மீண்டும் இணைகிறது குட் பேட் அக்லி கூட்டணி… வைரலாகிறது ஏகே 64 படத்தின் சூப்பர் அப்டேட்!
Ajith Kumar 64 Movie Update: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித் குமார். இவரது நடிப்பில் அடுத்ததாக உருவாக உள்ள படம் அஜித் குமார் 64. இந்தப் படம் குறித்த முக்கிய அப்டேட் சினிமா வட்டாரங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

அஜித் குமார்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித் குமார். இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது. மேலும் நடிகர் அஜித் குமார் நடிப்பில் கடந்த 2025-ம் ஆண்டில் மட்டும் அடுத்தடுத்து இரண்டு படங்கள் திரையரங்குகளில் வெளியானது. அதன்படி முதல் படம் விடாமுயற்சி மற்றும் இரண்டாவது படம் குட் பேட் அக்லி ஆகும். இந்த இரண்டு படங்களும் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து நடிகர் அஜித் குமார் படங்களில் நடிப்பது மட்டும் இன்றி அவரது ரேஸிங் பணியிலும் கவனம் செலுத்தி வருகிறார். இந்த நிலையில் நடிகர் அஜித் குமார் நடிப்பில் அடுத்ததாக் உருவாக உள்ள 64-வது படம் குறித்த அப்டேட் தொடர்ந்து வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
அதன்படி இந்த அஜித் குமாரின் 64-வது படத்தை அவரது குட் பேட் அக்லி படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரனே இயக்க உள்ளார் என்று அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டது. மேலும் இந்தப் படத்தை முன்னதாக பிரபல தயாரிப்பு நிறுவனமான ரோமியோ பிக்சர்ஸ் சார்பாக தயாரிப்பாளர் ராகுல் இந்தப் படத்தை தயாரிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. பின்பு அவர் இந்தப் படத்தை தயாரிப்பதில் இருந்து விலகுவதாக தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் படம் குறித்த புதிய தகவல் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
வைரலாகிறது ஏகே 64 படத்தின் சூப்பர் அப்டேட்:
அதன்படி ‘தி குட் பேட் அக்லி’ கூட்டணி மீண்டும் இணைகிறது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் அஜித் குமாரின் 64-வது படத்தை தயாரிப்பதற்காக தற்போது முதற்கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. அஜித்குமாருக்கு ரூபாய் 183 கோடி சம்பளம் வழங்கவும், தங்கள் நிறுவனத்தின் பெரிய பட்ஜெட் படங்களில் ஒன்றாக இதை நிலைநிறுத்தும் நோக்கில், படத்தை பிரம்மாண்டமான அளவில் தயாரிக்கவும் அவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர் என்றும் சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது.
Also Read… நடிகர் சித்தார்த் நடிப்பில் வெளியானது ரவுடி & கோ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
As Per VP,
— #AjithKumar’s next film will be directed by #AdhikRavichandran. The shooting of the film is set to begin on February 23.
— This will be Ajith’s 64th film, and it is being produced by a major production house.#AK64 pic.twitter.com/iJnCfN4ZSV— Movie Tamil (@_MovieTamil) January 27, 2026