HBD Madhavan: ரசிகைகளின் ஆல் டைம் க்ரஸ் மாதவனுக்கு ஹேப்பி பர்த்டே!

Actor Madhavan Birthday: தமிழ் சினிமாவில் 90களில் ரசிகைகளின் கனவுக் நாயகனாக திகழ்ந்தவர் நடிகர் மாதவன். இவர் இன்று தனது 55-வது பிறந்த நாளை கொண்டாடி வருகின்றார். எத்தனை வயது ஆனாலும் ரசிகைகளின் ஆல்டைம் க்ரஸ் மாதவன் குறித்து தற்போது பார்க்கலாம்.

HBD Madhavan: ரசிகைகளின் ஆல் டைம் க்ரஸ் மாதவனுக்கு ஹேப்பி பர்த்டே!

மாதவன்

Published: 

01 Jun 2025 16:05 PM

 IST

தமிழ் சினிமா மட்டும் இன்றி பான் இந்திய சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் மாதவன். இவர் 90களில் பிறந்த ரசிகர்களின் கனவு நாயகனாக இருந்தார் என்று சொல்வதை விட தற்போது வரை ரசிகைகளின் கனவு நாயகனாக வலம் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடா மற்றும் இந்தி என பான் இந்திய மொழிகளில் இவர் படங்களில் நடித்து இருந்தாலும் தமிழில் இவர் நாயகனாக அறிமுகம் ஆனப் படம் அலைபாயுதே. 2000-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான இந்தப் படத்தை இயக்குநர் மணிரத்னம் இயக்கி இருந்தார். அறிமுகம் ஆன முதல் படத்திலேயே தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தார் நடிகர் மாதவன். குறிப்பாக ரசிகைகளின் மனதில் பட்டா போட்டு அமர்ந்தார் என்றே சொல்லலாம்.

இந்தப் படத்தில் நடிகை ஷாலினி அஜித் குமார் நாயகியாக நடித்து இருந்தார். இவர்களின் கெமிஸ்ட்ரி ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து இருந்தார். படத்தில் வந்த பாடல்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது.

மாதவனின் நடிப்பில் ஹிட் அடித்தப் படங்கள்:

அலைபாயுதே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகம் ஆன மாதவன் அதனைத் தொடர்ந்து மின்னலே, டும் டும் டும், கன்னத்தில் முத்தமிட்டால், ரன், அன்பே சிவம், நள தமயந்தி, பிரியமான தோழி, ஜே ஜே, ஆயுத எழுத்து, யாவரும் நலம், மன்மதன் அம்பு, வேட்டை, இறுதிச் சுற்று, விக்ரம் வேதா, மாறா என பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார்.

மாதவனின் திருமண வாழ்க்கை:

தமிழ் சினிமாவில் தான் நடித்த முதல் படமான அலைபாயுதே படத்தின் மூலம் அதிக ரசிகைகளை கொண்ட இவர் இந்தப் படத்தில் நடிப்பதற்கு முன்பே சரிதா என்பவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். படம் 2000 ஆண்டு வெளியாகி  இருந்த நிலையில் இவர் 1999-ம் ஆண்டே திருமணம் செய்துக்கொண்டார்.

இது ரசிகைகளுக்கு தெரிந்தபோது மிகவும் அதிர்ச்சியடைந்தனர் என்றே கூறலாம். மேலும் முதல் படம் வெளியாகும் முன்பு இவர் திருமணம் ஆனவர் என்று தெரியவேண்டாம் என்று படக்குழு நினைத்தாகவும் சில பேட்டிகளில் தெரிவித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் மாதவனின் இன்ஸ்டா பதிவு:

55-வயதிலும் கனவு நாயகனாக இருக்கும் மாதவன்:

2000-ம் ஆண்டு தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகம் ஆன மாதவன் 25 ஆண்டுகள் கடந்தும் ரசிகைகளின் கனவு நாயகனாக வலம் வருகிறார். 55 வயது ஆன நடிகர் மாதவனுக்கு ரசிகைகளின் எண்ணிக்கை அதிகம் என்றே சொல்லலாம். இந்த நிலையில் இன்று பிறந்த நாளை கொண்டாடும் நடிகர் மாதவனுக்கு பிரபலங்கலும் ரசிகர்களும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Follow Us
Related Stories
கர படத்தில் மமிதா பைஜுவின் கதாப்பாத்திரம் முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் – இயக்குநர் விக்னேஷ் ராஜா
சூர்யாவின் அந்தப் படம் வாழ்க்கையைப் பற்றி எனது முழு கண்ணோட்டத்தையும் மாற்றியது – இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து
நிஜ வாழ்க்கையிலும் பாரு என்னிடம் நடிப்பதாகவே எனக்கு இப்போதும் தோன்றுகிறது – விஜய் சேதுபதி
இயக்குநராக நான் இயக்கிய படங்களைவிட கருப்பு 15 மடங்கு பெரிய படம் – இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி
கர படம் பத்தோடு பதினொன்னா இருக்காது – இயக்குநர் விக்னேஷ் ராஜா
Silambarasan: என்ன வெயிட் போடா சொன்னாங்க.. அந்த படத்தில் நான் நடிக்கமாட்டேனு சொன்னே – சிலம்பரசன் உடைத்த உண்மை!
ஏப்ரல் 1 முதல் பான் கார்டு விதிகளில் வரவிருக்கும் மாற்றம்
தாய், மகளைக் கடித்து குதறிய வளர்ப்பு நாய்.. வேடிக்கை பார்த்த உரிமையாளர்கள்..
ஏப்ரல் 1 முதல் உங்கள் சம்பளம் மாறப்போகிறது!.. புதிய விதிகள், வரி மாற்றங்கள்..
இனி இரவிலும் சூரிய ஒளியை பெறலாம்.. விண்வெளியில் கண்ணாடி அமைக்கும் ஸ்டார்ட்அப் நிறுவனம்..