ஓடிடி சப்ஸ்கிரிப்ஷன் இல்லனா பரவாயில்லை… யூடியூபில் இந்த 8 A.M. மெட்ரோ படத்தை மிஸ் செய்யாதீர்கள்!

8 A.M. Metro Movie: பான் இந்திய மொழிகளில் உருவாகும் படங்கள் அனைத்தும் அனைத்து மொழிகளிலும் வெளியாகவில்லை என்றாலும் ஓடிடியில் வெளியாகும் போது மற்ற மொழி மக்களிடையே வரவேற்பைப் பெற்று வருகின்றது. இப்படி ஓடிடி சப்ஸ்கிரிப்ஷன் இல்லாதவர்கள் யூடியூப் அல்லது தொலைக்காட்சிகளிலேயே படத்தைப் பார்க்கிறார்கள்.

ஓடிடி சப்ஸ்கிரிப்ஷன் இல்லனா பரவாயில்லை... யூடியூபில் இந்த 8 A.M. மெட்ரோ படத்தை மிஸ் செய்யாதீர்கள்!

8 A.M. மெட்ரோ

Published: 

19 Jan 2026 22:36 PM

 IST

இந்தி சினிமாவில் முன்னணி நடிகர்களின் நடிப்பில் வெளியாகும் பெரும்பாலான படங்கள்தான் தென்னிந்திய சினிமா ரசிகர்களிடையே கவனத்தைப் பெறும். ஆனால் அதே நேரத்தில் சின்னச் சின்னப் படங்கள் பெரும்பாலும் கவனத்தைப் பெற தவறியதில்லை. அதன்படி இந்தி சினிமாவில் சிறப்பான கதையை மையமாக வைத்து வெளியான 8 A.M. மெட்ரோ படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படம் தெலுங்கு மொழியில் பிரபல எழுத்தாளர் மல்லாடி வெங்கடகிருஷ்ண மூர்த்தியின் எழுத்தில் வெளியான அந்தமினா ஜீவிதம் என்ற நாவலைத் தழுவி எடுக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தி மொழியில் இந்தப் படம் உருவாகி இருந்தாலும் ஓடிடி வெளியீட்டிற்கு பிறகு பான் இந்திய மொழிகளில் உள்ள சினிமா ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

மேலும் இந்தப் படத்தில் நடிகர்கள் குல்ஷன் தேவையா, சயாமி கெர், கல்பிகா கணேஷ், உமேஷ் காமத், ராஜீவ் குமார் அனேஜா, சந்தீப் பரத்வாஜ், மொயின் ஜான், ஜெய் ஜா, நிமிஷா நாயர், தீர் சரண் ஸ்ரீவஸ்தவ், மது சுவாமிநாத் என பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். மேலும் இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான ஸ்டூடியோ 99 சார்பாக தயாரிப்பாளர்கள் ராஜ் ரச்சகொண்டா மற்றும் கிஷோர் கஞ்சி ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் மார்க் கே. ராபின் இசையமைத்து இருந்த நிலையில் படத்தைப் போல பாடல்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

8 A.M. மெட்ரோ படத்தின் கதை என்ன?

இந்தத் திரைப்படம், மஹாராஸ்ட்ரா மாநிலத்தில் உள்ள நாந்தேடில் வாழ்ந்து வரும் 29 வயதை கொண்ட ஒரு இல்லத்தரசியில் வாழ்க்கையை சுற்றி நடப்பது போல காட்டப்பட்டுள்ளது. இல்லத்தரசியான இராவதி தனது கணவர் மற்றும் குழந்தைகளை கவனித்துக்கொண்டு ஹவுஸ் ஒய்ஃபாக இருக்கிறார். தினமும் அவர்களை பார்த்துக்கொள்வதை மட்டுமே வாழ்க்கையாக வைத்து இருக்கும் அவர் அதனை வெறுக்கவும் செய்கிறார்.

நன்கு எழுதும் பழக்கம் உடைய இராவதிக்கு உறுதுனையாக யாரும் இல்லை என்ற ஏக்கமும் இருக்கிறது. இப்படி இருக்கும் சூழலில் கர்ப்பமாக இருக்கும் தனது தங்கை மருத்துவமனையில் அனுமதிக்கபப்பட்டு இருப்பதை அறிந்து அவரைப் பார்த்துக்கொள்வதற்காக ஹைதராபாத்திற்கு செல்கிறார். அங்கு தனியாக மெட்ரோவில் செல்லவேண்டிய சூழல் உள்ளது. சிறு வயதில் இவர் ரயிலில் தொலைந்து பிறகு தந்தையிடம் சேர்ந்தவர். இதனாலேயே இவருக்கு ரயில் பயணம் பயத்தைக் கொடுக்கும்.

Also Read… Divya Ganesh: பிக் பாஸ் சீசன் 9 தமிழ் நிகழ்ச்சியின் டைட்டிலை தட்டிச்சென்ற திவ்யா கணேஷ்.. ஹேப்பியில் ரசிகர்கள்!

இப்படி இருக்கும் சூழலில் அவருக்கு அந்த மெட்ரோவில் ஏறுவதற்கு ப்ரீத்தம் என்ற நபர் உதவி செய்கிறார். வங்கி ஊழியரான அவர் இராவதியின் பயத்தைப் புரிந்துகொண்டு உதவிகிறார். அடுத்தடுத்த நாட்களில் இருவரும் ஒரே நேரத்தில் மெட்ரோவில் பயணிக்கும் சூழல் ஏற்படுகின்றது. அப்போது இருவரும் நெறுக்கமாக பழகுகின்றனர். இதன் பிறகு ப்ரீத்தமின் வாழ்க்கை குறித்து அறிந்த இராவதி அதிர்ச்சியடைகிறார். அவர்களின் நட்பும் தொடராமலே போகிறது. அவரது வாழ்க்கையில் என்ன நடந்தது என்பதே படத்தின் கதை. இந்தப் படம் ஜீ 5 ஓடிடியில் வெளியாகி இருந்தாலும் யூடியூபிலும் காணக் கிடைக்கின்றது.

Also Read… Theri Re-Release: தெறி படத்தின் ரீ-ரிலீஸ் தேதியை ஒத்திவைத்த தயாரிப்பாளர்.. கடும் கோபத்தில் ரசிகர்கள்!

ஆதார் அட்டைதாரர்களே.. இந்தத் தவறுகள் உங்கள் வங்கிக் கணக்கை காலி செய்துவிடும்.. அரசு எச்சரிக்கை!!
ரூ.1 லட்சத்தில் மின்சார ஜீப்…100 கி.மீட்டர் பயணம்..பீகார் இளைஞரின் புதுமை!
"பாட்டி.. மொத்த சமோசாவும் காலி".. ராணுவ வீரர்களின் செயலால் நெகிழ்ந்த நெட்டிசன்கள்!!
‘கழுத்தை அறுத்த சீன மாஞ்சா கயிறு’.. உயிர்தப்பிய மதபோதகர்..