று மாலை யூத் படத்தின் ட்ரெய்லரை வெளியிடும் சிம்பு – அப்டேட் இதோ!
Ken Karunas Youth Movie Trailer: தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆகி தற்போது நாயகனாகவும் இயக்குநராகவும் அறிமுகம் ஆகி உள்ளார் கென் கருணாஸ். இவர் இயக்குந் நாயகனாக நடித்துள்ள யூத் படத்தின் ட்ரெய்லரை இன்று சிலம்பரசன் வெளியிட உள்ளார்.

யூத்
தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகரும் அரசியல்வாதியாகவும் வலம் வருகிறார் கருணாஸ். இவர் பாடகி கிரேஸை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இந்த தம்பதிக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். அதில் இரண்டாவதாக பிறந்தவர்தான் கென் கருணாஸ். இவர் குழந்தையாக இருக்கும் போதே தமிழ் சினிமாவில் நடிக்கத் தொடங்கிவிட்டார். அதனைத் தொடர்ந்து பலப் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். அதில் குறிப்பாக இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷின் நடிப்பில் வெளியான அசுரன் படத்தில் தனுஷின் மகனாக நடித்து இருந்தார். இந்தப் படத்தில் இவரது கதாப்பாத்திரம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து படங்களில் பிசியாக நடித்து வந்த நடிகர் கென் கருணாஸ் தற்போது சினிமாவில் அடுத்தடுத்த அவதாரங்களை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அதன்படி தற்போது கென் கருணாஸ் எழுதி இயக்கி நாயகனாக நடித்துள்ள படம் யூத். இந்தப் படத்தில் பாடல்களை எழுதி பாடவும் செய்துள்ளார் கென் கருணாஸ். ஒரே படத்தில் பல புது அவதாரங்களை எடுத்துள்ள கென் கருணாஸ் பார்த்து ரசிகர்கள் வியப்பில் உள்ளனர். மேலும் இந்தப் படம் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
கென் கருணாஸின் யூத் பட ட்ரெய்லர் அப்டேட்:
கென் கருணாஸ் இயக்கி நாயகனாக நடித்துள்ள யூத் படம் வருகின்ற 19-ம் தேதி மார்ச் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தில் கென் கருணாஸ் உடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். படம் திரையரங்குகளில் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் படத்தின் ட்ரெய்லர் தொடர்பான அப்டேட்கள் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. அதன்படி யூத் படத்தின் ட்ரெய்லர் இன்று 07-ம் தேதி மார்ச் மாதம் 2026-ம் ஆண்டு மாலை 5 மணிக்கு நடிகர் சிலம்பரசன் வெளியிட உள்ளதாக கென் கருணாஸ் தனது எக்ஸ் தள பக்கத்தில் போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளார். அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Also Read… ரிலீஸ் தேதியை முடிவு செய்தது ஜிவி பிரகாஷின் ஹேப்பி ராஜ் படக்குழு
கென் கருணாஸ் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
YOUTH Trailer from 7.03.2026
Thank you so much anna ⭐️ pic.twitter.com/oWGHN2Kw7E— Ken Karunaas (@KenKarunaas) March 6, 2026
Also Read… சாய் அபயங்கர் இசையில் வெளியானது மீண்டும் ஒரு இன்டிபென்டன்ட் சாங்… ரசிகர்களிடையே வைரலாகும் பவழ மல்லி!