கமல் ஹாசன் – ரஜினிகாந்த் படத்தை நான் இயக்காததற்கு இதுதான் காரணம்… வைரலாகும் லோகேஷ் கனகராஜ்
Lokesh Kanagaraj talks about Rajinikanth Kamal Haasan Movie: கோலிவுட் சினிமாவில் தற்போது ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கும் நிலையில் லோகேஷ் கனகராஜ் முன்னதாக பேசியபோது ரஜினிகாந்த் மற்றும் கமல் ஹாசன் படங்களை ஏன் இயக்கவில்லை என்று பேசியது வைரலாகி வருகின்றது.

லோகேஷ் கனகராஜ்
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வருகிறார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். இவரது இயக்கத்தில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் இறுதியாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தமிழ் சினிமாவில் வெளியான படம் கூலி. நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்தப் படத்தில் நாயகனாக நடித்து இருந்தார். ஆக்ஷன் த்ரில்லர் பாணியில் வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தை தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நாயகனாக நடிக்கும் படத்தின் பணிகளில் பிசியானார். டிசி என்று பெயர் வைக்கப்பட்டுள்ள அந்தப் படத்தின் மூலமாக சினிமாவில் கதையின் நாயகனாக லோகேஷ் கனகராஜ் அறிமுகம் ஆகியுள்ளார். இயக்குநர் அருண் மாதேஸ்வரன் எழுதி இயக்கி வரும் அந்தப் படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது.
இந்தப் படத்தை தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெலுங்கு சினிமாவில் பிரபலமாக இருக்கும் நடிகர் அல்லு அர்ஜுனை வைத்து படம் இயக்க உள்ளார். அல்லு அர்ஜுன் தற்போது அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் நடித்து வருவதால் அந்தப் படத்தை தொடர்ந்து 23-வது படத்திற்காக லோகேஷ் கனகராஜ் உடன் கூட்டணி வைத்துள்ளார். இது தொடர்பான அப்டேட்களும் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தது. இந்த நிலையில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் முன்னதாக ரஜினி கமல் படம் குறித்து பேசியது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
கமல் ஹாசன் – ரஜினிகாந்த் படத்தை நான் இயக்காததற்கு இதுதான் காரணம்:
தமிழ் சினிமாவில் ரசிகர்கள் அனைவரும் தற்போது ரஜினிகாந்த் மற்றும் கமல் ஹாசன் இருவரும் இணைந்து நடிக்க உள்ள படம் குறித்து வெளியான அறிவிப்பால் மகிழ்ச்சியாக உள்ளனர். இந்தப் படத்தை இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்க உள்ள நிலையில் அனிருத் இசையமைக்கிறார். முன்னதாக இந்தப் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குவதாக இருந்தது. அது தொடர்பாக லோகேஷ் முன்பு பேட்டி ஒன்றில் பேசியது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
கூலி படத்தின் வெளியீட்டின் போது, கமல்ஹாசன் சார் மற்றும் ரஜினிகாந்த் சார் இருவரையும் வைத்து ஒரு படம் செய்யச் சொன்னார்கள். நான் ஒரு மாதம் முழு மனதுடன் ஸ்கிரிப்ட்டில் உழைத்து, கமல் சார் மற்றும் ரஜினி சாரிடம் தனித்தனியாகப் கதையை கூறினேன். அவர்கள் இருவருக்கும் கதை மிகவும் பிடித்து இருந்தது. ஆனால் தொடர்ந்து ஆக்ஷன் படங்களில் நடிப்பதால் லைட் ஹார்டட் படமா கேட்டாங்க. ஆனா அந்த மாதிரி படம் எனக்கு வராது என்பதால் அவர்களின் படத்தை இயக்கவில்லை என்று தெரிவித்து இருந்தார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Also Read… ஜேசன் சஞ்சயின் சிக்மா படத்தில் ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ் – வைரலாகும் தகவல்
இணையத்தில் வைரலாகும் லோகேஷ் கனகராஜ் பேச்சு:
#Throwback: #LokeshKanagaraj
– During the release of #Coolie, #KamalHaasan sir and #Rajinikanth sir asked me to do a film with both of them.
– I sincerely worked on the script for one month and narrated it separately to Kamal sir and Rajini sir.#KHxRKpic.twitter.com/7nh3Zl9eqF— Movie Tamil (@_MovieTamil) February 22, 2026
Also Read… மீண்டும் இணையும் பிரதீப் ரங்கநாதன் – அஷ்வத் மாரிமுத்து கூட்டணி – டிராகன் 2 படம் உறுதி!