Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

ஜெயிலர் 2 படத்தில் ரஜினிகாந்தின் சம்பளம் இதுவா? இணையத்தில் வைரலாகும் தகவல்

Actor Rajinikanth: இயக்குநர் நெல்சர் திலீப் குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ஜெயிலர் 2. இந்தப் படத்தில் பிசியாக நடித்து வரும் நடிகர் ரஜினி எவ்வளவு சம்பளம் அதற்காக வாங்கினார் என்பது குறித்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

ஜெயிலர் 2 படத்தில் ரஜினிகாந்தின் சம்பளம் இதுவா? இணையத்தில் வைரலாகும் தகவல்
ஜெயிலர் 2Image Source: social media
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 12 May 2025 17:46 PM

நடிகர் ரஜினிகாந்த் (Rajinikanth) நடிப்பில் கடந்த 2023-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ஜெயிலர். இந்தப் படத்தை இயக்குநர் நெல்சன் திலீப் குமார் (Nelson Dilip Kumar) இயக்கி இருந்தார். இந்தப் படத்தில் நடிகர் ரஜினிகாந்த் உடன் இணைந்து நடிகர்கள் விநாயகன், ரம்யா கிருஷ்ணன், தமன்னா பாட்டியா, வசந்த் ரவி, சுனில், யோகி பாபு மற்றும் மிர்னா மேனன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்திலும் நடிகர்கள் மோகன்லால், சிவ ராஜ்குமார் மற்றும் ஜாக்கி ஷெராஃப் ஆகியோர் சிறப்புத் தோற்றத்திலும் படத்தில் நடித்து இருந்தனர். இந்தப் படத்திற்கு இசையமைபாளர் அனிருத் ரவிசந்திரன் இசையமைத்திருந்தார். இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது. படம் திரையரங்குகளில் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நேர்மையான ஜெயிலராக இருந்து ஓய்வு பெற்று வீட்டில் குடிம்பத்தினருடன் அமைதியாக வாழ்ந்துகொண்டிருப்பார். இவருடன் இவரது மனைவி ரம்யா கிருஷ்ணன், மகன் வசந்த் ரவி, மருகள் மிருணாள் மேனன் மற்றும் பேரனுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருப்பார்.

படத்தில் ரஜினியின் மகன் வசந்த் ரவி நேர்மையான போலீஸாக இருப்பதால் கடத்தப்படுகிறார். அவரை பிணையமாக வைத்து வில்லர் விநாயகன் ரஜினியை பல தவறான காரியங்களை செய்யச் சொல்கிறார். ஆனால் ரஜினி தான் அதை எல்லாம் செய்வதுபோல நாடகம் ஆடி மொத்த குற்றவாளிகளையும் பிடிக்க திட்டம் போடுகிறார்.

இறுதியில் ரஜினி குற்றவாளிகளை பிடிக்கலாம் என்று நினைக்கும் போது தனது மகனும் பணத்திற்காக ஆசைப்பட்டு அந்த குற்றச்செயலில் ஈடுபட்டான் என்று தெரிகிறது. அதனை தொடர்ந்து அவரை என்ன செய்ய உள்ளார் என்பதே படத்தின் இரண்டாவது பாகமாக இயக்குநர் திட்டமிட்டுள்ளார்.

ஜெயிலர் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

ஜெயிலர் படம் முடிவடையும் போதே அதன் இரண்டாம் பாகத்திற்காக நாட்டுடனே இயக்குநர் லோகேஷ் கனகராஜ் முடித்திருப்பார். இந்தப் படத்தை தொடர்ந்து வேட்டையன் படம் ரஜினியின் நடிப்பில் வெளியானது. அதுவும் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக வசூல் ரீதியாக வரவேற்பைப் பெற்றது.

அதனை தொடர்ந்து உடனே இயக்குநர் லோகேஷ் கனகராஜ் உடன் கூலி படத்திற்காக நடிகர் ரஜினிகாந்த் கூட்டணி வைத்தார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து தற்போது ரிலீஸிற்காக போஸ்ட் புரடெக்‌ஷன் பணிகள் நடைப்பெற்று வருகின்றது. இதனை தொடர்ந்து உடனே நடிகர் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் 2 படப்பிடிப்பில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார்.

இந்த நிலையில் இந்தப் படத்தில் நடிப்பதற்காக நடிகர் ரஜினிகாந்த் எவ்வளவு சம்பளம் பெற்றார் என்பது குறித்த தகவல் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. அதன்படி நடிகர் ரஜினிகாந்த் இந்தப் படத்திற்காக 230 கோடி ரூபாய் சம்பளமாக பெற்றார் என்று தகவல்கள் உலா வருகின்றது.

இன்றுடன் முடிந்த கூவாகம் திருவிழா.. அதன் வரலாறு என்ன..?
இன்றுடன் முடிந்த கூவாகம் திருவிழா.. அதன் வரலாறு என்ன..?...
நீலாம்பரி ரோல் அவருடைய இன்ஸ்பிரேஷன்தான்- கே.எஸ். ரவிக்குமார்!
நீலாம்பரி ரோல் அவருடைய இன்ஸ்பிரேஷன்தான்- கே.எஸ். ரவிக்குமார்!...
ரஜினியின் கூலி படத்தில் வின்டேஜ் ரீமேக் பாடல் இடம்பெற்றுள்ளதாம்?
ரஜினியின் கூலி படத்தில் வின்டேஜ் ரீமேக் பாடல் இடம்பெற்றுள்ளதாம்?...
அணு ஆயுதப் போர்... இந்தியா-பாகிஸ்தான் பிரச்னை குறித்து டிரம்ப்
அணு ஆயுதப் போர்... இந்தியா-பாகிஸ்தான் பிரச்னை குறித்து டிரம்ப்...
அது ஒருநாள் பாகிஸ்தானையே அழித்துவிடும் - பிரதமர் மோடி அதிரடி
அது ஒருநாள் பாகிஸ்தானையே அழித்துவிடும் - பிரதமர் மோடி அதிரடி...
தண்ணீரும், இரத்தமும் ஒன்றாக முடியாது! பாகிஸ்தான் குறித்து PM மோடி
தண்ணீரும், இரத்தமும் ஒன்றாக முடியாது! பாகிஸ்தான் குறித்து PM மோடி...
பதிலடி உக்கிரமாக இருக்கும் - பிரதமர் மோடி எச்சரிக்கை
பதிலடி உக்கிரமாக இருக்கும் - பிரதமர் மோடி எச்சரிக்கை...
மூத்த குடிமக்களுக்கான FD - அதிக வட்டி வழங்கும் வங்கிகள்!
மூத்த குடிமக்களுக்கான FD - அதிக வட்டி வழங்கும் வங்கிகள்!...
ஆபரேஷன் சிந்தூர் வெற்றி மக்களுக்கு அர்ப்பணிப்பு - பிரதமர் மோடி
ஆபரேஷன் சிந்தூர் வெற்றி மக்களுக்கு அர்ப்பணிப்பு - பிரதமர் மோடி...
'செஸ் மதத்துக்கு எதிரானது' - ஆப்கானிஸ்தானில் விளையாடத் தடை
'செஸ் மதத்துக்கு எதிரானது' - ஆப்கானிஸ்தானில் விளையாடத் தடை...
மே 16 முதல் ஐபிஎல் மீண்டும் தொடங்குமா? 3 அட்டவணைகள் ரெடி..!
மே 16 முதல் ஐபிஎல் மீண்டும் தொடங்குமா? 3 அட்டவணைகள் ரெடி..!...