ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஆக்ஷன் கிங் அர்ஜூன் நடிக்கும் படத்தின் டைட்டில் என்ன தெரியுமா? அப்டேட் இதோ!
Action King Arjuns Next Movie Update: தென்னிந்திய சினிமாவில் ரசிகர்களால் அன்புடன் ஆக்ஷன் கிங் என்று அழைக்கப்படுவர் நடிகர் அர்ஜூன். இவர் கதையின் நாயகனாக நடிக்கும் படத்தின் டைட்டிலை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

ப்ளாஸ்ட்
தமிழ் சினிமா ரசிகர்களிடையே மட்டும் இன்றி தென்னிந்திய சினிமா ரசிகர்கள் அனைவரும் ஆக்ஷன் கிங் என்று அன்புடம் அழைக்கப்படுபவர்தான் நடிகர் அர்ஜுன். இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்களிடையே சூப்பர் டூப்பர் ஹிட் அடித்துள்ளது. தொடர்ந்து காவல் துறை அதிகாரியாகவும் தேசப்பக்தி அதிகம் உள்ள நபராகவும் நடிகர் அர்ஜுன் அதிக அளவில் படங்களில் நடித்து உள்ளார். மேலும் இவது இயக்கத்தில் வெளியான படங்களும் தேசப்பக்தி சார்ந்ததாகவே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து தமிழ் சினிமாவில் மட்டும் இன்றி தென்னிந்திய மொழிகளிலும் நடிகர் அர்ஜுன் பலப் படங்களில் நடித்து உள்ளார். சமீப காலமாக கதையின் நாயகனாக இல்லாமல் வில்லனாகவும் சிறப்பு கதப்பாத்திரங்களிலும் நடித்து வரும் நடிகர் அர்ஜூன் தற்போது மீண்டும் கதையின் நாயகனாக நடிக்கத் தொடங்கியுள்ளார்.
அதன்படி நடிகர் அர்ஜூன் நடிக்கும் இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் எண்டர்டெய்ன்மெண்ட் சார்பாக தயாரிப்பாளர் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ் மற்றும் கல்பாத்தி எஸ். சுரேஷ் ஆகியோர் இணைந்து தயாரித்து உள்ளனர். இது ஏஜிஎஸ் எண்டெர்டெய்ன்மெண்ட் சார்பாக தயாரிக்கப்படும் 28-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.
அர்ஜுனின் படத்திற்கு ப்ளாஸ்ட் என்று பெயர் வைத்த படக்குழு:
இயக்குநர் சுபாஷ் கே ராஜ் எழுதி இயக்கி உள்ள இந்தப் படத்தில் நடிகர் ஆக்ஷன் கிங் அர்ஜுன் உடன் இணைந்து நடிகர்கள் பிரீத்தி முகுந்தன் மற்றும் அபிராமி இருவரும் முன்னணி வேடத்தில் நடித்து உள்ளனர். மேலும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பூஜையுடன் தொடங்கியது. இந்த நிலையில் இன்று படத்தின் டைட்டிலை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி படத்திற்கு தற்போது ப்ளாஸ்ட் என்று படக்குழு தலைப்பை வைத்துள்ளது. இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Also Read… Mamitha Baiju: போர் தொழில் படத்தை காட்டிலும் கர படம் வித்தியாசமாக இருக்கும் – மமிதா பைஜூ!
ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
All set to #Blast…
In theatres very soon 💣#KalpathiSAghoram #KalpathiSGanesh #KalpathiSSuresh@archanakalpathi @aishkalpathi @venkat_manickam@akarjunofficial @PreityMukundan @abhiramiact @highonkokken @arjunchdmbrm @subashraj1197 @RaviBasrur @Arunkrishna_21 @PradeepERagav… pic.twitter.com/srgUn60FWL— AGS Entertainment (@Ags_production) April 25, 2026
Also Read… ஏக்கம்தான் ஆனால்.. அஜித் சாருடன் படம் இயக்க முடியாமல்போனது – இயக்குநர் விக்னேஷ் சிவன் பேச்சு!