ஆர்யாவின் ஸ்பை த்ரில்லர் படமான மிஸ்டர் எக்ஸ் எப்படி இருக்கு? படம் பார்த்தவர்களின் விமர்சனம் இதோ!

Mr. X Movie X Review: தமிழ் சினிமாவில் நடிகர் ஆர்யா மற்றும் பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்து உள்ள படம் மிஸ்டர் எக்ஸ். இந்தப் படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ள நிலையில் படத்தினைப் பார்த்தவர்கள் தங்களது விமர்சனத்தை எக்ஸ் தள பதிவில் தெரிவித்துள்ளனர்.

ஆர்யாவின் ஸ்பை த்ரில்லர் படமான மிஸ்டர் எக்ஸ் எப்படி இருக்கு? படம் பார்த்தவர்களின் விமர்சனம் இதோ!

மிஸ்டர் எக்ஸ்

Published: 

17 Apr 2026 11:00 AM

 IST

தமிழ் சினிமாவில் ஸ்பை த்ரில்லர் பாணியில் இன்று 17-ம் தேதி ஏப்ரல் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் மிஸ்டர் எக்ஸ். இந்தப் படத்தில் நடிகர் ஆர்யா நாயகனாக நடித்து இருந்த நிலையில் இவருடன் இணைந்து நடிகர்கள் கௌதம் ராம் கார்த்திக், மஞ்சு வாரியர், சரத்குமார், அதுல்யா ரவி, அனகா, ரைசா வில்சன், ஜெயபிரகாஷ், காளி வெங்கட் என பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். ஆக்‌ஷன் த்ரில்லர் பாணியில் உருவாகி உள்ள இந்தப் படத்தினை இயக்குநர் மனு ஆனந்த் எழுதி இயக்கி உள்ளார். இந்தப் படத்தை தயாரிப்பு நிறுவனங்களான பிரின்ஸ் பிக்சர்ஸ் மற்றும் மேவரிக் மூவிஸ் பிரைவேட் லிமிடெட் சார்பாக தயாரிப்பாளர்கள் எஸ். லக்ஷ்மன் குமார் மற்றும் வினீத் ஜெயின் ஆகியோர் இணைந்து தயாரித்து உள்ளனர்.

மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் திபு நினன் தாமஸ் இசையமைத்துள்ளார். மேலும் இந்தப் படத்தை இன்று திரையரங்குகளில் பார்த்தவர்கள் தங்களது விமர்சனத்தை தெரிவித்து வருகின்றனர்.

மிஸ்டர் எக்ஸ் படத்தின் விமர்சனம் இதோ:

மிஸ்டர் எக்ஸ் ஒரு ஸ்பை ஆக்‌ஷன் த்ரில்லர் பாணியில் உருவாகி உள்ளது. எதிர்பாராத பல ட்விஸ்ட் அண்ட் டர்ன்ஸ்கள் உள்ளது. பிரமாண்டமான ஆக்‌ஷன் காட்சிகளில் ஆர்யா மிகவும் சிறப்பாக உள்ளது. அதிலும் குறிப்பாக கௌதம் ராம் கார்த்தியின் ஆக்‌ஷன் காட்சிகள் மிகவும் சர்ப்ரைஸாக இருந்தது.

மிஸ்டர் எக்ஸ் படத்தின் விமர்சனம் இதோ:

மிஸ்டர் எக்ஸ் படத்தின் சண்டைக் காட்சிகள் பிரமாதம். படத்தின் எடிட்டிங் சிறப்பாக உள்ளது. மேலும் திரைக்கதை நன்றாக உள்ளது. அனைத்து கதாப்பாத்திரங்களுக்கும் முக்கியதுவம் கொடுக்கப்பட்டுள்ளது. திபு நினன் தாமஸின் இசை சிறப்பாக உள்ளது.

மிஸ்டர் எக்ஸ் படத்தின் விமர்சனம் இதோ:

மிஸ்டர் எக்ஸ் படத்திற்கு 3.5 கொடுக்கலாம். நேர்த்தியாக உருவாக்கப்பட்ட, எளிதில் புரிந்துகொள்ளக்கூடிய ஒரு உளவாளி திரில்லர் திரைப்படம். இதன் விறுவிறுப்பான திரைக்கதை இதற்குப் பெரிதும் கைகொடுக்கிறது. படம் முழுவதும் ஒரு கத்திமுனை போலப் பாய்ந்து செல்வதால், ஒரு கணம் கூட சலிப்பு ஏற்படாது.

Also Read… 22 ஆண்டுகளுக்குப் பிறகு சூர்யா – த்ரிஷா ஒன்னா நடிக்கிறாங்க… ஆர்.ஜே.பாலாஜி

மிஸ்டர் எக்ஸ் படத்தின் விமர்சனம் இதோ:

மிஸ்டர் எக்ஸ் பார்க்க நேர்ந்தது, ஒரு அட்டகாசமான ஹாலிவுட் பாணி உளவாளி திரில்லர். முதல் காட்சியிலிருந்து இறுதி வரை எந்த விதமான விலகலும் இல்லை, மேலும் ஒரு நல்ல எதிர்பாராத உச்சக்கட்டத்தையும் கொண்டுள்ளது. பிரம்மாண்டமான நட்சத்திரப் பட்டாளமும், இயக்குனர் மனு ஆனந்தின் ஸ்டைலான சண்டைக் காட்சிகளும் உள்ளன. இந்த வார இறுதியில் திரையரங்குகளில் பார்க்க வேண்டிய படம்.

Also Read… நான் செய்த பெரிய தவறாக முத்துராமலிங்கம் படத்தை பார்க்கிறேன் – கௌதம் ராம் கார்த்திக்

Follow Us
கோஸ்ட் டெலிவரி மோசடி: LPG சிலிண்டர் புக்கிங்கில் புதிய சிக்கல்..
கும்பமேளா வைரல் மோனாலிசா போஸ்லே காணவில்லை .. ஃபர்மான் வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ..
ஆண்ட்டி என அழைத்ததால் மன உளைச்சல் - நீதிமன்றம் வழங்கிய பரபரப்பு தீர்ப்பு
சாலையில் குட்காவை துப்பிய இந்திய சுற்றுலா பயணிகள் - சுத்தம் செய்ய வைத்த நேபாளி