தமிழ் சினிமாவில் சூப்பர் ஹிட் அடித்த திருட்டு பயலே படம் 20 ஆண்டுகளை கடந்தது

20 Years Of Thiruttu Payale Movie: தமிழ் சினிமாவில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றப் படம் திருட்டு பயலே. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்த நிலையில் தற்போது 20 ஆண்டுகளை நிறைவு செய்ததாக படக்குழு அறிவித்து உள்ளது.

தமிழ் சினிமாவில் சூப்பர் ஹிட் அடித்த திருட்டு பயலே படம் 20 ஆண்டுகளை கடந்தது

திருட்டு பயலே

Published: 

21 Apr 2026 18:33 PM

 IST

தமிழ் சினிமாவில் கடந்த 21-ம் தேதி ஏப்ரல் மாதம் 2006-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் திருட்டு பயலே. டார்க் காமெடி த்ரில்லர் பாணியில் வெளியான இந்தப் படத்தினை இயக்குநர் சுசி கணேசன் எழுதி இயக்கி இருந்தார். இந்தப் படத்தில் நடிகர் ஜீவன் நாயகனாக நடித்து இருந்த நிலையில் அவருடன் இணைந்து நடிகர்கள் அப்பாஸ், சோனியா அகர்வால், மாளவிகா, விவேக், மனோஜ் கே. ஜெயன், சுசி கணேசன், சார்லி, வினோத் ராஜ், நாகராஜ், காயத்திரி என பலர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர். மேலும் இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் தமிழ் சினிமாவில் வித்யாசமான கதையில் வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்ததும் குறிப்பிடத்தக்கது.

மக்கலிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற இந்த திருட்டு பயலே படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான AGS என்டர்டெயின்மென்ட் சார்பாக தயாரிப்பாளர்கள் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ்.கணேஷ் மற்றும் கல்பாத்தி எஸ். சுரேஷ் ஆகியோர் இணைந்து தயாரித்து உள்ளனர். இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் பரத்வாஜ் இசையமைத்து இருந்த நிலையில் படத்தைப் போல பாடல்களும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

சூப்பர் ஹிட் அடித்த திருட்டு பயலே படம் 20 ஆண்டுகளை கடந்தது:

சிறு வயதிலேயே தனது தந்தை லஞ்சம் வாங்குவதைப் பார்த்து வளர்கிறார் நடிகர் ஜீவன். இவர் சின்ன வயதில் தனது தந்தையில் குற்றச் செயல்களைப் பார்த்தே தொடர்ந்து தானும் குற்றங்களை செய்யத் தொடங்குகிறார். இதனால் வீட்டைவிட்டு வெளியேற்றப்படுக் ஜீவன் தனது அத்தை வீட்டில் சென்று வாழ்கிறார். அங்கு இருக்கும் போது அப்பாஸ் மற்றும் மாளவிகா இருவரும் தங்களது மனைவி மற்றும் கணவருக்கு துரோகம் செய்து திருமணத்தை மீறிய உறவில் இருக்கிறார்கள்.

இவர்கள் இருவரும் நெறுக்கமாக இருப்பதை வீடியோ எடுத்து மாளவிகாவை மிரட்டி பணம் பறித்து மிகவும் மகிழ்ச்சியாக வாழ்கிறார் நடிகர் ஜீவன். இப்படி இருக்கும் நிலையில் ஜீவனை ஒரு லவ் ட்ராப்பில் சிக்கவைத்து மாளவிக்கா அவரை எப்படி பழி வாங்குகிறார் என்பதே படத்தின் கதை. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி இன்றுடன் 20 ஆண்டுகளை கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read… 8 ஆண்டுகளைக் கடந்தது மகேஷ் பாபுவின் சூப்பர் ஹிட் பரத் அனே நேனு படம்

திருட்டு பயலே படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… பெல்ஜியம் கார் ரேஸில் 2வது இடத்தை பிடித்த அஜித்தின் அணி.. கொண்டாடும் ரசிகர்கள்!

Follow Us
எங்கள் விமானம் தாக்கப்படும் அபாயம் - பாகிஸ்தான் சென்ற ஈரான் குழுவினர் அச்சம்
போரைப் போல மோதிக்கொள்ளும் சிம்பான்சிகள் - காரணம் என்ன?
UPI-ல் ரூ.10,000-க்கு மேல் பணம் அனுப்ப ஒரு மணி நேரம் காத்திருக்க வேண்டுமா?.. ஆர்பிஐ வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
சீனா தயாரித்த செயற்கைக்கோள் மூலம் கண்காணிப்பு? எழுந்த புதிய பாதுகாப்பு கவலை..