நடிகர் தனுஷ் நடிப்பில் பார்க்க பார்க்க சலிக்காத படங்கள் ஒரு லிஸ்ட்!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். பான் இந்திய நட்சத்திரமாக வலம் வரும் இவர் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இந்த நிலையில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான சிறந்த படங்களின் தொகுப்பை தற்போது பார்க்கலாம்.

நடிகர் தனுஷ்
காதல் கொண்டேன்: நடிகர் தனுஷ் (Actor Dhanush) நடிப்பில் கடந்த ஜூலை மாதம் 4-ம் தேதி 2003-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் காதல் கொண்டேன். இந்தப் படத்தை நடிகர் தனுஷின் அண்ணன் இயக்குநர் செல்வராகவன் (Selvaraghavan) தான் எழுதி இயக்கி இருந்தார். இந்தப் படத்தில் நடிகர் தனுஷ் உடன் இணைந்து நடிகர்கள் சோனியா அகர்வால், சுதீப், நாகேஷ், டேனியல் பாலாஜி, ஸ்ரீகாந்த், ஹேமலதா, கௌதமி வேம்புநாதன் என பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்து இருந்தார். இந்த காதல் கொண்டேன் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதே போல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையில் இந்தப் படத்தில் வெளியான அனைத்துப் பாடல்களும் தற்போதும் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
காதல் கொண்டேன் படத்தின் பாடல்:
பொல்லாதவன்: நடிகர் தனுஷ் நடிப்பில் கடந்த நவம்பர் மாதம் 8-ம் தேதி 2007-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் பொல்லாதவன். இயக்குநர் வெற்றிமாறன் இந்தப் படத்தை எழுதி இயக்கி இருந்தார். மேலும் இந்தப் படத்தின் மூலமாகதான் இயக்குநர் வெற்றிமாறன் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் நடிகர் தனுஷ் உடன் இணைந்து நடிகர்கள் ரம்யா, டேனியல் பாலாஜி, கிஷோர், முரளி, பானுப்ரியா, சந்தானம், கருணாஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து இருந்தனர். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்து இருந்தார். படம் வெளியான போது ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
பொல்லாதவன் படத்தின் பாடல்:
வேலையில்லா பட்டதாரி: நடிகர் தனுஷ் நடிப்பில் கடந்த 18-ம் தேதி ஜூலை மாதம் 2014-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் வேலையில்லா பட்டதாரி. இந்தப் படத்தை இயக்குநர் வேல்ராஜ் எழுதி இயக்கி இருந்தார். மேலும் இந்தப் படத்தில் நடிகர் தனுஷ் உடன் இணைந்து நடிகர்கள் அமலா பால், விவேக், சரண்யா பொன்வண்ணன், சமுத்திரக்கனி மற்றும் சுரபி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த வேலையில்லா பட்டதாரி படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து இருந்த நிலையில் படம் திரையரங்குகளில் வெளியான போது சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது.
Also Read… இந்திய சினிமாவின் லக்கி நாயகன் துல்கர் சல்மானுக்கு ஹேப்பி பர்த்டே
வேலையில்லா பட்டதாரி படத்தின் ட்ரெய்லர்:
Also Read… லெவன் பட நடிகர் நவீன் சந்திராவின் புதுப் படம் குறித்த அறிவிப்பு – வைரலாகும் இன்ஸ்டா பதிவு