கூலி படத்திலிருந்து வெளியான அமீர் கானின் போஸ்டரால் ஏற்பட்ட சர்ச்சை!

Coolie Movie Aamir Khan Poster: நடிகர் ரஜினிகாந்த் நடிப்பி அடுத்ததாக திரையரங்கை தெறிக்கவிட காத்திருக்கும் படம் கூலி. இந்தப் படத்தில் பாலிவுட் நடிகர் அமீர் கான் நடித்து உள்ளதாக வதந்திகள் பரவி வந்த நிலையில் ஒரு பேட்டியில் அவரே அதை ஒப்புக்கொண்டார். அதனைத் தொடர்ந்து தற்போது கூலி படத்தில் அமீர் கானின் கேரக்டர் போஸ்டரை வெளியிட்டது படக்குழு.

கூலி படத்திலிருந்து வெளியான அமீர் கானின் போஸ்டரால் ஏற்பட்ட சர்ச்சை!

அமீர் கானின் போஸ்டர்

Published: 

05 Jul 2025 17:45 PM

நடிகர் ரஜினிகாந்தின் (Actor Rajinikanth) நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் கூலி. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் (Director Lokesh Kanagaraj) இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் வருகின்ற ஆகஸ்ட் மாதம் 14-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கின்றது. இந்த நிலையில் இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியானதில் இருந்தே படத்தில் நடிக்கும் நடிகர்களின் கதாப்பாத்திர போஸ்டர்களை படக்குழு தொடர்ந்து வெளியிட்டது. இது படத்தின் மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரிக்க உதவியது என்றே சொல்லலாம். அந்த வகையில் இந்தப் படத்தில் நடிகர் அமீர் கான் நடிக்க உள்ளதாக தகவல்கள் பரவி வந்தது. ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என்று கேள்விகள் எழுந்துவந்த நிலையில் அமீர் கான் பேட்டி ஒன்றில் கூலி படத்தில் தான் நடிப்பது குறித்து வெளிப்படையாக பேசினார்.

இந்த நிலையில் படம் குறித்து தொடர்ந்து பலப் பேட்டிகளில் நடிகர் அமீர் கான் பேசி வந்தார். மேலும் தனது கதாப்பாத்திரம் படத்தில் எப்படி இருக்கும் என்பது குறித்தும் அவர் பேசியது ரசிகர்களிடையே கவனத்தைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து கூலி படத்தில் நடிகர் அமீர் கானின் கதாப்பாத்திர போஸ்டரைப் படக்குழு கடந்த 3-ம் தேதி ஜூன் மாதம் 2025-ம் ஆண்டு வெளியிட்டது.

சர்ச்சையை கிளப்பிய அமீர் கானின் கூலி பட போஸ்டர்:

இந்த நிலையில் ஒன் லாஸ்ட் கேரக்டர் ரிவீல் என்று நடிகர் அமீர் கானின் கதாப்பாத்திர போஸ்டரை கூலி படக்குழு வெளியிட்டு இருந்தது. அதில், அமீர் கானின் பெயர் கூலி படத்தில் தாஹா என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. மேலும் படத்தை ஐ மேக்ஸ் திரையரங்குகளிலும் பார்க்கலாம் என்று அந்தப் போஸ்டரில் தெரிவிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஐ மேக்ஸில் கூலி படத்தை வெளியிடுவது குறித்து எந்தவித இறுதி முடிவும் எட்டப்படவில்லை என்றும், கூலி படக்குழுவிற்கும் மற்றும் ஐ மேக்ஸ் இடையே பேச்சுவார்த்தை இன்னும் இறுதியாகவில்லை என்றும் சினிமா வட்டாரங்களில் தெரிவிக்கின்றனர். இறுதி முடிவு எட்டாத நிலையில் இந்த அறிவிப்பு தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கூலி படத்தில் அமீர் கானின் போஸ்டரை வெளியிட்ட படக்குழுவின் எக்ஸ் தள பதிவு: