Aamir Khan : கூலியில் நடிக்க சம்பளம் வாங்கவில்லை…வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆமிர் கான்!
Aamir Khan Coolie Movie : தமிழ் சினிமாவில் கடந்த 2025, ஆண்டு ஆகஸ்ட் 14 ஆம் தேதியில் வெளியான படம் கூலி. இப்படத்தில் பாலிவுட் நடிகர் ஆமிர்கான் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். இந்நிலையில், இப்படத்திற்காக அவர் ரூ 20 கோடி சம்பளம் வாங்கினார் எனக் கூறப்படும் நிலையில், அதற்கு விளக்கம் கொடுத்துள்ளார்.

ஆமிர் கான்
பான் இந்திய அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான படம் கூலி(Coolie). சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் (Rajinikanth) 171வது திரைப்படமாக இப்படம் வெளியாகியிருந்தது. இந்த கூலி படத்தைக் கோலிவுட் முன்னணி இயக்குநர் லோகேஷ் கனகராஜ் (Lokesh Kanagaraj) இயக்கியுள்ளார். இவரின் இயக்கத்தில் 6வது படமாக, கூலி வெளியாகியிருந்தது. சுமார் ரூ 355 கோடிகள் பொருட்செலவில் வெளியான இப்படத்தை, பிரபல தயாரிப்பு நிறுவனமான சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. மேலும் ராக்ஸ்டார் அனிருத் (Anirudh) இசையமைத்திருந்தார். இதில் பான் இந்தியப் பிரபலங்கள் பலரும் இணைந்த நடித்திருந்தனர். குறிப்பாக பாலிவுட் நடிகர் ஆமிர் கான் (Aamir Khan) இப்படத்தில் நடித்திருந்தார்.
கூலி படத்தில் தாஹா (Dahaa) என்ற வேடத்தில் அவர் நடித்திருந்தார். இந்நிலையில் நடிகர் ஆமிர் கான் கூலி படத்துக்காகச் சம்பளமே வாங்காமல் நடித்துள்ளாராம். இது தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க : 2026 ஆண்டு பொங்கல் ரேஸில் இணைகிறதா சூர்யாவின் கருப்பு திரைப்படம்?
கூலி படத்தில் நடித்தது குறித்து ஆமிர்கான் பேச்சு :
கூலி படத்திற்காக நடிகர் ஆமிர் கான் சுமார் ரூ 20 கோடிகளைச் சம்பளமாகப் பெற்றதாகக் கூறப்பட்ட நிலையில், அவர் அதை மறுத்துள்ளார். அவர், “கூலி படத்திற்காக நான் சம்பளம் எதுவும் வாங்கவில்லை. ரஜினிகாந்த் சார் மீது மிகுந்த மரியாதையையும் மற்றும் அன்பையும் வைத்திருக்கிறேன். அவருடன் படத்தில் நடித்ததே பெரிய கிஃப்ட்தான். அதனால் சம்பளத்தைப் பற்றி யோசிக்கக்கூட முடியவில்லை” என அவர் கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க : கூலி vs வார் 2.. வசூலில் முந்தியது யார்? – வெளியான அப்டேட்!
தற்போது இந்த தகவலானது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. மேலும் ஆமிர் கான் குறித்த சம்பள வதந்திகளுக்கு முற்றுப்புள்ளியாக இது அமைந்துள்ளது. பாலிவுட் சினிமாவில் உச்ச நடிகர் தமிழில் கூலி படத்திற்காக எந்தவித சம்பளமும் வாங்கலாமா நடித்திருக்கிறாரா எனத் தமிழ் ரசிகர்கள் ஆச்சரியத்தில் உள்ளனர்.
வெளிநாடு வசூல் குறித்து கூலி படக்குழு வெளியிட்ட பதிவு :
Ennaikum korayadha mavusu🔥💥 #Coolie becomes the first Tamil film to cross fastest M+ gross in Australia & New Zealand#Coolie ruling in theatres worldwide🌟@rajinikanth @Dir_Lokesh @anirudhofficial #AamirKhan @iamnagarjuna @nimmaupendra #SathyaRaj #SoubinShahir… pic.twitter.com/vQ4HDQqT6u
— Sun Pictures (@sunpictures) August 16, 2025
இந்தப் படம் இதுவரை ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்துபோன்ற நாடுகளில் சுமார் ரூ 1 மில்லியன் டாலர்கள் வரை வசூல் செய்துள்ளதாம். இந்த வசூலை இந்தியாவின் பணம் விகிதம்படி பார்த்தல் சுமார் ரூ 8.70 கோடிகள். இந்நிலையில், இந்த இரண்டு நாடுகளில் மட்டுமே இதுவரை சுமார் ரூ 8 கோடிகளுக்குமேல் இப்படமானது வசூல் செய்துள்ளது. மேலும் உலகளாவிய வசூலில் மொத்தமாக இதுவரை சுமார் ரூ 215 கோடிகளுக்கு மேல் வசூல் செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.