ஜென்டில்மேன் டிரைவர் ஆஃப் தி இயர் 2025 விருதை வென்றார் நடிகர் அஜித்குமார்
Gentleman Driver of the Year 2025: சினிமாவில் தொடர்ந்து நடித்துவரும் நடிகர் அஜித் குமார் அவரது கார் ரேஜிங்கையும் தொடர்ந்து செய்து வருகிறார். இந்த நிலையில் நடிகர் அஜித் குமாருக்கு வெனிசில் உயரிய விருது ஒன்றை மோட்டார் ஸ்போர்ட்ஸ்காக வழங்கு அந்த நாடு கௌரவித்துள்ளது.

நடிகர் அஜித்குமார்
கோலிவுட் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித் குமார். இவர் சினிமாவில் நாயகனாக நடிப்பது மட்டும் இன்றி தனது தனது கார் ரேசிங்கிலும் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார். சினிமாவில் 30 ஆண்டுகளுக்கு மேலாக நடிகராக வலம் வரும் அஜித் குமார் தொடர்ந்து படங்களில் நடிப்பதைத் தாண்டி எந்தவிதமான பொது நிகழ்ச்சிகள் மற்றும் சினிமா தொடபான விழாக்களிலும் கலந்துகொள்ளமலே இருந்தார். இதன் காரணமாக படங்களை தவிற வேற எந்த விழக்களிலும் அஜித் குமாரை காணாமல் இருந்தனர் ரசிகர்கள். இதனைத் தொடர்ந்து நடிகையும் அஜித் குமாரின் மனைவியுமான ஷாலினி அஜித் குமார் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனக்கு என்று ஒரு கணக்கை தொடங்கினார். அதில் தனது குழந்தைகள் புகைப்படம் மற்றும் தனது கணவர் அஜித்குமாரின் புகைப்படத்தை தொடர்ந்து பதிவிட்டு வருவது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ந்து தான் நடிக்கும் படங்களின் இசை வெளியீட்டு விழா மற்றும் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கூட கலந்துகொள்ளாத நடிகர் அஜித்குமார் கார் ரேசில் தீவிரமாக ஈடுபட்ட போது தனது ரசிகர்களிடையேயும் மக்களிடையும் மோட்டார் ஸ்போர்ட்ஸ் குறித்து புரிதல் வேண்டும் என்பதற்காக அதுகுறித்து பலப் பேட்டிகளில் பேசி வருகிறார். இந்த பேட்டிகளின் போது அவரது அடுத்தடுத்தப் படங்கள் குறித்த அப்டேட்களையும் அவ்வபோது நடிகர் அஜித்குமார் தெரிவித்து வருகிறார்.
ஜென்டில்மேன் டிரைவர் ஆஃப் தி இயர் 2025 விருதை வென்றார் அஜித்:
இந்த நிலையில் மோட்டார் ஸ்போர்ட்சில் தீவிரமாக ஆர்வம் கொண்டுள்ள நடிகர் அஜித் குமார் பல கார் ரேஸ் போட்டிகளில் கலந்துகொண்டு விருதுகளைப் பெற்று இந்தியாவிற்கே பெருமை சேர்த்து வருகிறார். இந்த நிலையில் நடிகர் அஜித் குமாரை கௌரவிக்கும் விதமாக வெனிஸ் நாட்டில் ஜென்டில்மேன் டிரைவர் ஆஃப் தி இயர் 2025 விருதை அளித்து கௌரவித்துள்ளனர்.
இந்த விருது விழாவிற்கு நடிகர் அஜித்குமார் தனது குடும்பத்தினருடன் கலந்துகொண்டனர். இது தொடர்பான புகைப்படங்களை அஜித்குமாரின் மேனேஜர் சுரேஷ் சந்திரா தனது எக்ஸ் தள பத்தில் பதிவிட்டுள்ளார். அது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
Also Read… ரவி மோகனின் படத்திற்கு ப்ரோ கோட் பெயரை பயன்படுத்த விதித்த தடை நீட்டிப்பு!
சுரேஷ் சந்திரா வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
Ajith Kumar honoured as the “Gentleman Driver of the Year 2025” by @SROMotorsport in Venice, celebrating the legacy of the iconic entrepreneur and racer Philippe Charriol. @Akracingoffl pic.twitter.com/hvEJB3eySN
— Suresh Chandra (@SureshChandraa) November 23, 2025
Also Read… பைசன் முதல் டீசல் வரை… இந்த வீக்கெண்ட் ஓடிடியில் என்ன பார்க்கப் போறீங்க?