பிரபல பாலிவுட் நடிகர் அமீர் கானின் அடுத்தப் படத்தை இயக்கும் விஜய் பட இயக்குநர்!
Actor Aamir khan: பாலிவுட்டின் பிரபல நடிகர் அமீர் கான் நடிப்பில் தற்போது சித்தாரே ஜனீம் பர் படம் திரையரங்குகளில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்துள்ளது. இந்த நிலையில் நடிகர் அமீர் கான் அடுத்ததாக விஜய் படத்தின் இயக்குநர் உடன் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நடிகர் அமீர் கான்
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அமீர் கான் (Actor Aamir Khan). இவரது நடிப்பில் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான சித்தாரே ஜமீன் பர் படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் ரசிகரக்ளிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அடுத்ததாக இவரது படத்தை நடிகர் விஜய் படத்தை முன்னதாக இயக்கிய இயக்குநர் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது. அதன்படி நடிகர் விஜயின் நடிப்பில் கடந்த 2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் 11-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் வாரிசு. இதனை தெலுங்கு இயக்குநர் வம்ஷி பைடிபள்ளி இயக்கி இருந்தார். இந்தப் படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் ஒரே நேரத்தில் உருவான நிலையில் பான் இந்திய மொழிகளில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது.
இந்த நிலையில் இயக்குநர் வம்ஷி பைடிபள்ளி உடன் இணைந்து நடிகர் அமீர் கான் பணியாற்ற உள்ளதாக இணையத்தில் தகவல்கள் கசிந்து வைரலாகி வருகின்றது. அது மட்டும் இன்றி இந்தப் படத்தை வாரிசு படத்தை தயாரித்த தயாரிப்பாளர் தில் ராஜூ தான் தயாரிக்க உள்ளதாகவும் சினிமா வட்டாரங்களில் தகவல்கள் தெரிவிக்கின்றது.
அமீர் கான் நடிப்பில் தற்போது வெளியாகியுள்ள சித்தாரே ஜமீன் பர் படம் குறித்த பதிவு:
Player toh sirf on court, otherwise Lotus is a Loyal boyfriend. 🫶🏽#SitaareZameenPar Out Now, In Theatres Only.
🔗 – https://t.co/QwGwb4BoxC@geneliad @r_s_prasanna @DivyNidhiSharma @aparna1502 @AroushDatta #GopiKrishnanVarma #VedantSharmaa #NamanMisra #RishiShahani… pic.twitter.com/vUgrEEO9aZ
— Aamir Khan Productions (@AKPPL_Official) June 29, 2025
பாலிவுட்டின் சூப்பர் ஸ்டார் அமீர் கான்:
நடிகர் அமீர்கான் தமிழில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள கூலி படத்தில் கேமியோ ரோலில் நடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து ஒரு சூப்பர் ஹீரோ சப்ஜெக்ட்டில் நடிக்க இருப்பதாகவும் நடிகர் அமீர் கான் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்து இருந்தார். இதுகுறித்த அடுத்த அப்டேட்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
இந்த நிலையில் இயக்குநர் வம்ஷி பைடபள்ளி உடன் அமீர் கான் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அமீர் கான் அடுத்ததாக யார் இயக்கத்தில் நடிக்கிறார் என்பது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானால் மட்டுமே தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது.