விஜய் சாருக்காக ஒரு கதை எழுதியிருந்தேன்.. ஆனால் – அபிஷன் ஜீவிந்த் ஓபன் டாக்!

Abishan Jeevinth About Thalapathy Vijay: தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குநராகவுஜம், நடிகராகவும் மக்களால் அறியப்படுபவர் அபிஷன் ஜீவிந்த். சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசியிருந்த இவர், தளபதி விஜய்க்காக கதை ஒன்றை எழுதியிருந்ததாகவும், அது நடக்காமல் போன விஷயம் குறித்து வெளிப்படையாக பேசியிருந்தார். அதுகுறித்து விவராமைக் பார்க்கலாம்.

விஜய் சாருக்காக ஒரு கதை எழுதியிருந்தேன்.. ஆனால் - அபிஷன் ஜீவிந்த் ஓபன் டாக்!

தளபதி விஜய் மற்றும் அபிஷன் ஜீவிந்த்

Updated On: 

07 May 2026 19:03 PM

 IST

கடந்த 2025ம் ஆண்டில் வெளியான டூரிஸ்ட் பேமிலி (Tourist Family) என்ற படத்தின் மூலம் இயக்குநராக நுழைந்தவர் அபிஷன் ஜீவிந்த் (Abishan Jeevinth). இவர் இந்த படத்தில் ஒரு சிறு வேடத்திலும் நடித்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருந்தார். இந்த படமானது இவருக்கு எதிர்பாராத வரவேற்பை கொடுக்க, இப்படத்தை அடுத்ததாக கதாநாயகனாகவே படங்களில் நடிக்க தொடங்கிவிட்டார். சூப்பர் ஸ்டாரின் மகள் சௌந்தர்யா ரஜினிகாந்தின் தயாரிப்பில் வெளியான வித் லவ் (With Love) என்ற படத்தில், ஹீரோவாக அவர் அறிமுகமாகியிருந்தார். இந்த படத்தில் அவர் அனஸ்வரா ராஜனுடன் (Anaswara Rajan) இணைந்து நடித்து பிரபலமாகியிருந்தார். இந்த படத்தை அடுத்ததாகவும் ஹீரோவாக புது படம் ஒன்றில் நடிக்கவுள்ளதாகவும் வட்டாரங்கள் கூறுகிறது.

இந்த படத்தை முடித்த பிறகு பெரிய ஹீரோவை கொண்டு ஒரு கமர்ஷியல் ஹிட் படத்தை இயக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார். அந்த வகையில், அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டிருந்த அபிஷன் ஜீவிந்த், தளபதி விஜய்க்காக (Thalapathy Vijay) தான் எழுதிய கதை குறித்து வெளிப்படையாக பகிர்ந்துள்ளார் அது குறித்து விவரமாக பார்க்கலாம்.

இதையும் படிங்க: இன்று பூஜையுடன் தொடங்குகிறது கார்த்தியின் தெலுங்கு படம்

தளபதி விஜய்க்காக கதை எழுதியது குறித்து இயக்குநரும் நடிகருமான, அபிஷன் ஜீவிந்த் சொன்ன விஷயம்:

அந்த நிகழ்ச்சியில் அபிஷன் ஜீவிந்த் பேசுகையில், “நான் விஜய் சாருக்காக ஒரு கதை முன்பே எழுதியிருந்தேன். கரெக்ட்டா என்னது நேரம் பார்த்து, அவர் அரசியலுக்கு சென்றுவிட்டார். அவருக்காக ஒரு ஆக்ஷன் ஜானரில் ஒரு கதை எழுதியிருந்தேன். மேலும் அவருகுறித்த நிறைய ரெஃபெரென்ஸ் டூரிஸ்ட் பேமிலி படத்திலும் வைத்திருந்தோம், தளபதியை யாருக்குத்தான் பிடிக்காது!” என கலகலப்பாக அந்த நிகழ்ச்சியில் அவர் பேசியிருந்தார். அந்த வகையில் இதுகுறித்த தகவல் ரசிகர்கள் மத்தியில் வைரலாகப் பரவிவருகிறது.

இதையும் படிங்க: கருப்பு பட ட்ரெய்லர் ரெடி.. ஆனால் அரசியல் குழம்பங்கள் பெரிதாக இருக்கிறது – திடீரென வீடியோ வெளியிட்ட ஆர்.ஜே.பாலாஜி!

இயக்குநரும், நடிகருமான அபிஷன் ஜீவிந்த் தற்போது மீண்டும் நடிகராகவே ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை அறிமுக இயக்குநர் இயக்கவுள்ளதாகவும், இதில் அபிஷன் ஜீவிந்துடன் கன்னட நடிகர் சிவராஜ் குமார் மிக முக்கிய வேடத்தில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது. இப்படமானது மகன் மற்றும் தந்தைக்கு இடையே உள்ள பாசப்போராட்டம் குறித்த கதைக்களத்தில் தயாராகவுள்ளதாம். இப்படத்தின் ஷூட்டிங் பணிகள் வரும் 2026 மே இறுதியில் அல்லது ஜூன் தொடக்கத்தில் ஆரம்பமாகும் என கூறப்படுகிறது. இப்படம் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தளபதி விஜய் குறித்த அபிஷன் ஜீவீந்த் வெளியிட்ட பதிவு:

Follow Us
'நாளைய தீர்ப்பு' முதல் 2026 அரசியல் வெற்றி வரை.. விஜய்யின் வாழ்வில் தொடரும் ஆச்சர்யங்கள்!
ராஜமௌலியின் 'வாரணாசி' படப்பிடிப்பில் நீர் நெருக்கடி.. 150 தண்ணீர் லாரி கோரிக்கையை நிராகரித்த குடிநீர் வாரியம்!
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனைவிக்காக பைக்கையே ஆம்புலன்ஸாக மாற்றிய கணவர் - நெகிழ்ச்சி சம்பவம்
560 நாட்களாக செல்போன் டவர் மீது ஏறி போராட்டம் நடத்திய விவசாயி