சித்தாரே ஜமீன் பர் படத்தில் முதலில் தமிழ் நடிகரைதான் நடிக்க வைக்க நினைத்தோம் – நடிகர் அமீர் கான் ஓபன் டாக்!

Sitaare Zameen Par: நடிகர் அமீர் கான் நடிப்பில் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றுவரும் படம் சித்தாரே ஜமீன் பர். இந்தப் படத்தில் முன்னதாக தமிழ் நடிகர் ஒருவரை நடிக்க வைக்க வேண்டும் என்று யோசித்ததாக நடிகர் அமீர் கான் தெரிவித்துள்ளார்.

சித்தாரே ஜமீன் பர் படத்தில் முதலில் தமிழ் நடிகரைதான் நடிக்க வைக்க நினைத்தோம் - நடிகர் அமீர் கான் ஓபன் டாக்!

சித்தாரே ஜமீன் பர்

Updated On: 

28 Jun 2025 19:02 PM

 IST

நடிகர் அமீர் கான் (Aamir Khan) நடிப்பில் கடந்த 20-ம் தேதி ஜூன் மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் சித்தாரே ஜமீன் பர் படம் படம். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்தியில் உருவான இதப் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியானது. இந்த நிலையில் நடிகர் அமீர் கான் சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்று இணையத்தில் கவனம் பெற்று வருகின்றது. அதில் முதலில் இந்தப் படத்தில் நாயகனாக நடிக்க வைக்க ஒரு தமிழ் நடிகரை யோசித்ததாகவும் பின்பு நானே இந்தப் படத்தில் நடித்தால் என்ன என்று யோசித்து நடித்துவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நடிகர் அமீர் கான் கொடுத்த வைரல் பேட்டி:

பாலிவுட்டின் சூப்பர் ஸ்டார் அமீர் கான் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியதாவது, லால் சிங் சத்தா படத்தின் தோல்விக்கு பிறகு நான் சிறிது காலம் நடிப்பதில் இருந்து விலகி இருக்க முடிவு செய்ததாகவும் தெரிவித்தார். அதனால் முதலில் சித்தாரே ஜமீன் பர் படத்தை தயாரிப்பது மட்டுமே நினைத்து வைந்த நிலையில் நாயகனாக நடிக்க வைக்க நடிகர் ஃபர்கான் அக்தர் அல்லது சிவகார்த்திகேயனை யோசித்ததாகவும் தெரிவித்தார்.

நடிகர் சிவகார்த்திகேயன் நாயகனாக நடிக்க ஒப்பந்தம் ஆனால் படத்தை தமிழ் மற்றும் இந்தி என இரண்டு மொழிகளிலும் ஒரே நேரத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டதாகவும் அமீர் கான் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் படத்தின் திரைக்கதை எழுதும் இறுதித் தருவாயில் இந்தப் படத்தில் நான் நடித்தால் என்ன என்று அமீர் கான் யோசித்ததாகவும் அதன் பிறகே அந்தப் படத்தில் அவர் நடித்ததாகவும் தெரிவித்துள்ளார்.

சித்தாரே ஜமீன் பர் படத்தின் கதை:

நடிகர் அமீர் கான் பாஸ்கெட் பால் கோட்ச்சாக இருக்கும் போது மது போதையில் வாகனத்தை வேகமாக ஓட்டியதற்காகவும் போலீசாரிடம் தகாரில் ஈடுபட்டதற்காகவும் கைது செய்யப்படுகிறார். பின்பு ஜாமினில் வரும் நடிகர் அமீர் கானிற்கு நீதிபதி தண்டனைக்கு பதிலாக ஒரு வேலை கொடுக்கிறார்

அங்கு மன வளர்ச்சி குன்றியவர்களுக்கு பாஸ்கெட் பால் கற்றுக்கொடுக்க வேண்டும் என்று 3 மாதங்கள் அந்தப் பணியை செய்ய வேண்டும் என்று உத்தரவிடுகிறார். அங்கு முதலில் வேண்டா வெறுப்பாக செல்லு  அமீர் கான் பின்பு அந்த குழந்தைகளுடன் உணர்வு ரீதியாக மிகவும் நெருக்கம் ஆகிறார்.

மன வலர்ச்சி குன்றிவர்கள் என்று சமூகத்தில் நாம் நினைப்பவர்கள் தான் உண்மையிலேயே மனிதம் நிறைந்தவர்களாக இருக்கிறார்கள் என்பதை இந்தப் படம் மிகவும் அழகாக காட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

சித்தாரே ஜமீன் பர் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Follow Us
Related Stories
Kayadu Lohar: ஐஆம் கேம் படம் முற்றிலும் வித்தியாசமானது.. நிச்சயம் அனைவர்க்கும் பிடிக்கும் – கயாடு லோஹர் பேச்சு!
Hi Movie: நயன்தாரா – கவின் நடிக்கும் ஹாய் பட ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் எப்போது? தமிழ் புத்தாண்டை முன்னிட்டு படக்குழு அறிவிப்பு!
அவன் குறுக்க மட்டும் போயிடாதீங்க சார் – 4 ஆண்டுகளை நிறைவு செய்தது கேஜிஎஃப் சாப்டர் 2 படம்
சரி என்று தெரியாமல் தவறு என்று புரியாமல் எதில் வந்து சேர்ந்தேன் நான் எதிர்பார்க்கவில்லை நான் – 19 ஆண்டுகளை நிறைவு செய்தது உன்னாலே உன்னாலே படம்
GV Prakash: ஜோ பட இயக்குநரின் புது படத்தில் இணைந்த ஜி.வி. பிரகாஷ்.. நடிகை யார் தெரியுமா?
புத்தாண்டை முன்னிட்டு குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட ஹரிஷ் கல்யாண்
வரலாறு படைத்துள்ளீர்கள் - ஆர்தமிஸ் விண்வெளி பயணக்குழுவை பாராட்டிய டிரம்ப்
ஹோர்முஸ் நீரிணை வழியாக செல்லும் கப்பல்களுக்கு கட்டணம் விதிக்கத் திட்டம்!!
நடுவானில் விமானத்தின் 2 எஞ்சின்களும் செயலிழப்பு.. துரிதமாக செயல்பட்டு 69 பேரை காப்பாற்றிய பைலட்!
நடிகை ஹன்சிகா தனது மைத்துனி மீது கொடுத்த புகார்