ஜீனி படத்தின் அப்தி அப்தி 18 மில்லியன் பார்வைகளைக் கடந்தது

ABDI ABDI Video Song | நடிகர் ரவி மோகன் நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ளப் படம் ஜீனி. இந்தப் படம் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் இந்தப் படத்தில் இருந்து வெளியான அப்தி அப்தி பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.

ஜீனி படத்தின் அப்தி அப்தி 18 மில்லியன் பார்வைகளைக் கடந்தது

அப்தி அப்தி பாடல்

Published: 

26 Oct 2025 20:10 PM

 IST

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் ரவி மோகன் (Actor Ravi Mohan). இவரது நடிப்பில் வெளியான படங்கள் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் நடிகர் ரவி மோகன் நடிப்பில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் காதலிக்க நேரமில்லை படம் வெளியானது. இந்தப் படம் டெஸ்டியூப் குழந்தைகளை மையமாக வைத்து வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் ரவி மோகன் தொடர்ந்து அடுத்தடுத்தப் படங்களில் நடித்து வருகிறார். அதன்படி நடிகர் ரவி மோகன் நடிப்பில் தற்போது கராத்தே பாபு, ஜீனி, ப்ரோ கோட் மற்றும் பராசக்தி ஆகிய படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

இதில் கராத்தே பாபு, ஜீனி, ப்ரோ கோட் ஆகிய படங்களில் நடிகர் ரவி மோகன் நாயகனாக நடித்து வரும் நிலையில் பராசக்தி படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து பராசக்தி படத்தில் நடித்து வருகிறார். இதில் இவர் வில்லனாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து அடுத்தடுத்தப் படங்களில் ரவி மோகன் பிசியாக நடித்து வரும் நிலையில் இவரது நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் ஜீனி.

18 மில்லியன் பார்வைகளைக் கடந்தது அப்தி அப்தி:

இயக்குநர் புவனேஷ் அர்ஜுனன் எழுதி இயக்கி உள்ள இந்தப் படம் ஃபேண்டசியை மையமாக வைத்து உருவாகியுள்ளது. இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பாக தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார். இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள நிலையில் படத்தில் இருந்து அப்தி அப்தி என்ற பாடல் வீடியோ கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. இந்தப் பாடல் தற்போது 18 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Also Read… கபாலி படத்தில் ரஜினிகாந்தை எப்படி அந்த வசனம் பேச வைக்கலாம்னு விமர்சனம் சொன்னாங்க – பா.ரஞ்சித்

ஜீனி படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… இணையத்தில் கவனம் பெறும் பைசன் காளமாடன் படத்தின் மேக்கிங் வீடியோ