118-ஐ தொடாத தவெக.. விஜய் ஆட்சி அமைப்பதில் நீடிக்கும் சிக்கல்.. அடுத்தக்கட்ட நகர்வு என்ன?

Tvk Leader Vijay: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யை எதற்காக தமிழக பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அழைக்கவில்லை என்ற பரபரப்பு காரணங்கள் வெளியாகி உள்ளது. இதன் காரணமாகவே பெரும்பான்மையை நிரூபிப்பதற்கு 2 நாள்கள் அவகாசம் வழங்கி உள்ளார்.

118-ஐ தொடாத தவெக.. விஜய் ஆட்சி அமைப்பதில் நீடிக்கும் சிக்கல்.. அடுத்தக்கட்ட நகர்வு என்ன?

விஜய்யை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக்காதது ஏன்

Published: 

07 May 2026 07:02 AM

 IST

தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றி கழகம் 1.50 கோடிக்கு மேலான வாக்குகளை பெற்று 108 சட்டமன்ற தொகுதிகளில் வெற்றியை பதிவு செய்தது. ஆட்சி அமைப்பதற்கு தேவையான 118 இடங்கள் இல்லாத காரணத்தால் பிற கட்சிகளுடன் தமிழக வெற்றி கழகம் தொடர்ந்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. இதில், காங்கிரஸ் கட்சி தனது 5 எம்எல்ஏக்களுடன் ஆதரவு தெரிவித்துள்ளது. இதன் மூலம், தமிழக வெற்றிக் கழகத்துக்கு 113 எம்எல்ஏக்கள் ஆதரவு கிடைத்துள்ளது. மேலும், 5 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவைப்படுகிறது. அதில், ஒரு எம்எல்ஏ சட்டப்பேரவை தலைவராக நியமனம் செய்யப்படும்போது, அவரால் தவெக பெரும்பான்மையை நிரூபிக்கும் போது வாக்களிக்க முடியாது. இதன் காரணமாக, கூடுதலாக ஒரு எம்எல்ஏ ஆதரவு தேவைப்படும் நிலை உள்ளது. அதன்படி, தமிழக வெற்றி கழகத்திற்கு மொத்தம் 6 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை உள்ளது.

ஆளுநரிடம் எம்எல்ஏக்கள் ஆதரவு கடிதத்தை வழங்கிய விஜய்

இந்த நிலையில், தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் நேற்று புதன்கிழமை ( மே 7) தமிழக பொறுப்பு ஆளுநர் விஸ்வநாத் ராஜேந்திர அர்லேகரை நேரில் சந்தித்தார். அப்போது, ஆட்சி அமைப்பதற்கு அழைப்பு விடுக்க கோரி தமிழக வெற்றிக் கழக எம்எல்ஏக்கள் மற்றும் காங்கிரஸ் ஆதரவு எம்எல்ஏக்கள் என மொத்தம் 113 எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதத்தை ஆளுநரிடம் விஜய் வழங்கினார். அதனை ஆளுநர் அர்லேகர் பெற்றுக் கொண்டார். இருந்தாலும், விஜய்யை ஆட்சி அமைப்பதற்கு ஆளுநர் அழைக்கவில்லை.

மேலும் படிக்க: தொடங்கிய திமுக – அதிமுக பேச்சுவார்த்தை – கூட்டணி ஆட்சியா? பரபரப்பு தகவல்

விஜய்யை ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்காதது ஏன்

அதன்படி, தமிழக வெற்றிக் கழகம் பெரும்பான்மையை நிரூபிப்பதற்கு 2 நாட்கள் ஆளுநர் அவகாசம் அளித்துள்ளார். தற்போது, எதற்காக தவெக தலைவர் விஜயை ஆளுநர் பதவி ஏற்பதற்கு அழைப்பு விடுக்க வில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. அதில், தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளார். இந்த இரு தொகுதிகளில் ஏதேனும் ஒரு தொகுதியில் எம்எல்ஏ பதவியை விஜய் ராஜினாமா செய்ய வேண்டும். அப்படி என்றால் தமிழக வெற்றிக் கழகத்தில் தற்போது உள்ள 108 எம்எல்ஏக்களில், ஒரு இடம் குறைந்து 107 எம்எல்ஏக்கள் ஆக இருக்கும்.

பெரும்பான்மையே நிரூபிக்க முடியாத நிலை

காங்கிரஸ் ஆதரவு எம்எல்ஏக்கள் 5 பேர், விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ் கட்சிகளின் தலா 2 எம்எல்ஏக்கள் ஆதரவு என 118- ஆக இருக்கும். இதில், ஒரு எம்எல்ஏ சபாநாயகர் ஆக நியமனம் செய்யப்படும்போது, ஆதரவு எம்எல்ஏக்கள் 117- ஆகக் குறையும். இதனால் விஜய் பெரும்பான்மையே நிரூபிக்க முடியாத நிலை ஏற்படும். இதனால், தவெக ஆட்சி அமைப்பதில் சிக்கல் நீடித்து வருகிறது. இதன் காரணமாகவே ஆட்சி அமைப்பதற்கு தேவையான எம்எல்ஏக்கள் ஆதரவுடன் மீண்டும் வருமாறு ஆளுநர் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க: பெரும்பான்மையை நிரூபிக்க தவெகவுக்கு அவகசாம் வழங்கிய ஆளுநர் – எப்போ வரை தெரியுமா?

Follow Us
Related Stories
தமிழகத்தில் புதிய ஆட்சி அமையாத நிலை.. டிஜிபிக்கு பறந்த உத்தரவு.. மத்திய உளவுத்துறை அதிரடி எச்சரிக்கை!
திமுக வலுவான எதிர்க்கட்சியாக செயல்படும்.. தவெக அரசு அமைக்க முட்டுக்கட்டை போடும் அதிமுக பாஜக – எம்.பி கலாநிதி வீராசாமி..
அதிமுக தலைமை உத்தரவு.. புதுச்சேரியில் முகாமிட்டுள்ள கட்சி எம்எல்ஏக்கள்!
தமிழக வெற்றிக்கழகம் ஆட்சி அமைக்கட்டும்.. 6 மாதங்கள் இடையூறு செய்யாமல் பார்ப்போம் – மு.க ஸ்டாலின்..
தவெக தலைவர் விஜய்க்கு முதல்வர் அந்தஸ்து பாதுகாப்பு ரத்து? கான்வாய் வாகனங்கள் வாபஸ்.. என்ன காரணம்!
60 ஆண்டுகளுக்கு பிறகு தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்? விஜய்யின் முடிவு என்ன?
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனைவிக்காக பைக்கையே ஆம்புலன்ஸாக மாற்றிய கணவர் - நெகிழ்ச்சி சம்பவம்
560 நாட்களாக செல்போன் டவர் மீது ஏறி போராட்டம் நடத்திய விவசாயி
ஹிமாச்சல் பிரதேசத்தின் மலைப்பகுதிகளை பாதுகாக்கும் உள்ளூர் தெய்வம்..
காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படும் நாடுகளில் இந்தியா 9வது இடம்..