கதற கதற… சூப்பர் ஹிட் அடித்த டிராகன் ஒரு ஆண்டை நிறைவு செய்தது!

One Year Of Dragon Movie: தமிழ் சினிமாவில் கடந்த 2025-ம் ஆண்டு வெளியாகி மக்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றப் படம் டிராகன். பிரதீப் ரங்கநாதன் நடித்த இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி இன்றுடன் ஒரு ஆண்டை நிறைவடைந்ததைப் படக்குழு கொண்டாடி வருகின்றது.

கதற கதற... சூப்பர் ஹிட் அடித்த டிராகன் ஒரு ஆண்டை நிறைவு செய்தது!

டிராகன்

Updated On: 

21 Feb 2026 16:42 PM

 IST

தமிழ் சினிமாவில் கடந்த ஆண்டு வெளியாகி இளைஞர்களிடையே அதிக அளவில் வரவேற்பைப் பெற்றப் படம் டிராகன். கடந்த ஆண்டில் அதிக அளவில் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்ற தமிழ் படம் என்ற சாதனையைப் படத்தைதது. அதன்படி கடந்த 2025-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் டிராகன். இந்தப் படத்தை இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து எழுதி இயக்கி இருந்தார். இது இயக்குநர் அஸ்வத் மாரிமுத்துவின் இயக்கத்தில் வெளியான இரண்டாவது படம் என்பது குறுப்பிடத்தக்கது. இந்தப் படத்தின் பிரதீப் ரங்கநாதன் நாயகனாக நடித்து இருந்தார். இது இவர் நாயகனாக நடித்த இரண்டாவது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி இன்றுடன் ஓர் ஆண்டை நிறைவடைந்துள்ளது.

இந்தப் படத்தில் நடிகர் பிரதீப் ரங்கநாதனுக்கு மூன்று நடிகைகள் நாயகியாக நடித்து இருந்தனர். அதில் நடிகைகள் அனுபமா பரமேசுவரன் கல்லூரியில் படிக்கும் போது காதலியாகவும், கயடு லோஹர் வீட்டில் பார்க்கும் பெண் என்றும், இறுதியாக நடிகை இவானா வருவது போன்றும் நடித்து இருந்தனர். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது.

சூப்பர் ஹிட் அடித்த டிராகன் ஒரு ஆணை நிறைவு செய்தது:

இந்த டிராகன் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் சார்பாக தயாரிப்பாளர்கள் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ்.கணேஷ் மற்றும் கல்பாத்தி எஸ். சுரேஷ் ஆகியோர் இணைந்து தயாரித்து உள்ளனர். படத்தில் நடிகர் பிரதீப் ரங்கநாதனின் கதாப்பாத்திரம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இதில் படிக்காமல் சுற்றுவதுதான் கெத்து என்றும் அதனை தான் அனைவரும் ரசிக்கிறார்கள் என்று கல்லூரியில் அதிக அளவில் அரியர் வைக்கிறார்.

வாழ்க்கையில் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று நினைக்கும் பிரதீப் ரங்கநாதன் இறுதியில் வாழ்க்கையை புரிந்துகொண்டு எப்படி மாறுகிறார் என்பதே படத்தின் கதை. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி இன்றுடன் 1 ஆண்டு நிறைவடைந்ததை படக்குழு கொண்டாடி வருகின்றது.

Also Read… என் மகன் சூர்யாவின் சினிமா வாழ்க்கைக்காக எந்த சிபாரிசும் செய்தது இல்லை – சிவகுமார்

ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… தாய் கிழவி-னு டைட்டில் வைக்க காரணம் இதுதான் – இயக்குநர் சிவகுமார் முருகேசன் விளக்கம்!

ஒரு மில்லியன் ரீல்ஸ் - அல்லு அர்ஜூன் - லோகேஷ் கனகராஜ் கொண்டாட்டம்
நடிகர் சல்மான் கானின் தந்தை மருத்துவமனையில் அனுமதி
ஈரானை தாக்க தயாராகும் அமெரிக்கா - வெளியான பரபரப்பு தகவல்
கார்திக் சுப்புராஜ் படத்தில் நடிகர் சுஹாஸ்!