ரஜினிகாந்த் நடித்ததில் கமல் ஹாசனுக்கு பிடித்தப் படம்… அவரே சொன்ன விசயம்
Actor Kamal Haasan: தமிழ் சினிமா தொடங்கிய காலத்தில் இருந்தே நடிகர்களுக்கு இடையேயான போட்டி தொடர்ந்து நடந்துக் கொண்டே தான் இருக்கிறது. அவர்களுக்குள் போட்டி அதிகம் இருபப்தை விட ரசிகர்களுக்கு இடையே போட்டி அதிகம் நிலவுவது தற்போது வரை நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

நடிகர் கமல் ஹாசன் (Kamal Haasan) தமிழ் சினிமாவில் 50 ஆண்டுகளுக்கு மேலாக நடித்து வருகிறார். உலக மக்களால் உலக நாயகன் என்று அன்புடன் அழைக்கப்படும் கமல் ஹாசன் தற்போது தக் லைஃப் படத்தில் நடித்துள்ளார். இயக்குநர் மணிரத்னம் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இவர்கள் இருவரும் 37 வருடங்களுக்கு முன்னதாக இணைந்து நாயகன் படத்தில் வேலை செய்தனர். அதனைத் தொடர்ந்து எப்போ இந்த கூட்டணி அமையும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் தற்போது இந்த கூட்டணி அமைந்துள்ளது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படத்தில் நடிகர் கமல் ஹாசன் உடன் இணைந்து நடிகர் சிலம்பரசனும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் வருகின்ற ஜூன் மாதம் 5-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்த நிலையில் படத்தின் புரமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. அந்த வகையில் படக்குழு கேரளா, மும்பை, ஹைதரபாத் என்று பறந்துகொண்டே இருக்கின்றனர். இந்த நிலையில் சமீபத்தில் நடிகர் கமல் ஹாசன் அளித்த பேட்டி ஒன்றில் அவரிடம் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான எந்தப் படம் பிடிக்கும் என்று கேள்வி எழுப்பப்பட்டது.
தக் லைஃப் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
#ThuglifeAudioLaunch tomorrow from 5 PM
#Thuglife #ThuglifeFromJune5 #KamalHaasan #SilambarasanTRA #ManiRatnam Film
An @arrahman Musical@ikamalhaasan @SilambarasanTR_ #Mahendran @bagapath @trishtrashers @AishuL_ @AshokSelvan @abhiramiact @C_I_N_E_M_A_A #Nasser… pic.twitter.com/OJR97dAXZd— Raaj Kamal Films International (@RKFI) May 23, 2025
ரஜினிகாந்த் நடித்ததில் கமல் ஹாசனுக்கு பிடித்தப் படம்:
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான மூன்று படங்களின் பெயர்கள் கொடுத்து அதில் எது பிடிக்கும் என்று கேட்கப்பட்டது. அந்த லிஸ்டில் தளபதி, பாட்ஷா அல்லது முள்ளும் மலரும் என்ற படங்களை வைத்திருந்தனர். அதற்கு பதிலளித்த நடிகர் கமல் ஹாசன் தனக்கு ரஜினிகாந்த் நடித்தப் படத்தில் பிடித்தது முள்ளும் மலரும் என்று பதிலளித்துள்ளார். இது ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றது.
ரசிகர்களிடையே நிலவும் போட்டி:
எம்.ஜி.ஆர். மற்றும் சிவாஜி காலத்தில் இருந்தே நடிகர்களிடையே போட்டி நிலவுவதை விட ரசிகரக்ளிடையே போட்டி அதிகமாக இருந்தது. இணையதள பயன்பாட்டிற்கு முன்பு இருந்த காலத்தில் திரையரங்குகளில் படங்கள் வெளியாகும் போதுதான் ரசிகர்களிடையே மோதல் ஏற்படும்.
ஆனால் தற்போது இணையதள பயன்பாட்டிற்கு பிறகு படங்களின் அறிவிப்பு வெளியாகும் போதே யார் படம் ஹிட் அடிக்கும் என்று ரசிகர்கள் இணையத்தில் சண்டையிட்டு வருகின்றனர். இதில் தொடக்கப்புள்ளி கமல் ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் தான். ஆனால் நிஜத்தில் அவர்கள் அனைவரும் நண்பர்களாக தான் இருந்து வருகிறார்கள்.