பராசக்தி இசை வெளியீட்டு விழா குறித்த வதந்தி… தயாரிப்பாளர் வைத்த முற்றுப்புள்ளி
Parasakthi Movie Audio Launch: தமிழ் சினிமாவில் ரசிகர்கள் அதிக எதிர்பார்த்து காத்திருக்கும் படம் பராசக்தி. இந்தப் படம் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் படம் தொடர்பான முக்கிய அப்டேட்டை தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.

பராசக்தி
தமிழ் சினிமாவில் வருகின்ற 2026-ம் ஆண்டின் தொடக்கத்திலேயே பல முன்னணி நடிகர்கலின் படங்கள் திரையரங்குகளில் வெளியாக வரிசைக்கட்டிக் காத்திருக்கின்றது. அந்த வகையில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள பராசக்தி படமும் ஜனவரி மாதம் 2026-ம் ஆண்டு 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகிறது. மேலும் இந்த பராசக்தி படத்தை இயக்குநர் சுதா கொங்கரா எழுதி இயக்கி உள்ள நிலையில் நடிகை ஸ்ரீ லீலா நாயகியாக நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் இணைந்து நடிகர்கள் அதர்வா முரளி, ரவி மோகன், பேசில் ஜோசஃப், ராணா டகுபதி என பலர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
இவரது இசையில் இதுவரை 3 பாடல்கள் பராசக்தி படத்தில் இருந்து வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. இந்த நிலையில் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். மேலும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமல் ஹாசன் கலந்துகொள்வதாக வெளியாக தகவல்கள் குறித்து விளக்கம் அளித்துள்ளார் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன்.
பராசக்தி இசை வெளியீட்டு விழா குறித்த வதந்திக்கு முற்றுப்புள்ளி:
‘பராசக்தி’ படத்தில் சில கௌரவத் தோற்றங்கள் உள்ளன. அந்த காட்சிகள் மிகவும் சிறப்பாக இருக்கும். இசை வெளியீட்டு விழாவிற்கு துணை முதல்வர் மற்றும் ரஜினி சார் போன்றோர் சிறப்பு விருந்தினர்களாக வருவார்கள் என்று வதந்திகள் பரவி வருகின்றன. அது எல்லாமே வெறும் வதந்திதான். நாங்கள் இசை வெளியீட்டு விழாவை ஜனவரி 3 ஆம் தேதி நடத்த திட்டமிட்டுள்ளோம் என்று ஆகாஷ் பாஸ்கரன் பேட்டியில் தெரிவித்துள்ளார்.
Also Read… 2026ல் வெளியாகவிருக்கும் தென்னிந்திய பிக் பட்ஜெட் படங்கள் என்னென்ன தெரியுமா?
இணையத்தில் கவனம் பெறும் எக்ஸ் தள பதிவு:
Producer #AakashBaskaran in a recent interview:
‣There are some cameos in #Parasakthi 📽️Those scenes will be highly elevated 📈
‣There are rumours about chief guests for the audio launch, like the Deputy CM and Rajini sir. All of that is just rumour. We have planned the audio… pic.twitter.com/fp8fpmvrfm
— Sugumar Srinivasan (@Sugumar_Tweetz) December 29, 2025