அல்லு அர்ஜூன் வீட்டு திருமண விழாவில் பேசில் ஜோசஃப்… அப்போ கூட்டணி கன்ஃபார்மா?

Basil Joseph attending the wedding of actor Allu Arjun's younger brother Allu Sirish: மலையாள சினிமாவில் இயக்குநர் நாயகான் மற்றும் தயாரிப்பாளர் என பன்முகத்தன்மை கொண்டவராக வலம் வருகிறார் பேசில் ஜோசஃப். இவர் சமீபத்தில் அல்லு அர்ஜூன் வீட்டு திருமணத்தில் பங்கேற்றுள்ளார்.

அல்லு அர்ஜூன் வீட்டு திருமண விழாவில் பேசில் ஜோசஃப்... அப்போ கூட்டணி கன்ஃபார்மா?

அல்லு சிரிஷ் திருமணத்தில் அல்லு அர்ஜுன் உடன் பேசில் ஜோசஃப்.

Published: 

03 Mar 2026 17:24 PM

 IST

மலையாள சினிமாவில் பிரபல இயக்குநர், நடிகராக வலம் வருபவர் வினித் ஸ்ரீநிவாசன். இவரிடம் உதவி இயக்குநராக பணியாற்றுவதன் மூலம் தனது சினிமா வழ்க்கையை தொடங்கினார் பேசில் ஜோசஃப். அப்போது படங்களில் சின்ன சின்ன வேடங்களிலும் நடித்து வந்தார் பேசில் ஜோசஃப். அதனைத் தொடர்ந்து கடந்த 2015-ம் ஆண்டு மலையாள சினிமாவில் வெளியான குஞ்சிராமாயணம் என்ற படத்தின் மூலமாக இயக்குநராக அறிமுகம் ஆனார். முழுக்க முழுக்க காமெடியை மையமாக வைத்து வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து கடந்த 2017-ம் ஆண்டு நடிகர் டொவினோ தாமஸ் நடிப்பில் கோதா என்ற இரண்டாவது படத்தை இயக்கினார். இந்தப் படமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து மூன்றாவதாக கடந்த 2021-ம் ஆண்டு மின்னல் முரளி படத்தை இயக்கினார்.

ஃபேண்டசி காமெடி பாணியில் சூப்பர் ஹீரோ கதையை மையமாக வைத்து மலையாள சினிமாவில் வெளியான இந்த மின்னல் முரளி படம் உலக அளவில் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும் உலகில் பல நாடுகளில் இந்தப் படத்தின் மூலம் பேசில் ஜோசஃப் கொண்டாடப்பட்டார். தொடர்ந்து இயக்குநராக மூன்று படங்களை மட்டும் இயக்கி இருந்தாலும் பலப் படங்களில் நடித்து வந்தார். இவர் இயக்கும் படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றது போல நடிக்கும் படங்களும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

அல்லு அர்ஜூன் வீட்டு திருமண விழாவில் பேசில் ஜோசஃப்:

இந்த நிலையில் பேசில் ஜோசஃப் அடுத்ததாக நடிகர் அல்லு அர்ஜுனை வைத்து படம் இயக்க உள்ளதாக தகவல்கள் சினிமா வட்டாரங்களில் பரவி வந்தது. ஆனார் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அப்டேட் எதுவும் வெளியாகாமல் இருந்தது. இந்த நிலையில் சமீபத்தில் அல்லு அர்ஜுன் வீட்டு திருமண விழாவில் பேசில் ஜோசஃப் கலந்துகொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இதன் காரணமாக அல்லு அர்ஜூன் மற்றும் பேசில் ஜோசஃப் கூட்டணி நிச்சயமாக  நடைபெறும் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Also Read… டாக்ஸிக் படத்திலிருந்து வெளியானது தபாஹி சிங்கிள் வீடியோ!

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… மஞ்சுமல் பாய்ஸ் இயக்குநர் சிதம்பரம் மீது பாலியல் துன்புறுத்தல் வழக்கு

Follow Us
எங்கள் விமானம் தாக்கப்படும் அபாயம் - பாகிஸ்தான் சென்ற ஈரான் குழுவினர் அச்சம்
போரைப் போல மோதிக்கொள்ளும் சிம்பான்சிகள் - காரணம் என்ன?
UPI-ல் ரூ.10,000-க்கு மேல் பணம் அனுப்ப ஒரு மணி நேரம் காத்திருக்க வேண்டுமா?.. ஆர்பிஐ வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
சீனா தயாரித்த செயற்கைக்கோள் மூலம் கண்காணிப்பு? எழுந்த புதிய பாதுகாப்பு கவலை..