2026 சட்டமன்றத் தேர்தல் அதிர்வுகள்.. தவெகவின் அதீத எழுச்சி.. பின்னடைவைச் சந்தித்தது திமுகவா.. அதிமுகவா?..

Tamilnadu Assembly Election Result 2026: அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்களின் பட்டியலில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முதலிடம் பிடித்துள்ளார். அவர் எடப்பாடி தொகுதியில் 98,110 வாக்குகள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளார். இப்பட்டியலில் அடுத்த ஐந்து இடங்களைத் தவெக வேட்பாளர்கள் கைப்பற்றிப் சாதனை படைத்துள்ளனர்.

2026 சட்டமன்றத் தேர்தல் அதிர்வுகள்.. தவெகவின் அதீத எழுச்சி.. பின்னடைவைச் சந்தித்தது திமுகவா.. அதிமுகவா?..

மு.க.ஸ்டாலின், இபிஎஸ், விஜய்

Updated On: 

06 May 2026 07:28 AM

 IST

தமிழக அரசியலில் புதிய வரவாகக் களம் கண்ட தமிழக வெற்றிக் கழகம், தனது முதல் தேர்தலிலேயே மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்துள்ளது. பாரம்பரியத் திராவிடக் கட்சிகளான திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளின் வாக்கு வங்கிகளிலும் இக்கட்சி பெரும் சரிவை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் அதிக இடங்களை பெற்ற தனிப்பெரும் கட்சியாக தவெக உருவெடுத்தது. அதோடு, முதல் முறையாக திராவிட கட்சிகளுக்கு மாற்றாக, போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே தவெக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்து இருக்கிறது. பெரும்பான்மைக்கு 118 இடங்கள் தேவை என்ற நிலையில், தவெக-விற்கு இன்னும் 10 இடங்கள் மட்டுமே தேவைப்படுகின்றன. இருந்தாலும் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள விஜய் ஆட்சியை அமைக்க ஆளுநரிடம் உரிமை கோருவார் என்று தெரிகிறது.

மேலும் படிக்க: வறுத்தம் தெரிவித்து குறுஞ்செய்தி அனுப்புகிறீர்கள்.. நீங்கள் இருக்க கவலை என்ன? மு.க ஸ்டாலின் உருக்கமான பதிவு..

வாக்கு சதவீதப் புள்ளிவிவரங்கள்:

இந்தத் தேர்தலில் தவெக 108 இடங்களைக் கைப்பற்றி, சுமார் 34.92% வாக்குகளைப் பெற்று முதலிடத்தைப் பிடித்துள்ளது. தொடர்ந்து, 59 இடங்களை கைப்பற்றிய திமுக 24.19 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது. அதேசமயம், மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்ட அதிமுக 21.21 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது. கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலோடு ஒப்பிடுகையில், ஆளுங்கட்சியான திமுக மற்றும் எதிர்க்கட்சியான அதிமுக ஆகிய இரண்டுமே பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளன. குறிப்பாக, அதிமுகவை விட திமுக அதிக இழப்பைச் சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

திமுகவுக்கே அதிக இழப்பு:

கடந்த சட்டமன்றத் தேர்தலில் 37.7 சதவீத வாக்குகளைப் பெற்றிருந்த திமுக, தற்போது 24.19 சதவீத வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளது. இது சுமார் 13.51 சதவீத சரிவாகும். வாக்கு எண்ணிக்கையின் அடிப்படையில் சுமார் 55 லட்சம் வாக்குகளை அக்கட்சி இழந்துள்ளது. கடந்த தேர்தலில் 33.29 சதவீத வாக்குகளைப் பெற்றிருந்த அதிமுக, தற்போது 21.21% வாக்குகளைப் பெற்றுள்ளது. இது 12.08 சதவீத சரிவாகும். சுமார் 49 லட்சம் வாக்குகளை அக்கட்சி இழந்துள்ளது. திமுகவின் கோட்டைகளாகக் கருதப்பட்ட தொகுதிகளில் தவெக ஏற்படுத்திய தாக்கமே, அதிமுகவை விட திமுக சந்தித்த 1.43% கூடுதல் சரிவுக்கு முதன்மைக் காரணமாகப் பார்க்கப்படுகிறது.

வெற்றி வேட்பாளர்கள் விவரம்:

அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்களின் பட்டியலில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முதலிடம் பிடித்துள்ளார். அவர் எடப்பாடி தொகுதியில் 98,110 வாக்குகள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளார். இப்பட்டியலில் அடுத்த ஐந்து இடங்களைத் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர்கள் கைப்பற்றிப் சாதனை படைத்துள்ளனர். குறிப்பாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தவெக மிக அதிக வாக்கு வித்தியாசங்களைப் பதிவு செய்துள்ளது.

பெரும் வாக்கு வித்தியாசம்:

அந்தவகையில், எடப்பாடி தொகுதியில், அதிமுக பொதுச்செயாலளர் எடப்பாடி பழனிசாமி 98,110 வாக்குகள் வித்தியாசம். இ.சி.ஆர். சரவணன் (தவெக – சோழிங்கநல்லூர்): 96,780 வாக்குகள் வித்தியாசம், எம்.எல். விஜயபிரபு (தவெக – மாதவரம்): 94,985 வாக்குகள் வித்தியாசம், ஆர். ரமேஷ் குமார் (தவெக – ஆவடி): 76,311 வாக்குகள் வித்தியாசம், லட்சுமணன் (தவெக – சேலம் மேற்கு): 74,867 வாக்குகள் வித்தியாசம், பிரகாசம் (தவெக – பூந்தமல்லி): 72,740 வாக்குகள் வித்தியாசம்.

மேலும் படிக்க: விஜய் அமைச்சரவையில் யார்.. யார்.. இடம் பெறுவார்? தவெக பதவியேற்பு விழா எப்போது!

தமிழக அரசியலில் இந்தத் தேர்தல் முடிவுகள் ஒரு மிகப்பெரிய மாற்றத்திற்கான அடையாளமாகப் பார்க்கப்படுகின்றன. பாரம்பரியக் கட்சிகளின் வாக்கு வங்கியைப் புதிய கட்சி ஒன்று கணிசமாகப் பிரித்திருப்பது வருங்கால அரசியல் களத்தை உன்னிப்பாகக் கவனிக்க வைத்துள்ளது.

Follow Us
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனைவிக்காக பைக்கையே ஆம்புலன்ஸாக மாற்றிய கணவர் - நெகிழ்ச்சி சம்பவம்
560 நாட்களாக செல்போன் டவர் மீது ஏறி போராட்டம் நடத்திய விவசாயி
ஹிமாச்சல் பிரதேசத்தின் மலைப்பகுதிகளை பாதுகாக்கும் உள்ளூர் தெய்வம்..
காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படும் நாடுகளில் இந்தியா 9வது இடம்..