மஞ்சுமல் பாய்ஸ் இயக்குநர் சிதம்பரம் மீது பாலியல் துன்புறுத்தல் வழக்கு

A harassment case has been filed against Director Chidambaram: மலையாள சினிமாவில் பிரபல இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் சிதம்பரம். இவர் மீது நடிகை ஒருவர் பாலியல் துன்புறுத்தல் புகார் அளித்துள்ள நிலையில் அவர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

மஞ்சுமல் பாய்ஸ் இயக்குநர் சிதம்பரம் மீது பாலியல் துன்புறுத்தல் வழக்கு

இயக்குநர் சிதம்பரம்

Published: 

02 Mar 2026 15:07 PM

 IST

மலையாள சினிமாவில் பிரபல இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் சிதம்பரம் (Director Chidambaram). இவரது இயக்கத்தில் மலையாள சினிமாவில் வெளியான படங்கள் தொடர்ந்து மலையாள சினிமா ரசிகர்களிடையே மட்டும் இன்றி தென்னிந்திய சினிமா ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. அதன்படி கடந்த 2021-ம் ஆண்டு வெளியான ஜான்.இ.மேன் என்ற படத்தின் மூலமாக இயக்குநராக அறிமுகம் ஆனார். இவர் இயக்குநராக அறிமுகமான முதல் படமே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து இயக்குநர் சிதம்பரம் எழுதி இயக்கிய படம் மஞ்சும்மல் பாய்ஸ். கடந்த 2024-ம் ஆண்டு திரையரன்ஹ்குகளில்வ வெளியான இந்தப் படம் மலையாள சினிமா ரசிகர்களிடையே மட்டும் இன்றி தென்னிந்திய சினிமா ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. அதிலும் குறிப்பாக தமிழ் சினிமா ரசிகர்களிடையே இந்தப் படம் மாபெரும் வரவெற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தை தொடர்ந்து இயக்குநர் சிதம்பரம் தற்போது இயக்கி உள்ள படம் பாலன். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் உட்பட பல அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வந்தது. தொடர்ந்து இயக்குநர் சிதம்பரம் படங்கள் தொடர்பான செய்திகளில் இடம் பிடித்து வந்த நிலையில் தற்போது பாலியல் தொல்லை வழக்கின் மூலமாக செய்தியில் இடம் பிடித்துள்ளது.

Also Read… இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்தது ஜோஷ்வா இமை போல் காக்க படம் – வீடியோ வெளியிட்டு கொண்டாடும் படக்குழு

இயக்குநர் சிதம்பரம் மீது பாலியல் துன்புறுத்தல் வழக்கு:

இந்த நிலையில் இயக்குநர் சிதம்பரம் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக ஒரு பெண் நடிகை அளித்த புகாரின் அடிப்படையில் கேரளாவின் எர்ணாகுளம் டவுன் தெற்கு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 2022 ஆம் ஆண்டு கேரள மாநிலம் கொச்சியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் இயக்குனர் சிதம்பரம் தன்னிடம் பாலியல் ரீதியாக தவறாக நடந்து கொண்டதாக அந்த நடிகை குற்றம் சாட்டியுள்ளார். இந்த குற்றச்சாட்டு தொடர்பாக இயக்குநர் சிதம்பரம் தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் இந்த வழக்கு தொடர்பான அடுத்தக்கட்ட விசாரணை விரைவில் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read… இணையத்தில் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்க்கும் அன்பே டயானா படத்தின் டைட்டில் டீசர்

Follow Us
இஸ்ரேலில் முதன்முறையாக F-22 போர் விமானங்களை களமிறக்கிய அமெரிக்கா
பயணிகள் விமான டிக்கெட்டை ரத்து செய்தால் அபராதம் கிடையாது - டிஜிசிஏ அறிவிப்பு
சாலை விபத்துகளை குறைக்க புதிய ஓட்டுநர் உரிமம் - நிதின் கட்கரி அறிவிப்பு
பழைய ரூபாய் நோட்டுகளை கண்டுபிடித்த பெண் - வைரலாகும் வீடியோ