கூலி படத்தில் அமீர் கானின் கேரெக்டர் பெயரை வெளியிட்ட படக்குழு… வைரலாகும் போட்டோ

Aamir Khan: பாலிவுட் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் அமீர் கான். இவர் தற்போது தமிழ் சினிமாவில் நடிகர் ரஜினிகாந்தின் கூலி படத்தின் மூலம் எண்ட்ரி கொடுத்துள்ளார். இவரது கதாப்பாத்திர அறிமுக போஸ்டரைப் படக்குழு தற்போது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

கூலி படத்தில் அமீர் கானின் கேரெக்டர் பெயரை வெளியிட்ட படக்குழு... வைரலாகும் போட்டோ

அமீர் கான்

Published: 

03 Jul 2025 19:16 PM

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் (Lokesh Kanagaraj) இயக்கத்தில் நடிகர் சூப்பர் ஸ்டார் நாயகனாக நடித்துள்ள படம் கூலி. இந்தப் படம் வருகின்ற ஆக்ஸ்ட் மாதம் 14-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இயக்குநர் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் வெளியான முந்தைய படங்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்ததால் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள இந்த கூலி படமும் சூப்பர் டூப்பர் ஹிட் அடிக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். கூலி படத்தின் அறிவிப்பு வெளியானதில் இருந்தே படம் தொடர்பான அப்டேட்களை படக்குழு தொடர்ந்து வெளியிட்டு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகின்றது. இந்த நிலையில் படம் வெளியாக இன்னும் ஒன்னறை மாதம் மட்டுமே உள்ள நிலையில் படத்தில் இருந்து இறுதி கதாப்பாத்திரம் குறித்த அறிவிப்பை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.

அதன்படி படத்தில் பாலிவுட் நடிகர் அமீர் கான் கேமியோ ரோலில் நடித்துள்ள அமீர் கானின் கதாப்பாத்திர பெயரைப் படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி அமீர் கான் இந்தப் படத்தில் தாஹா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. இது தற்போது ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றது.

அமீர் கானின் கதாப்பாத்திரத்தை அறிமுகம் செய்த கூலி படக்குழு:


இந்தப் படத்தில் நடிகர் ரஜினிகாந்த் உடன் இணைந்து கோலிவுட் சினிமாவில் இருந்து நடிகர்கள் ஸ்ருதி ஹாசன் மற்றும் சத்யராஜ் இருவரும் நடித்துள்ள நிலையில் பான் இந்திய நட்சத்திரங்களான நடிகர்கள் சௌபின் ஷாகிர், நாகர்ஜுனா, உபேந்திர ராவ் என பலர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

மேலும் இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் தயாரித்து நிலையில் படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் ரவிசந்திரன் இசையமைத்துள்ளார். முன்னதாக இந்தப் படத்தில் இருந்து சிக்கிடு வைப் என்ற பாடல் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேறபைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

மேலும் அந்தப் பாடலில் பிரபல நடிகரும் இயக்குநருமான டி.ராஜேந்திரன் கேமியோ செய்திருப்பது ரசிகர்களுக்கு சர்ப்ரைஸாக அமைந்தது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து படத்தின் இசை வெளியீட்டு விழா வருகின்ற ஜூலை மாதம் 27-ம் தேதி 2025-ம் ஆண்டு நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெறும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.