Abhishan Jeevinth: ரஜினிகாந்த் சொன்ன வார்த்தை.. மேடையில் நெகிழ்ச்சியாக பேசிய அபிஷன் ஜீவிந்த்!

Abhishan Jeevinth About Superstar Rajinikanth: வித் லவ் திரைப்படத்தின் மூலம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழி சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளவர் அபிஷன் ஜீவிந்த். இவர் சமீபத்தில் நடந்த வித் லவ் பட சக்ஸஸ் சந்திப்பில், ரஜினிகாந்த் குறித்து நெகிழ்ச்சியாக பேசியுள்ளார். அது குறித்து பார்க்கலாம்.

Abhishan Jeevinth: ரஜினிகாந்த் சொன்ன வார்த்தை.. மேடையில் நெகிழ்ச்சியாக பேசிய அபிஷன் ஜீவிந்த்!

ரஜினிகாந்த் மற்றும் அபிஷன் ஜீவிந்த்

Updated On: 

13 Feb 2026 13:21 PM

 IST

தமிழில் தற்போது அறிமுக நடிகர்களாக மிகவும் பிரபலமாக இருந்துவருபவர் அபிஷன் ஜீவிந்த் (Abhishan Jeevinth). இவர் நடிப்பில் கடந்த 2026 பிப்ரவரி 6ம் தேதியில் வெளியான திரைப்படம்தான் வித் லவ் (With Love). எமோஷனல் காதல் கதைக்களத்தில் வெளியான இப்படம் திரையரங்குகளில் மக்களியிடையே பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்றுவருகிறது. இப்படத்தை அறிமுக இயக்குநர் மதன் (Madhan) இயக்க, தயாரிப்பாளராக சௌந்தர்யா ரஜினிகாந்த் (Soundarya Rajinikanth) இப்படத்தை தயாரித்துள்ளார். இந்த படத்தில் அபிஷன் ஜீவிந்த் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை அனஸ்வரா ராஜன் (Anaswara Rajan) நடித்திருந்தார். இவர்கள் இருவரின் ஜோடி இப்படத்தில் அருமையாக அமைந்திருந்தது. இந்த படமானது வெளியாகி 2 வாரத்தை எட்டியுள்ள நிலையில், திரையரங்குகளில் இன்னும் சிறப்பாக வரவேற்பைப் பெற்றுவருகிறது.

இந்நிலையில் நேற்று 2026 பிப்ரவரி 12ம் தேதியில் இப்படத்தின் வெற்றிவிழா சென்னையில் கொண்டாடப்பட்டிருந்தது. அந்த நிகழ்ச்சியில் பல பிரபலங்களும் கலந்துகொண்டிருந்தனர். அப்போது மேடையில் பேசிய அபிஷன் ஜீவிந்த், ரஜினிகாந்த் தன்னைப்பை பற்றி பெருமையாக பேசியதாகி நேரடியாக தெரிவித்திருந்தார்.

இதையும் படிங்க: லவ் என்றாலே போராட்டம் தானே.. காதல் குறித்து பிரதீப் ரங்கநாதன் பரபரப்பு பேச்சு!

ரஜினிகாந்த் குறித்து அபிஷன் ஜீவிந்த் பேசிய விஷயம் :

அந்த நிகழ்ச்சியின்போது பேசிய அபிஷன் ஜீவிந்த், அதில் “நான் எல்லா நேர்காணல்களில், எனக்கு நடிகராக சிறு சந்தேகம் இருந்ததாக சொல்லிக்கொண்டே இருந்தேன். அந்த நேரத்தில் ரஜினிகாந்த் சாரின் உந்துதலால், நாயகனுக்கும் நம்பிக்கை எனக்கு வந்தது. இந்த வித் லவ் படத்தின் ரிலீசிற்கு பிறகு ரஜினிகாந்த் சாரை சந்தித்தபோது, அவர், “ஹீரோ ஆகிட்டீங்க” என கூறினார்.

இதையும் படிங்க: இதுதான் வெற்றியா என்று அப்பாவிடம் கேட்டேன்… நெகிழ்ந்து பேசிய சௌந்தர்யா ரஜினிகாந்த்

அந்த தருணம் மிகவும் சிறப்பாக இருந்தது. மேலும் மகத்தான ஆதரவிற்கும் இவ்வளவு நல்ல விமர்சனங்களை வழங்கியதற்கும் பத்திரிகைகள் மற்றும் ஊடகங்களுக்கு மிக்க நன்றி. எனக்கும் அனஸ்வராவுக்கும் இடையிலான கெமிஸ்ட்ரியை பார்வையாளர்கள் மிகவும் ரசிக்கிறார்கள். இந்த ஒத்துழைப்பில் நான் உண்மையிலேயே மகிழ்ச்சியடைகிறேன்” என அதில் அவர் தெரிவித்திருந்தார்.

ரஜினிகாந்தை சந்தித்தது குறித்து அபிஷன் ஜீவிந்த் வெளியிட்ட எக்ஸ் பதிவு :

இந்த வித் லவ் படமானது கடந்த 2026 பிப்ரவரி 6ம் தேதியில் வெளியான நிலையில், 2வது வாரத்திற்கு முன்னேறியுள்ளது. வீக் என்டில் ஹவுஸ்புல் காட்சிகளுடன் இன்னும் இப்படம் வரவேற்பை பெற்றுவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படம் சுமார் ரூ 20 கோடி வசூலை நெருங்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

வழக்கமான நீரிழிவு பரிசோதனை தவறான முடிவுகளை தரலாம் - ஆய்வில் அதிர்ச்சி தகவல்
டெல்லியில் காரில் இறந்த நிலையில் கிடந்த 3 பேர் - பரபரப்பு தகவல்
வாட்ஸ்அப் வெப்பில் நேரடி வாய்ஸ், வீடியோ அழைப்புகள்.. புதிய வசதி அறிமுகம்
அமெரிக்க வெளியிட்ட வரைபடத்தில் இந்தியாவுடன் சேர்க்கப்பட்ட பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்