Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

த.வெ.க மதுரை மாநாடு.. அவசர மருத்துவ சேவைக்காக ட்ரோன் ஏற்பாடு..

TVK Madurai Conference: தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு வரும் ஆகஸ்ட் 17, 2025 அன்று நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் முதல் முறையாக மருத்துவ தேவைக்காக ஏதேனும் பொருட்கள் தேவைப்பட்டால் உடனடியாக கொண்டு செல்வதற்காக ட்ரோன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

த.வெ.க மதுரை மாநாடு.. அவசர மருத்துவ சேவைக்காக ட்ரோன் ஏற்பாடு..
த.வெ.க மாநாட்டில் ட்ரோன் பயன்பாடு
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 17 Aug 2025 18:45 PM

மதுரை, ஆகஸ்ட் 17, 2025: தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு வருகின்ற 2025 ஆகஸ்ட் 21ஆம் தேதி மதுரை பாரப்பத்தியில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டிற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் மும்மரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கிட்டத்தட்ட 80 சதவீத பணிகள் நிறைவு பெற்ற நிலையில் இந்த மாநாட்டில் முதல் முறையாக மருத்துவ உதவிக்காக 500 மருத்துவர்கள் பணியமர்த்தப்பட உள்ளதாகவும் மருத்துவ தேவைக்காக ஏதேனும் பொருட்கள் தேவைப்பட்டால் உடனடியாக கொண்டு செல்வதற்காக ட்ரோன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழக வெற்றிக்கழகம் தொடங்கப்பட்டு தற்போது வரை அக்கட்சியின் தலைவர் விஜய் மக்கள் பிரச்சனைக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கக் கூடிய நிலையில் அதனை சந்திக்க தமிழக வெற்றி கழகம் தரப்பில் பணிகள் மும்மரமாக மேற்கொள்ளப்பட்ட வருகிறது.

நெருங்கும் சட்டமன்ற தேர்தல்:

தமிழகத்தை பொறுத்தவரையில் நான்கு முனை போட்டி அதாவது அதிமுக, திமுக, நாம் தமிழர் கட்சி, மற்றும் தமிழக வெற்றி கழகம் என நான்கு முனை போட்டி நிலவுகிறது. தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாடு என்பது விக்கிரவாண்டியில் வி.சாலையில் நடைபெற்றது. முதலில் இந்த மாநாடு மதுரையில் நடைபெற இருந்தது. ஆனால் அதற்கான அனுமதி வழங்கப்படாத நிலையில் விக்கிரவாண்டியில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து கட்சியின் இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் நடைபெற உள்ளது.

மேலும் படிக்க: ’மலிவான அரசியல் செய்கிறார்’ ஆளுநரை காட்டமாக விமர்சித்த முதல்வர் ஸ்டாலின்!

மருத்துவ தேவைக்காக ட்ரோன் ஏற்பாடு:


தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநில மாநாட்டில் சுமார் ஒன்றரை லட்சம் பேர் அமர்ந்து காணும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. அதிகப்படியான மக்கள் கூடுவார்கள் என்பதை கருத்தில் கொண்டு சுமார் 500 மருத்துவர்கள் தயார் நிலையில் இருப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: அன்புமணிக்கு எதிராக குற்றச்சாட்டு.. நடவடிக்கை எடுக்க ஒழுங்கு நடவடிக்கை குழு பரிந்துரை..

அதேபோல் கூட்டத்தில் யாருக்கேனும் மருத்துவத் தேவை அவசரமாக தேவைப்பட்டால் அதற்கான பொருட்களை எடுத்துச் செல்வதற்காக பிரத்தியங்கமாக ட்ரோன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 25 கிலோ எடை உள்ள பொருட்களை கொண்டு செல்லும் வகையில் பெரிய ட்ரோன் பயன்படுத்தப்பட உள்ளது. அதற்கான பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு வந்தது.

25 கிலோ எடை கொண்ட பொருட்களை ட்ரோன் மூலம் எடுத்தச் செல்ல முடியும்:

தமிழக வெற்றிக்காக மாநாடு திடலில் உடல் நலக் கோளாறு அல்லது காயம் ஏற்படுபவர்களுக்கு அங்கு ஏற்படும் கூட்டு நெரிசலில் உடனடியாக மருத்துவ பொருட்களை கொண்டு செல்ல முடியாது என்பதன் காரணமாக இந்த ட்ரோன் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ட்ரோன் மூலம் மருத்துவ உபகரணங்கள், மருத்துவப் பொருட்கள், தண்ணீர் பாட்டில்கள் கொண்டு செல்வதற்கும் பயன்படுத்தப்படுகிறது. மேலும் 25 கிலோ எடை கொண்ட பொருட்கள் கொண்டு செல்வதற்கும் இந்த ட்ரோன் பயன்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ட்ரோன் மூலம் பொருட்கள் சுமார் 25 கிலோமீட்டர் தூரம் வரை கொண்டு செல்ல முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.