இணையத்தை கலக்கும் அல்லு அர்ஜூன் – லோகேஷ் கனகராஜ் படத்தின் அறிவிப்பு வீடியோ… படக்குழு வெளியிட்ட பதிவு

AA 23 Announcement Video | தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். இவரது இயக்கத்தில் அடுத்ததாக உருவாக உள்ள படம் AA 23. இந்தப் படத்தின் அறிவிப்பு வீடியோ அதிக பார்வைகளைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இணையத்தை கலக்கும் அல்லு அர்ஜூன் - லோகேஷ் கனகராஜ் படத்தின் அறிவிப்பு வீடியோ... படக்குழு வெளியிட்ட பதிவு

அல்லு அர்ஜூன் - லோகேஷ் கனகராஜ்

Updated On: 

18 Feb 2026 14:03 PM

 IST

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். இவரது இயக்கத்தில் தமிழ் சினிமாவில் வெளியான படங்கள் அனைத்தும் ரசிகர்களிடையே சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. தொடர்ந்து வெட்டுக் குத்து, துப்பாக்கிகள் என வன்முறைகள் நிறைந்த படங்களாகவே இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி இருந்தாலும் இவரது இயக்கத்தில் வெளியான படங்கள் அனைத்தும் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது. தான் இயக்கும் படங்களில் தான் ரத்தம் தெறிக்கவிடுகிறார் என்றால் அவர் நாயகனாக நடிக்கும் படமும் ரத்தம் தெறிக்க தெறிக்கதான் இருக்கிறது. ஆம் லோகேஷ் கனகராஜ் தற்போது தமிழ் சினிமாவில் டிசி என்ற படத்தின் மூலமாக நாயகனாக அறிமுகம் ஆக உள்ளார். இந்தப் படத்தை இயக்குநர் அருண் மாதேஸ்வரன் எழுதி இயக்கி வருகிறார்.

தமிழ் சினிமாவில் பிரபல தயாரிப்பு நிறுவனமாக உள்ள சன் பிக்சர்ஸ் சார்பாக தயாரிப்பாளர் கலாநிதி மாறன் இந்தப் படத்தை தயாரித்து வருகிறார். தொடர்ந்து இந்த டிசி படம் தொடர்பான அப்டேட்கள் வெளியாகி மக்களிடையே வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் கடந்த காதலர் தினத்தை முன்னிட்டு படக்குழு வெளியிட்ட வீடியோ ரசிகர்களை உறைய வைத்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்தப் படத்தை தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெலுங்கு சினிமாவில் பிரபலமாக உள்ள நடிகர் அல்லு அர்ஜுனை இயக்க உள்ளார்.

இணையத்தை கலக்கும் அல்லு அர்ஜூன் – லோகேஷ் பட அறிவிப்பு வீடியோ:

அதன்படி அல்லு அர்ஜுன் நடிப்பில் அடுத்ததாக உருவாக உள்ள 23-வது படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளார். இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்க உள்ள நிலையில் படத்தின் அறிவிப்பு வீடியோவை கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியிட்டனர். அந்த வீடியோ ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இது தொடர்பான அப்டேட்டை படக்குழு தற்போது தங்களது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read… Seyon Movie: சிவகார்த்திகேயனின் சேயோன் ரிலீஸ் தேதி எப்போது இருக்கும்? பொங்கலில் விட்டதை இப்படத்தின் மூலம் பிடிப்பாரா?

AA 23 படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… ஜோஜூ ஜார்ஜ் நடிப்பில் மலையாள சினிமாவில் ஹிட் அடித்த பணி படத்தின் 2-ம் பாகம் எப்போது தொடங்குகிறது? அப்டேட் இதோ

மிதிலாவின் 700 ஆண்டுகால ‘பஞ்சி’ திருமண மரபு: மங்கும் பாரம்பரியம், நிலைக்கும் அறிவியல்
வெளி கிரக வாழ்வினங்கள் உண்மையா?” – பாரக் ஒபாமாவின் கருத்தும் தீவிரமான விஞ்ஞான தேடலும்
சாண்டா க்ரூஸில் படகு விபத்தில் 6 பேரை காப்பாற்றிய சர்ஃபர்களின் வீர செயல்..
கலிபோர்னியாவில் இந்திய மாணவர் சகேத் ஸ்ரீனிவாசையா மரணம்.. நடந்தது என்ன?