AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தொகுதி என்றால் என்ன?.. அவை எப்படி பிரிக்கப்படுகிறது?

What Is Constituency, How Its Created | இந்தியாவை பொருத்தவரை தொகுதிகளின் அடிப்படையில் தேர்தல்கள் நடத்தப்படுகின்றன. இந்த நிலையில், தொகுதிகள் என்றால் என்ன, அவை எப்படி பிரிக்கப்படுகின்றன, அந்த தொகுதிகளில் எவ்வாறு தேர்தல்கள் நடத்தப்படுகின்றன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

தொகுதி என்றால் என்ன?.. அவை எப்படி பிரிக்கப்படுகிறது?
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 22 Mar 2026 01:13 AM IST

இந்தியாவில் (India) பல வகையான தேர்தல்கள் நடைபெறுகின்றன. அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு வித்தியாசமான முறையில் நடத்தப்படுகின்றன. தேர்தல் வந்துவிட்டால் பொதுமக்கள் அதிகம் கேட்கும் வார்த்தைகள் வேட்பாளர்கள், தொகுதி (Constituency) ஆகியவை தான். இதில் தொகுதி என்றால் என்ன, அவை எப்படி பிரிக்கப்படுகிறது என்பது குறித்து பலருக்கு பல விதமான சந்தேகங்கள் உள்ளன. இந்த நிலையில், தொகுதி என்றால் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

தொகுதி என்றால் என்ன?

இந்தியா பல்வேறு மாநிலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அந்த மாநிலங்களும் பல மாவட்டங்களாகவுன், அந்த மாவட்டங்கள் வட்டங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு ஒரு மாநிலத்திற்குள்ளாகவே பல பிரிவுகள் உள்ளன. இந்த நிலையில், ஒரு மாநிலத்தில் உள்ள அனைத்து மக்களும் பயனடைய வேண்டும் என்றும், அவர்களுக்கான தனி மக்கள் பிரதிநிதி வேண்டும் என்பதற்காகவும் இந்த தொகுதிகள் பிரிக்கப்படுகின்றன.

இதையும் படிங்க : தேர்தல் பிரச்சாரத்தில் சிறுவர்களை பயன்படுத்திய தவெக? – தேர்தல் அதிகாரிகள் வழக்குப்பதிவு

தொகுதிகள் எவ்வாறு பிரிக்கப்படுகின்றன?

ஒரு மாவட்டத்தில் எவ்வளவு மக்கள் இருக்கின்றனோ அதற்கு ஏற்ப தொகுதிகள் பிரிக்கப்படுகின்றன. உதாரணமாக ஒரு மாவட்டத்தில் குறைந்த அளவிலான மக்கள் இருந்தால் அங்கு குறைந்த அளவிலான தொகுதிகள் இருக்கும். இதுவே அதிக அளவிலான மக்கள் இருந்தால் அதிக தொகுதிகள் இருக்கும். அனைத்து மக்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கும் வகையில், அந்த அந்த பகுதிகளுக்கு ஏற்ப தொகுதிகள் பிரிக்கப்பட்டு அதற்கான தலைவர்களை தேர்வு செய்யும் பணிகள் மேற்கொள்ளப்படும்.

இதையும் படிங்க : புதுச்சேரியில் தவெக தனித்துப் போட்டி.. நாளை வேட்பாளர் பட்டியலை வெளியிடுகிறார் விஜய்

தமிழகத்தில் உள்ள சட்டமன்ற, நாடாளுமன்ற தொகுதிகள்

தமிழகத்தை (Tamil Nadu) பொருத்தவரை தொகுதிகள் இரண்டு வகையாக பிரிக்கப்பட்டுள்ளன. அதாவது சட்டமன்ற தொகுதிகள் (Assembly Constituency) மற்றும் நாடாளுமன்ற தொகுதிகள் (Parliament Constituency). சட்டமன்ற உறுப்பினர்களை தேர்வு செய்யும் வகையில் சட்டமன்ற தொகுதிகளும், நாடாளுமன்ற உறுப்பினர்களை தேர்வு செய்யும் வகையில், நாடாளுமன்ற தொகுதிகளும் பிரிக்கப்பட்டு அதற்கு ஏற்ப சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தல்கள் நடத்தப்படுகின்றன.

தமிழகத்தில் உள்ள 38 மாவட்டம் மொத்தம் 234 சட்டமன்ற தொகுதிகளாகவும், 39 நாடாளுமன்ற தொகுதிகளாகவும் பிரிக்கப்பட்டுள்ளன. இந்த தொகுதிகளின் அடிப்படையில் தான் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தல்கள் நடைபெறுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us